ரோட்டரி மற்றும் மரச்செக்கு என்ன வித்தியாசம்?;மரச்செக்கு எண்ணெய் தொழில் செய்யலாம் வாங்க;கடந்த 60-70 ஆண்டுகளாக மக்களை வாட்டிவதைக்கும் இந்த ரீஃபைண்ட் ஆயில்.. இதற்கு நல்ல தீர்வுதான் என்ன?;மரச்செக்கு எண்ணெய்;
வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு' என்பது பழமொழி. அந்நாள்களில் எண்ணெய் என்பது உடலுக்கு ஒரு மருந்தாக இருந்ததற்காகச் சொல்லப்பட்ட பழமொழிதான் இது. கண்ட எண்ணெய்களைப் பயன்படுத்தி, நோய்வாய்ப்பட்டு மருத்துவருக்குக் காசு செலவழிப்பதைவிட, வணிகருக்குக் கொடுத்துவிடலாம் என்பது இதன் அர்த்தம். முன்னர், கடலை, எள், தேங்காய், ஆமணக்கு போன்ற பயிர்களைப் பயிரிட்டு வீட்டு உபயோகத்திற்குப் போக மீதமிருப்பதை மரச்செக்குகளில் ஆட்டி செக்கு எண்ணெய்யாக விற்பனை செய்வார்கள் அல்லது வீட்டு உபயோகங்களுக்கு வைத்துக்கொள்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை மரச்செக்கு வழக்கில் இருந்தது. அப்போது மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி செக்கில் அரைத்து எண்ணெய்யாக நேரடியாக மாற்றிக் கொள்வர். நவீன எண்ணெய் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் வந்த பின்னர், செக்குகள் பக்கம் மக்கள் செல்வதை குறைத்துக் கொண்டனர். அதன் விளைவு, மரச்செக்குகள் குறைந்து இன்று செக்குகளைக் காண்பதே அரிதாகி விட்டன. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள விழிப்புஉணர்வு காரணமாக மீண்டும் மரச்செக்கை நாட ஆரம்பித்திருக்கிறோம்.
மரச்செக்கு மற்றும் ரோட்டரி செக்கு:
`செக்கு' எண்ணெய் வேண்டும் என்று பலரும் வாங்கி உபயோகித்து வருகிறார்கள். அவை அனைத்தும் உண்மையான செக்கு எண்ணெய்யா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். செக்கு எண்ணெய் என்பதற்கும் மரச்செக்கு எண்ணெய்க்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது.
செக்கில் இரும்புச் செக்கு, மரச்செக்கு என இரு வகைகள் உண்டு. இரும்புச் செக்கை ரோட்டரி என்றும் சொல்வர். இரும்புச் செக்கு முழுமையாக இரும்பில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் இணைக்கப்பட்டுள்ள மோட்டார் திறன் 15 எச்.பி திறனைக் கொண்டிருக்கும். அதனால் சுமார் 300 டிகிரி வெப்பத்தில் அரைக்கும். 15 எச்.பி திறனைக் கொண்டிருக்கும் மோட்டார் மூலம், செக்கின் உலக்கைப் பகுதி ஒரு நிமிடத்திற்கு 34 முதல் 36 சுற்றுகள் சுற்றும். இந்த வேகமும், அதிகமான வெப்பநிலையும் அரைக்கும் தானியத்தின் உயிர்த் தன்மையை நிச்சயமாகப் பாதிக்கும். இதையும் பலர் செக்கு எண்ணெய் என்று வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். இதனால் உடலுக்கு முழுச் சத்துகளையும் கொடுக்க முடியாது. ஆனால் கலப்பட எண்ணெய்களிலிருந்து தப்பிக்க இதுவும் ஒரு வழிதான். பலர் செக்கு எண்ணெய் என்றால் அது மரச்செக்கு எண்ணெய் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
மரச்செக்கின் கீழ்ப்பகுதியும், உலக்கையும் நிச்சயமாக மரங்களில் செய்யப்பட்டிருக்கும். இதனுடன் 3 எச்.பி திறன் கொண்ட மோட்டார் இணைக்கப்பட்டிருக்கும். இச்செக்கின் உலக்கை ஒரு நிமிடத்துக்கு 10 முதல் 14 சுற்றுகள் வரை சுற்றும். இதனால் மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்பொழுது அதிகபட்சம் 35 டிகிரி வரை வெப்பம் உருவாகும். அதனால், இந்த எண்ணெய்யில் உயிர்ச் சத்துகள் ஒருபோதும் அதன் தன்மையை இழக்காது. இது முழுமையாக நமது உடலுக்கும், உயிருக்கும் முழுயான நன்மை கிடைக்கும்.
ரோட்டரி செக்கு எண்ணெய்களோடு ஒப்பிடும்போது மரச்செக்கு எண்ணெய் விலை கொஞ்சம் அதிகம்தான். உடலுக்குத் தகுந்த எண்ணெய் உருவாக்க, பக்குவம், நேரம், செலவு சற்றுக் கூடுதலாகத்தான் ஆகும். எண்ணெய் என்ற பெயரில் ஏதோ ஒரு பொருளை உருவாக்க முன்னர் சொன்ன மூன்றுமே தேவையில்லை. சரியில்லாத உணவை எடுத்துக்கொண்டு கொழுப்பு ஏறி, மருத்துவரிடம் சென்று மாத்திரை, மருந்து இவற்றிற்குச் செலவு செய்வதை விட, மரச்செக்கு எண்ணெய்க்குக் கொஞ்சம் கூடுதலாகப் பணம் கொடுத்து வாங்கினால் தவறில்லை என்பதை உணர மறுக்கிறோம். மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது பயிர்களைக் காய வைத்து, கல், தூசு நீக்கியே மரச் செக்கில் ஆட்டப்படுகிறது. கற்களை நீக்காமல் ஆட்டினால் மரத்தால் ஆன உலக்கையும், அடிப்பாகமும் சேதமாகும். ஆனால் ரோட்டரி செக்குகள் முழுவதும் இரும்பால் ஆனதால் கல் இருந்தாலும் கவலையில்லை. சுத்தமான மரச்செக்கு எண்ணெய்யா என உறுதி செய்து கொள்ள, எண்ணெய் பாட்டில் வாங்கும்போது அதைத் தலைகீழாக ஒரு முறை திருப்பிப் பார்க்கலாம். கறுப்பாக கசடுத் துகள்கள் தென்படும். அப்போது அதை உண்மையான செக்கு என்பதை உறுதிசெய்து கொள்ளலாம்.
நம் முன்னோர்கள் செக்கில் பிழிந்தெடுக்கும் எண்ணெய்யை அப்படியே பயன்படுத்தி வந்தனர். அவர்கள் ஒரு கிண்ணம் நல்ல எண்ணெய்யைக் குடிக்கும் வழக்கத்தையும் கடைப்பிடித்தே வந்திருக்கின்றனர். அப்போது ஏற்படாத கொழுப்புச் சத்து ஏன் இப்போது ஏற்படுகிறது என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. காரணம், அவர்கள் பயன்படுத்தியது மரச்செக்கு எண்ணெய் உடலுக்கு நன்மை தரும் பல பாரம்பர்ய முறைகளைக் கைவிட்டு இருக்கும் தற்போதைய சூழலில், மரச்செக்கு எண்ணெய்களை வாங்கி உபயோகிப்பதை வழக்கமாகக் கொண்டால், இப்போது இருக்கும் மரச்செக்குகளாவது அழியாமல் பாதுகாக்கப்படும்.
சமீப காலமாக, இரும்பு செக்கில் எண்ணெய் பிழிவதை விட மரச்செக்கு எண்ணெய் மீது மக்களுக்கு ஈர்ப்பு அதிகமாக உள்ளது.இரும்பு மரச்செக்கில், எண்ணெய் பிழியும் போது. சூடு அதிகரித்து, எண்ணெயிலுள்ள பாதிக்கப்படுகின்றன. நுண்ணுயிர்கள், வைட்டமின்கள்
வாகை மரச்செக்கில் பிழியப்படும் எண்ணெய், குடு அடைவதில்லை. இதனால், எண்ணெய்யில் இருக்கும், நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அழிவதில்லை. இயற்கை மணத்தோடு கிடைக்கிறது. இரும்பு செக்கில் எண்ணெய் எடுக்க, 30 நிமிடம் தேவைப்படும். எண்ணெய் அளவு கூடுதலாக கிடைக்கும். ஆனால், வாகை மரச்செக்கில் 20 கிலோ நிலக்கடலையைப் போட்டால் பிழிந்தெடுக்க, ஒரு மணி நேரம் ஆகிறது. 20 கிலோ கடலைக்கு 9 லிட்டர் எண்ணெய் கிடைக்கிறது. 13 கிலோ பிண்ணாக்கு கிடைக்கும்.
ஒரு கிலோ கொப்பரையை பிழிந்தெடுத்தால், 580 மி. லிட்டர் தேங்காய் எண்ணெய் கிடைக்கும். அதேபோல, எள்ளில் இருந்து 350-380 மி.லிட்டர் எண்ணெய் கிடைக்கிறது.
மரச்செக்கு பிண்ணாக்கில் கூடுதல் சத்துகள் இருப்பதால், கால்நடைகள் மட்டுமன்றி, பயிர் வளர்ச்சிக்கும் பெரும் ஊக்கியாக இருக்கிறது.
ரோட்டரி, மரச்செக்கு என்ன வித்தியாசம்?
‘‘இந்த மரச் செக்கு 1.5 குதிரைத் திறனுள்ள மோட்டார் மூலமா ஓடுது.
எட்டு மணிநேரம் இயக்க, சுமார் எட்டு யூனிட் கரன்ட் செலவாகும்.
இந்த செக்குல இருக்கிற உலக்கை, உரல் ரெண்டுமே மரத்தால ஆனது.
உலக்கை, வம்மரை மரத்திலும், உரல், வாகை மரத்திலும் செஞ்சிருக்காங்க.
உலக்கையோட எடை 40 கிலோ. உலக்கையும் உரலும் ஒரு நிமிஷத்துல ஒன்பதரை சுத்து சுத்தும். இதனாலதான் மரச்செக்குல ஆட்டுற எண்ணெய் சூடாகாம இருக்கு.
ஆனா,
ரோட்டரியில உலக்கை, உரல் ரெண்டுமே இரும்புல இருக்கும்.
உலக்கையோட எடை 80 கிலோ.
ஒரு நிமிஷத்துக்கு 38 சுத்து சுத்தும்.
அதோட உற்பத்தித் திறன் மரச் செக்கை விட, நாலு மடங்கு அதிகம்.
10 குதிரைத் திறன் மின்மோட்டார்ல அது இயங்குது’’ .
ரீஃபைண்ட் ஆயிலை ஓரங்கட்டுங்கள் மக்களே!
ரீஃபைண்ட் ஆயிலில் குறைந்த அளவே உயிர்ச்சத்து உள்ளது. இதற்கு காரணம் அதன்தயாரிக்கும் முறை ரீஃபைண்ட் எண்ணெயை சுத்திகரிக்கும்போது அதில் உள்ள நிறம் , வழவழப்புத் தன்மை, மற்றும் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான கொழுப்புச்சத்தும், உயிர்ச்சத்துக்கும் சேர்த்தே பிரித்தெடுக்கப்படுகின்றன.
ரீஃபைண்ட் ஆயில் மற்றும் டபுள் ரீஃபைண்ட் ஆயில் என்பது எல்லாம் உண்மையில் மனித ஆயுளை குறைக்கும் அல்லது குலைக்கும் எண்ணெய்களே.
ரீஃபைண்ட் ஆயிலால் ஏற்படும் பாதிப்பு
ரீஃபைண்ட் ஆயில் பயன்பாடு, உடலில் நல்ல கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது.
மரச்செக்கு எண்ணெய் vs ரீஃபைண்ட் ஆயில்.
# | மரச்செக்கு எண்ணெய் | ரீஃபைண்ட் ஆயில் |
1 | உயிர்சத்துக்கள் நிறைந்து இருக்கும். | குறைந்த அளவே உயிர்சத்துக்கள் இருக்கும். |
2 | மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்பொழுது அதிகபட்சம் 35 டிகிரி வெப்பம் ( room temperature ) மட்டுமே வரும் .இதில் உயிர்ச்சத்துக்கள் ஒருபோதும் அதன் தன்மையை இழப்பதில்லை. இதுவே நம் உடலுக்கும் உயிருக்கும் முழு நன்மை வழங்கும் எண்ணெய். | சுமார் 250 டிகிரி வெப்பத்தில் உயிர்ச்சத்துக்கள் அனைத்தையும் கொலைசெய்துவிட்டு ஒரு மோசமான திரவமாக பிரித்து எடுப்பதுதான் இந்த ரீஃபைண்ட் எண்ணெய். |
3 | பழுப்பு (Light Brown) நிறத்தில் இருக்கும். | நிறமற்றது. |
4 | ருசி சொல்லும் எந்த எண்ணெய் என்று. | சுவையற்றது. |
5 | அடர்த்தி மிகுந்தது. | அடர்த்தியற்றது. |
6 | அடர்த்தி மிகுந்தது என்பதால் சராசரியாக ஒரு மாதத்திற்கு 3 லிட்டர் எண்ணெய் ஒரு குடும்பத்திற்கு (4 பேர்) போதும். | அடர்த்தியற்றது என்பதால் சராசரியாக ஒரு மாதத்திற்கு 5 லிட்டர் எண்ணெய் ஒரு குடும்பத்திற்கு (4 பேர்) தேவை. |
7 | பொறிப்பதற்கு ஏற்றது. | பொறிப்பதற்கு ஏற்றது அல்ல. |
8 | ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும். | ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். |
9 | விலை சற்று அதிகம். | விலை மலிவானது. |
இதனால் பல்வேறுவிதமான உடல் பாதிப்புகள் ஏற்படக்கூடும். குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன், புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
மாற்றம் நம்மிடத்தில்தான் பிறக்கவேண்டும்!
தேவையான மூலப்பொருட்கள் :
* கடலை, எள், தேங்காய், ஆமணக்கு வித்துக்கள்
* மரச்செக்கு
தயாரிக்கும் முறை :
* முதலில் ஏதேனும் ஒரு தரமான எண்ணெய் வித்துக்களை தேர்வு செய்ய வேண்டும்.
* தேர்வு செய்யப்பட்ட எண்ணெய் வித்துக்களை வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். வித்துக்களில் ஈரப்பதம் இருந்தால் எண்ணெய் சரியாக வராது.
* மரச்செக்கில் வித்துக்களை போட்டு நன்றாக அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட வித்துக்களை எடுத்து வெயிலில் வைத்தாலே போதும் எண்ணெயும் புண்ணாக்கும் தனியாக பிரிந்து விடும். இதற்கு தனியே பிரித்தெடுக்கும் இயந்திரம் என எதுவும் தேவையில்லை.
* பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெயை பாட்டிலில் அடைத்தால் விற்பனைக்குத் தயார்.
* புண்ணாக்கு கால்நடையின் தீவனம் என்பதால் எஞ்சியுள்ள புண்ணாக்கும் கூட நல்ல விலைக்கு போகும்.
விற்பனை முறை :
* நீங்கள் இந்த தொழிலை செய்தாலே போதும் உங்களை தேடி மக்கள் கூட்டம் தானாகவே வரும்.
What's Your Reaction?