வெளிவந்தது ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் 'சூர்யா 45' படத்தின் மாஸ் அப்டேட்.. என்ன தெரியுமா?

சூர்யா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் கங்குவா. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.
தற்போது கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவரது 44 - வது படமான 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து, சூர்யா ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் அவரது 45 - வது படத்தில் நடிக்கிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், சூர்யா 45 படம் குறித்து தற்போது ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.
மாஸ் அப்டேட்
அதாவது, இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இந்த படப்பிடிப்பின் காரணமாக வருகின்ற 20ம் தேதி நீதிமன்றம் போன்ற செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்படும் என கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த படம் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?






