வெறும் வயிற்றில் நெய்யில் வறுத்த வெந்தயம் - உடலில் செய்யும் அற்புதங்களை பாருங்க
வெந்தயம் இந்திய சமையலறையில் இருக்கும் ஒரு பொக்கிஷம் என்று சொல்லலாம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். பொதுவாக வெந்தயத்தை சமையலில் சேர்த்தோ ஊறவைத்து, பொடியாக்கியோ அல்லது முளைகட்டியோ சாப்பிடுவார்கள். ஆனால் நெய்யில் வெந்தயத்தை வறுத்து சாப்பிடும்போது அதன் பலன் பலமடங்கு அதிகரிக்கும். யாரெல்லாம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சாப்பிடலாம் என்று பார்க்கலாம் வாங்க.
1. காலை முதல் உணவு
நாம் உண்ணும் உணவே நம் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. அதனாலேயே நம்முடைய முன்னோர்கள் உணவே மருந்து என்று சொன்னார்கள்.
குறிப்பாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நாம் எடுத்துக் கொள்ளும் முதல் உணவு மிக முக்கியம். அது நாள் முழுவதும் நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
காலையில் எழுந்து இயற்கை உணவுகளை உண்பதால் உடலின் புத்துணர்ச்சி அதிகரிக்கிறது. அதற்கு நிறைய செலவு செய்யத் தேவையில்லை.
நம் வீட்டில் உள்ள அஞ்சறைப் பெட்டியே போதுமானது. குறிப்பாக வெந்தயத்தை நெய்யில் வறுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நீங்களே பார்த்து வியக்கும் அளவுக்கு நன்மைகள் உண்டாகும்.
2. செரிமானத்தை மேம்படுத்தும்
வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கிறது. இது குடவல் இயக்கத்தை மேம்படுத்தி செரிமான ஆற்றலை அதிகரிக்கும். குறிப்பாக நெய்யில் வறுத்த வெந்தயம் இன்னும் கூடுதலாக செரிமானத்தை தூண்டும்.
2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், வெந்தயம் செரிமானத்திற்குத் தேவையான நல்ல குடல் பாக்டீரியாக்களை உருவாக்கும். இது மலச்சிக்கல், வாய்வுத் தொல்லை ஆகிய பிரச்சினைகளைத் தீர்க்கவும் உதவி செய்கிறது.
3. அதிக எடையை குறைத்து சரியான எடைக்கு வர
வெந்தயம் உடல் எடையைக் குறைக்க மிகப்பெரிய அளவில் உதவி செய்யும்.
நெய்யில் வறுத்த வெந்தயத்தை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடையைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் செய்யும்.
இதிலுள்ள நார்ச்சத்தும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலமும் சேர்ந்து நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். பசியைக் கட்டுப்படுத்தும். உடலுக்கு புரதம் மற்றும் கால்சியத்தையும் கொடுத்து ஆற்றலையும் அதிகரிக்கும்.
4. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த
வெந்தய விதைகள் நம்முடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இதில் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. இது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது.
வெந்தய விதையில் உள்ள சத்துக்களை உடலுக்குச் சரியாக உறிஞ்சிக் கொடுக்க நெய் உதவி செய்யும். அதனால் நீரிழிவு நோயாளிகள் வெந்தயத்தை நெய்யில் வறுத்து பயன்படுத்துவது கூடுதல் நன்மைகளைத் தரும். சர்க்கரை நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க இந்த நெய்யில் வறுத்த வெந்தயம் உதவி செய்யும்.
5. எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது
வெந்தய விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இது மூட்டுகளில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களைக் குறைத்து மூடடுவலியைக் குறைக்கும். எலும்புகளுக்கு இடையில் இருக்கும் சவ்வுகளுக்கு லூப்ரிகண்ட்டாகச் செயல்படுகிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது.
2022 இல் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், வெந்தயத்தை பேஸ்ட்டாக அரைத்து கால் மூட்டுகளில் அப்ளை செய்து வர மூட்டுவலிக்கு நிவாரணம் கிடையும் என்று கூறுகிறது.
பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் கிடைக்கும். இது எலும்புகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி கீல்வாதம் அல்லது மூட்டு பிரச்சனைகளைக் குணப்படுத்துகிறது.
6. சரும ஆரோக்கியத்திற்கு நல்லது
நெய்யில் வறுத்த வெந்தயத்தை பொடி செய்து அதை வெதுவெதுப்பான பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
வெந்தயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதிலுள்ள இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
நெய் நம் சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அதனால் சருமம் வறண்டு போவதை தடுத்து நன்கு மாய்ஸ்ச்சராக வைத்திருக்க முடியும்.
What's Your Reaction?