வீட்டிலிருந்தபடி பொழுதை பயனுள்ளதாக்குவது எப்படி?

மனித வாழ்வில் மிகவும் மோசமான ஒன்று தனிமை. இன்று பல பெண்கள் தனிமையை கழிக்க தெரியாமல், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். டிவி ரிமோட்டை கையில் வச்சு அமுக்கிட்டே சலிச்சு போகுது நமக்கு. அதை சற்று மாற்றலாமா ?

Jul 27, 2023 - 14:30
Jul 27, 2023 - 14:29
 0  51
வீட்டிலிருந்தபடி பொழுதை பயனுள்ளதாக்குவது எப்படி?


                                 நமக்கு பிடித்த மாதிரி நம் வாழ்வை அமைத்துக்கொள்வது நம் கையில் தான் உள்ளது. டிவி பார்ப்பதையும் தாண்டி எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. இதில் எது உங்களுக்கு சிறந்தது என்று பாருங்கள்,பழகுங்கள்... ஏதேனும் ஒரு சுவாரசியமான புத்தகத்தை எடுத்து படிங்க:

டெக்னாலஜி எவ்ளோ வளந்தாலும், மறுக்க முடியாத வாக்கியம்


புத்தகம் ஒரு சிறந்த நண்பன் “

            ஆக வீட்டிற்கு அருகாமையில் உள்ள நூலகத்தில் உங்கள் பெயரை பதிந்து உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். அங்கிருந்து நேரத்தை செலவிடாமல். பிடித்த நூலை எடுத்து வாருங்கள். நேரம் கிடைக்கும் போது வாசிக்க செலவிடுங்கள், புத்தகம் எப்போதும் கையில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் அறிவு திறனை வளர்ப்பதோடு, மனதை இளமையாக வைத்துக்கொண்டு இருக்க உதவும். கிண்டில், ஈ புக்னு போகாம, கையில் புத்தகம் வைத்துக்கொண்டு படியுங்கள்.

பிடித்ததை சமைத்து சாப்பிடவும் :
குடும்பம் மொத்தத்துக்கும் சமைக்கும் நாம், நம்முடைய விருப்பமான உணவை சாப்பிட கூட மறந்து விட்டோம். ஆகையால், நேரம் கிடைக்கும் போது, பிடித்த சமையலை நீங்களே ஈடுபாடோடு வீட்டிலே செய்து பாருங்கள்.

மேற்கொண்டு படிங்க :
கற்க வயதில்லை என்பது போல, கல்விக்கு எல்லை இல்லை. இன்று பல ஆன்லைன் கோர்ஸ் இருக்கிறது. நேரம் கிடைத்தால் வீணடிக்காமல் புதிய புதிய கோர்ஸ்ல சேர்ந்து படிங்க. இது, வெறும் பொழுது போக்கு மட்டும் அல்லாமல், உங்கள் தகுதியும் திறமையும் மேம்பட உதவும்.

பொழுபோக்கை அர்த்தமுள்ளதாக மாற்றுவது ஹாபி..
ஸ்டாம்ப் சேகரிப்பது, உலக நாடுகளின் பணம் சேகரிப்பது, பின்னல்,தையல் ,தோட்ட கலை, போன்றவையில் நம் மனதிற்கு பிடித்ததை தேர்வு செய்து மன திருப்தி அடையலாம்.


தியானம் - ஒரு தெளிவுக்காக :
தியானம், யோகா போன்றவை செய்யும் பழக்கத்தை வளர்ந்து, நேரம் கிடைக்கும் போது அதில் நம்மை ஈடு படுத்தி கொள்ளுங்கள். இதன் மூலம் உடல், மன வலிமை பெற்று, நல்ல எண்ணங்கள், சிந்தனை என்று வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவும். தன்னம்பிக்கை, மன அமைதியும் கிடைக்கும்.

சுத்தம் செய்யுங்கள் :
நேரம் கிடைத்தால் உங்கள் அறையை சுத்தம் செய்யுங்கள், நறுமணம் தவழ வையுங்கள். அதுமட்டும் அல்லாது, உங்கள் அலமாரியில் இருக்கும் துணிகளை அழகாக அடுக்கி வையுங்கள்.பொழுதுபோவதும் அல்லாமல், வீடு சுத்தமாவதோடு வீட்டை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow