Red Banana: செவ்வாழை பழம் சாப்பிட சரியான நேரம் எது தெரியுமா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!
குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தது செவ்வாழை. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு தாவரத்துக்கும் தனித்துவமான தாவர வேதிப்பொருட்கள் இருக்கும்.

மூளையின் செயல்பாடு, இதயத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின் இயக்கம், குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தது செவ்வாழை. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு தாவரத்துக்கும் தனித்துவமான தாவர வேதிப்பொருட்கள் இருக்கும்
அந்த அடிப்படையில் உடம்பை வலுவாக்கும் காயகல்பமாக மருத்துவத்தில் செவ்வாழைப் பழமும் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினால் மிகையாகாது.
செவ்வாழை சாப்பிடுவதற்கான சரியான நேரம் என்ன?: செவ்வாழைப் பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணி பிரேக் நேரத்திலோ, மாலை 4 மணி பிரேக் நேரத்திலோ சாப்பிடலாம். உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இதனுடைய முழு சத்துக்களும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். இது எல்லா பழங்களுக்கும் பொருந்தும்.
செவ்வாழையின் பயன்கள்: நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
மாலைக்கண் நோய் கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
பல் வலி, பல்லசைவு போன்ற பலவகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
முந்தைய தினம் சாப்பிட்ட சில உணவுகளால் மறுநாள் காலையில் மலம் வெளியேற முடியாமல் இருக்கும். காலையில் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட அது குடலைத் தூண்டி கழிவை வெளியேற்ற வைக்கும்.
What's Your Reaction?






