பட்டையைக் கிளப்பும் ‘த்ரெட்ஸ்’ ஆப்! இப்பவே இவ்வளவு பேர் வந்தாச்சு.. பயன்படுத்துவது எப்படி தெரியுமா?
சமூக வலைதளமான ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் என்ற புதிய சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள த்ரெட்ஸில் பயனர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலமாகவே சைன் அப் செய்து கொள்ளலாம். த்ரெட்ஸ் ஆப்பை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.
ட்விட்டர் சமூக வலைதளத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ப்ளூ டிக் பெற சந்தா, ட்வீட்களை பார்ப்பதற்கு வரம்பு ஆகிய மாற்றங்களால் அதிருப்தி அடைந்துள்ள ட்விட்டர் யூசர்களை கவரும் நோக்கில் 'த்ரட்ஸ்' சமூக வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா.
த்ரெட்ஸ் செயலி: இந்தியா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் த்ரெட்ஸ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. த்ரெட்ஸ் சமூக வலைதளம் வெளியான 4 மணி நேரங்களிலேயே, 5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதாக மார்க் ஸுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






