பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் என்றால் என்ன?

நிலம் அல்லது வீடு வாங்கி பதிவு செய்யும்போது பட்டா சிட்டா போன்ற வார்த்தைகளை அதிகம் கேட்டிருப்போம். பட்டா சிட்டா போன்ற விஷயங்கள் எல்லாம் சாதாரணவைதான்

Mar 4, 2025 - 15:39
 0  2
பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் என்றால் என்ன?

ஆனால் நிறையப் பேருக்கு அது குறித்த சந்தேகம் இப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. பட்டா சிட்டா குறித்த விஷயங்களில் அதிக ஏமாற்று வேலைகளும் நடப்பதனால் இவை குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. நம் வாசகர் ஒருவருக்கும் இது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

பட்டா என்றால் என்ன?

நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது பட்டா. இதில் மாவட்டத்தின் பெயர், ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், சர்வே எண்ணும் உட்பிரிவும் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்நிலம் நன்செய் நிலமா அல்லது

புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்

சிட்டா என்றால் என்ன?

ஒருவருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பதைக் குறிக்கும் அரசாங்கப் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா என்ற விபரமும் நிலத்திற்கான தீர்வை கட்டிய விபரமும் சிட்டாவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அடங்கல் என்றால் என்ன?

ஊரில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் ‘அடங்கல்’. அடங்கலில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண், நிலத்தின் பயன்பாடு என்ன போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

“பட்டா என்கிற சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து வந்தது. பட்டா என்பது ஒரு அசையா சொத்தின் உரிமையாளர் யார் என்பதற்கு வருவாய்த் துறை வழங்கக்கூடிய ஓர் ஆவணம். பட்டாவில் கூட்டுப் பட்டா, தனிப் பட்டா என இரண்டு வகைகள் உண்டு. என்னிடம் இருந்து ஒருவர் நிலம் வாங்கினால் அவருக்கு அளிக்கப்படும் பட்டா தனிப் பட்டா. நிலத்திற்கான சர்வே எண் உங்கள் பெயருக்கு மாற்றப்படும். ஒரு நிலத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் இருந்தால், அந்த நிலத்திற்குக் கூட்டுப் பட்டா வழங்கப்படும்.

உதாரணமாக ஒரு பிளாட்டில் பத்து பேர் இருக்கிறார்கள் என்றால், பத்து பேருடைய பெயரிலும் பட்டா இருக்கும். அதன் பெயர் கூட்டுப் பட்டா. பொதுவாக நிலம் வாங்கிய 15 நாள்களில் பட்டா வழங்கப்படும். ஒருவரிடம் இருக்கும் நிலத்தின் ஒரு பகுதியை மட்டும் வாங்கினால் அரசு ஊழியர்கள் அளந்து பார்த்து சர்வே எண்ணில் உட்பிரிவு வகுத்து பட்டா வழங்க வேண்டும். சர்வே எண் என்பது, நமக்கு ஆதார் எண் இருப்பது போல நிலத்துக்கான அடையாள எண். சர்வே எண் 144 என்ற நிலத்தைப் பிரிக்கும் போது ஒருவருக்கு 144A என்ற உட்பிரிவைப் பிரித்து வழங்குவர். சர்வே எண்ணைப் புல எண் என்றும் குறிப்பிடுவர்.

சிட்டா என்பது பட்டாவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுடன் சேர்த்துக் கூடுதல் தகவல்களைக் கொண்டிருக்கும். ஒரு நிலம் அமைந்திருக்கும் மாவட்டம், வட்டம், கிராமம், பட்டா வகை, உரிமையாளர், நிலம் நஞ்சையா, புஞ்சையா, பயன்பாட்டில் உள்ளதா, தீர்வை விவரங்கள் என அனைத்தும் சிட்டாவில் இருக்கும். பட்டா நிலத்திற்கான உரிமை ஆவணம், சிட்டா நிலம் குறித்த விவரங்களின் தொகுப்பு.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.