நரியும் கழுதையும் -Thirukural Kadhaigal
The Donkey and the Clever Escape – நரியும் கழுதையும் -Thirukural Kadhaigal
நரியும் கழுதையும் -
Thirukural Kadhaigal
The Donkey and the Clever Escape – நரியும் கழுதையும் -Thirukural Kadhaigal :-ஒரு நாள் ஒரு நரி காட்டுல பசியோட இருந்துச்சு
காட்டுல ஏதாவது மிருகம் இருந்தா அடிச்சி சாப்பிடலாம்னு எல்லா இடத்துலயும் தேடி பாத்துச்சு
எவ்வளவு தேடியும் வேட்டையாடி சாப்பிடுறதுக்கு எந்த மிருகமும் கிடைக்கல நரிக்கு
கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா ஒரு கழுத அதோட கண்ணுல பட்டுச்சு ,அத வேட்டையாடி சாப்பிடலாம்னு நினைச்சப்ப அந்த கழுத நரிய பார்த்துடுச்சு
ரொம்ப பயந்துபோன கழுத கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சுச்சு
அப்பத்தான் அதோட பலமே அதோட பின்னங்கால்கள் தானு ஞாபகம் வந்துச்சு
எப்படியாவது நரிய தன்னோட பின் பக்கத்துக்கு கொண்டு வந்துட்டா ஒரே எத்து எத்தி தப்பிச்சி போய்டலாம்னு முடிவு செஞ்சுச்சு
உடனே நரி கிட்ட எனக்கு ரொம்ப பயமா இருக்கு ,நீங்க எப்படினாலும் என்ன அடிச்சி சாப்பிட போறீங்க அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு உதவி செய்ங்கனு சொல்லுச்சு
உடனே என்ன உதவின்னு கேட்டுச்சு நரி ,அதுக்கு கழுத சொல்லுச்சு நேத்துதான் குரங்கு ஜோசியர் கிட்ட எவ்வளவு நாள் நான் உயிர் வாழ்வேன்னு கேட்டேன்
அதுக்கு அந்த குரங்கு ஜோசியர் உன்னோட ஆயுள் ரேகை உன்னோட வால் வரைக்கும் நீண்டு இருக்கு ,அதனால நீ 50 வருஷம் வாழுவணு சொல்லுச்சு
ஆனா நான் உங்க கிட்ட மாட்டிகிட்டேன் ,தயவு செஞ்சு என்னோட வால் வரைக்கு என்னோட ஆயுள் ரேகை இருக்கானு பார்த்து சொல்லுங்கன்னு சொல்லுச்சு
ஒரு நிமிஷம் யோசிச்ச நரி கழுதையோட வால் பக்கத்துல வந்து ரேகை எதுவும் தெரியுதான்னு பார்த்துச்சு
அதுதான் சரியான நேரம்னு நினைச்ச கழுதை ஒரே எத்து ஏத்துச்சு ,சரியா நரியோட முகத்துலயே அடி விழுந்ததால நரிக்கு தலை சுத்த ஆரம்பிச்சுடுச்சு
இதுதான் சரியான நேரம்னு வேகமா ஓடி ஒளிஞ்சுக்கிடுச்சு கழுதை
இதைத்தான் திருவள்ளுவர்
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்
அப்படினு எழுதி இருக்காரு அதுக்கு செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்கனு அர்த்தம்
What's Your Reaction?