அழகு மட்டும் போதாது

அது ஒரு சின்ன சமவெளி பகுதி. எந்த பக்கம் பாத்தாலும் பச்சை பசேல்னு இருக்கும். அங்க ஒரு சின்ன ஏரியும் இருந்துச்சி. அங்க ஒரு புள்ளி மான் வாழ்ந்து வந்துச்சு.
அந்த மான், ஒரு நாள் அந்த ஏரியில தண்ணி குடிக்க போனது. அப்ப அதோட அழகான கொம்புகளை பாத்தது.
"எவ்வளவு அழகா இருக்கு. இந்த காட்டுலயே நானும் என்னோட கொம்புகளும் தான் அழகு'
இப்ப அதோட கால்களை பாத்தது.
'ஓ.ஏன் என்னோட கால்கள் இப்படி இருக்கு. ஒல்லியா குச்சி மாதிரி, எனக்கு பிடிக்கல'
கவலையோட அந்த இடத்தை விட்டு போயிடுச்சி.
அந்த மான் எப்பவும் தன்னோட நண்பர்கள் கிட்ட அதோட கொம்-புகளை காட்டி பெருமிதம் ஆகும்.
சில நாள்கள் போச்சி. அது மதிய நேரம். மேக மூட்டமா இருந்துச்சி. மான் ஏரியில தண்ணி குடிச் சிட்டு, மெதுவா நடந்து போயிட்டு இருந்துச்சி.
அப்ப திடீர்னு ஒரு புலி அந்த மானை விரட்ட ஆரம்பிச்சது. மான் பயங்கர வேகத்துல ஓடுச்சி. கொஞ்ச நேரத்துல மான் களைப்பு ஆயிடுச்சி. அங்க இருந்த காட்டுக்கு உள்ள திரும்பி ஓடுச்சி.
'உள்ள போய் எங்க-யாவது ஒளிஞ்சிக்கலாம்.'
புலியும் தொடர்ந்து ஓடி வந்துச்சி.
மான் மரங்க- ளுக்கு நடுவுல ஒடிக் - கிட்டே ஒளிய இடம் தேடுச்சு.
புலியால தொடர்ந்து ஓட முடியல. ரெண்டுக்கும் நடுவுல இடைவெளி அதிகமாச்சு. மான் இப்ப சந்தோஷம் ஆயிடுச்சு.
'என்னை பிடிக்க முடியுமா'
திடீர்னு அந்த மானால ஓட முடியல. ஏதோ தலைய பிடிச்சி இழுக்குற மாதிரி இருந்துச்சு.
மான் மேல பாத்துச்சு. மரங்களுக்கு நடுவுல நிறைய கொடிகள் படர்ந்து இருந்துச்சு. அதுல மானோட கொம்புகள் நல்லா மாட்டி இருந்துச்சு.
மான் பதட்டத்துல தலைய வேகமா ஆட்ட, அதோட கொம்புகள் இன்னும் மோசமா மாட்டிகிடுச்சு. இப்ப மானால அங்க இருந்து நகர முடியல.
மான் லேசா பின்னாடி திரும்பி பாத்துச்சு. புலி பக்கத்துல நெருங்கி டிச்சி.
'கொம்புகள் எவ்வளவு அழகா இருந்து என்ன பயன். ஆபத்துல உதவ முடியல ஆனா என்னோட கால்கள் எனக்கு பிடிக்காம் போனாலும், இவ்வளவு நேரமா என்னை புலிகிட்ட இருந்து தப்பிக்க உதவி-யிருக்கு. உன்னை தப்பா நெனச்சிட்டேன். என்னை மன்னிச்சிடு
What's Your Reaction?






