ஆகஸ்டில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை...

வரும் ஆகஸ்ட் மாதத்தில், பல்வேறு வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது....

Jul 31, 2023 - 15:27
 0  35
ஆகஸ்டில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை...

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. தற்போது வங்கிகள் தொடர்பான நிறைய வேலைகள், ஆன்லைனிலேயே மேற்கொள்ளும் வசதி வந்துவிட்டது. இருப்பினும், சில வேலைக்காக வங்கிக்குச் செல்வது முக்கியம். முக்கியமான பரிவர்த்தனை மேற்கொள்ள திட்டமிடுவோர், அதற்கேற்றால் போல் முன்கூட்டியே திட்டமிட்டுவது அவசியம். அதற்கு வங்கி விடுமுறை நாட்களை மனதில் வைத்துக்கொள்வது அவசியம்.

வரும் ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு வங்கிகள் 14 நாட்கள் இயங்காதென அறிவிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களை பொருத்து மாறுபடும் விடுமுறை விவரங்கள் குறித்து பார்ப்போம்....

1.ஆகஸ்ட் 6 - ஞாயிறு விடுமுறை

 2.ஆகஸ்ட் 8 - டெண்டோங் லோ ரம் ஃபாத் (சிக்கிம் காங்டாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை)

 3.ஆகஸ்ட் 12 - 2வது சனிக்கிழமை விடுமுறை

4.ஆகஸ்ட் 13 - ஞாயிறு விடுமுறை

 5.ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்

6.ஆகஸ்ட் 16 - பார்சி புத்தாண்டு ( மும்பை, நாக்பூர், கவுகாத்தியில் வங்கிகளுக்கு விடுமுறை)

 7.ஆகஸ்ட் 18 - ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி (கவுகாத்தியில் வங்கிகளுக்கு விடுமுறை)

8.ஆகஸ்ட் 20 - ஞாயிறு விடுமுறை

9.ஆகஸ்ட் 26 - 4வது சனிக்கிழமை விடுமுறை

10.ஆகஸ்ட் 27 - ஞாயிறு விடுமுறை

11.ஆகஸ்ட் 28 - முதல் ஓணம் ( கொச்சி, திருவனந்தபுரத்தில் வங்கிகளுக்கு விடுமுறை)

12.ஆகஸ்ட் 29 - ஓணம் பண்டிகை ( கேரளாவில் வங்கிகளுக்கு விடுமுறை)

13.ஆகஸ்ட் 30 - ரக்ஷா பந்தன் (ஜெய்ப்பூர், சிம்லாவில் வங்கிகளுக்கு விடுமுறை)

14.ஆகஸ்ட் 31 - ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி / பாங்-லாப்சோல் ( டேராடூன், காங்டாக், கான்பூர், லக்னோ,கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை)...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow