பைசா நகரின் கோபுரம்
உலக அதிசயங்களில் ஒன்றான பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் முரட்டுத்தனமான தாக்குதல்களுக்கும் கொள்ளையடித்தலுக்கும் சூறையாடலுக்குமான நினைவுச் சின்னம் ஆகும். எல்லாவற்றையும் தாங்கி இன்னமும் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இத்தாலி நாட்டில் டஸ்கன் பகுதியில் உள்ளது 'புளோரிடா' என்னும் வியாபாரத்தலம் அங்கிருந்து சுமார் 30 மைல் தூரத்தில் உள்ளது பைசா நகரம்.

இத்தாலியின் அருகில் உள்ள சிசிலி தீவில் பாலர்மோ என்ற செல்வச் செழிப்பு மிகுந்த நகரம் உள்ளது. 1068ம் ஆண்டு இத்தாலியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவினரான பீசியன்கள் பாலர்மோ நகரின் மீது முரட்டுத்தனமாகத் தாக்குதல் நடத்தி வைரங்கள் உள்ப பல்வேறு செல்வங்களை சூறையாடிக் கொண்டு வந்தனர் அந்தக் கொள்ளையை மாபெரும் வெற்றியாகக் கருதினர் தங்களின் வெற்றியின் அடையாளமாக அவர்கள் உருவாக்கியதுதான் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம்,
இந்தக் கோபுரம் கட்டத் துவங்கியது கி.பி. 1073ம் ஆண்டு ஆனால் இதைக் கட்டி முடிக்க சுமார் 345 ஆண்டுகள் ஆனது அயல்நாடுகளின் போர் மற்றும் ஆக்கிரமிப்புகளே தாமதத்துக்கு காரணமாம் எப்படியோ 1417ல் கட்டி முடித்தார்கள் இந்தக் கோபுரம் தேவாலயம் ஞானஸ்நான தலம் அடுத்து உயரமான மணிக்கூண்டு என மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது.
முதல் தளத்தில் பல வருடங்களுக்குப் பிறகு பெரியதொரு மணி கட்டப்பட்டது. இதில் ஏழ விதமான இசை வருவதைப் போல ஏழு மணிகளைக் கட்டினார்கள். இப் பதுமையை அப்போது பாராட்டாதவர்களே இல்லை தன்பிறகு கோபுரத்தின் உச்சியில் ஒரு பெரிய மேடை கட்டப்பட்டது அதன் மீது நின்று பார்த்தால் பைசர் நகரத்தின் அழகும், தூரத்தில் இருக்கும் கடலின் அழகும் நன்கு தெரியும்
அந்தக் கோபுரத்தின் முதல் அடுக்கை கட்டி முடிக்கும்போதே அது ஒரு பக்கமாக சாய்வதை கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தவர்உணர்ந்தது இதற்குணம் கண்டுபிடிக் பல நாட்களானது இந்தக் கோபுரம் கட்டப்பட்ட இடம் மணற்பாங்கான ஆற்றுப்படுகை: இங்கே ஆர்லோ என்ற நூற்றாண்டுகளுமுன் ஓடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது அதனால்தான் கட்டிடன் சாய் ஆரம்பித்திருக்கிறது
இப்படிக் கட்டப்படும் ஒரு பெரிய கோபுரத்திற்கு என்ன தேவையோ அதைப் போன்ற அஸ்திவாரம்தான் அமைத்தார்கள், ஆனால் மணல்பூமியில் இதைவிடவும் உறுதியான அஸ்திவாரம் தேவை 1234ஆம் வருடம் சுட்டிடக் கலைஞர் ஒருவர் இந்த சாய்வு கோணத்தை அப்போதே கண்டு கட்டுமான வேலையை நிறுத்தி வைத்தார். அப்போதே சாயாமல் இருக்க என்ன வழி என்று நீவிரமாக யோசனை செய்தபின் 1260ம் வருடம் மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடங்கினார்கள்.
இத்தாலிய ஆட்சியாளர் ஒருவர். தனது நாட்டு தேசிய சின்னம் உருக்குலைவதை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என்ற என்ணத்துடன், கோபுரத்தைச் சுற்றிலும் சற்று தூரத்தில் பல பெரிய துளைகள் போட்டு அதில் சிமென்ட் கலவையை ஊற்றச் சொன்னார். ஆனால் காலம் கடந்த அந்த முயற்சி பலனலிக்கவில்லை.
1989ம் வருடமே யுனெஸ்கோ நிறுவனம் இதை மிகவும் புராதனச் சின்னமாக அறிவித்ததால் உலகமெங்கும் இருந்து இதைப் பத்திரமாகப் பாதுகாக்க பெரும் நீதி திரண்டது நிதி மட்டும் போதுமா? சாய்வதை எப்பாடு பட்டாவது நிறுத்த வேண்டுமே இதைப்பற்றி உலகெங்கிலும் உள்ள பத்திரிகைகள் விதவிதமாக எழுதித் தீர்த்தன.
இதைக் கண்ட லண்டனைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் ஜான் பார்லெண்ட், கோபுரத்தை அதாவது அதன் தளத்தை - வலுவாக்க முன்வந்தார். இத்தாலிய அரசு அவருக்கு உரிய அனுமதி வழங்கவே, அவர் தனது நிபுணர்களுடன் கோபுரத்தை ஆராய்ந்து, வேலையைத் தொடங்கினார்.
இவர் செய்த பிரமாதமான வேலை என்ன தெரியுமா? கோபுரத்தைச் சுற்றிலும் பல இடங்களில் துளை போட்டு, அங்கே பலம் வாய்ந்த இரும்புக் கம்பிகளையும், வடங்களையும் பதித்தார் இதனால் பலமடைவதற்குப் பதில் அங்கே இருந்த மண், இதனால் சுத்தமாக பலம் இழந்து விட்டது. அதனால் கோபுரத்தின் சாய்வு இன்னும் சற்று அதிகமாகவே இருந்தது உடனே இந்த வேலையை நிறுத்தினார்கள்.
இத்தாலிய அரசாங்க அதிகாரிகள், கட்டிடக் கலை நிபுணர்கள் ஒன்றுகூடி இதைப்போல் எங்காவது கோபுரங்கள் சாய்ந்திருக்கின்றனவா? அப்படி இருந்தால் அதைக் காப்பாற்ற என்ன செய்திருக்கிறார்கள்? என்று அலசினார்கள் இங்கிலாந்தில் நான்விச் நகரில் ஒரு தேவாலயம் சற்றே சாய்ந்த நிலையில் இருந்தபோது ஜேம்ஸ் ட்ரூட்ஷா என்பவர் தனது முயற்சியால் அதைக் காப்பாற்றினார் எனத் தெரியவந்தது.
அவர் செய்த அதே பாணியை அங்கேயும் தொடர அரசாங்கம் அனுமதி தந்தது. கோபுரத்தைச் சுற்றியும் 120 துளைகள் மிகவும் நெருக்கமாகப் போடப்பட்டு அந்தத் துளைகளில் கெட்டியான மன் நிறைய கொட்டப்பட்டது. அதன் ஈரப்பதத்திற்காக தேவையான நீர் ஊற்றப்பட்டது அதனால் மண் கெட்டியாகிவிட்டது. இந்த பலம் வாய்ந்த மண் கொட்டப்பட்டதன் காரணமாக சாய்வு கோணம் குறைந்து 3.9 டிகிரிக்கு வந்தது
பைசா கோபுரத்தின் மொத்த எடை 14,453 டன்கள் மேலே ஏறிச் செல்ல தெற்குப் பக்கமாக 296 படிகளும், வடக்கே அதேபோல் 294 படிகளும் உள்ளன. எது எப்படியோ, பைசா நகரத்தின் இந்த சாய்ந்த கோபுரம் அறிவியலின் உதவியால் இன்று வரை சாயாமல் இருப்பதில் மகிழ்ச்சியே!
நம்ம ஊர் அதிசயம் பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்தைப் போலவே இந்தியாவில் ஒரு சிவன் கோயில் கோபுரமும் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்தக் கோயில், முடிசர் மாநிலத்தில் சாம்பல்பூர் நகரில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் மகாநதிக் கரையில் உள்ள ஹுயுமா என்னும் கிராமத்தில் உள்ளது.
இந்தக் கோயிலைக் கட்டியவர் கங்க வம்ச பேரரசின் மூன்றாவது மன்னர் அனங்க பிமதேவர் தொடர்ந்து அந்த நாட்டின் ஐந்தாவது அரசன் பலியார்சிங் என்பவரால் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது
இதைக் கண்ட லண்டனைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் ஜான் பார்லெண்ட், கோபுரத்தை அதாவது அதன் தளத்தை - வலுவாக்க முன்வந்தார். இத்தாலிய அரசு அவருக்கு உரிய அனுமதி வழங்கவே, அவர் தனது நிபுணர்களுடன் கோபுரத்தை ஆராய்ந்து, வேலையைத் தொடங்கினார்.
What's Your Reaction?






