உங்கள் மோதிரம் சைஸ் என்ன? போன் மூலம் சரியாக அளவெடுக்கலாமா? அது எப்படி?
How to select your Ring Size in tami

உங்கள் மோதிரம் சைஸ் என்ன? போன் மூலம்
சரியாக அளவெடுக்கலாமா? அது எப்படி?
உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனை (smartphone) வைத்து இதுவரை நீங்கள் எத்தனையோ விஷயங்களைச் செய்திருக்கலாம்.. ஆனால், 'இப்படி' ஒரு பயனுள்ள விஷயத்தை போன் (Phone) மூலம் செய்ய முடியுமா என்று வாய் பிளந்துவிடுவீர்கள். அப்படி என்ன விஷயம்? என்று தானே கேட்கிறீர்கள்! வாருங்கள் சொல்கிறோம்..
உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனை வைத்து பணம் செலுத்தியிருப்பீர்கள், கேஸ் புக் செய்திருப்பீர்கள், ஏன் சில நேரங்களில் போன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள ஸ்மார்ட் டிவைஸ்களை கூட நீங்கள் கண்ட்ரோல் செய்திருப்பீர்கள். இன்னும் சிலர் போனில் ரூலர் (Ruler) அல்லது ஸ்கேல் (Scale) பயன்படுத்தி இருப்பீர்கள். சில அளவு குறியீடுகளைக் கூட நீங்கள் பயன்படுத்தியிருப்பீர்கள்.
போனை வைத்து நமக்கு சரியான மோதிர அளவை கண்டறியலாமா?
இதுவரை இப்படிப் பல பயனுள்ள விஷயங்களை போன் மூலம் செய்த நீங்கள், இப்போது உங்களுடைய மோதிர அளவை (Ring size) கூட ஸ்மார்ட்போன் மூலம் மிகத் துல்லியமாக அளவிடலாம் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள் மக்களே.! உங்கள் விரலில் சரியாகப் பொருந்தக் கூடிய மோதிர அளவை இப்போது நீங்கள் ஸ்மார்ட்போன் மூலம் கண்டறியலாம். இதற்காகவே, சில பிரத்தியேகமான மொபைல் ஆப்ஸ்கள் (Mobile apps) இப்போது பயன்படுத்தக் கிடைக்கிறன.
நம்மில் பெரும்பாலானோர், இப்போது நமக்கு தேவைப்படும் பல பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து தான் வாங்குகிறோம். டி-ஷர்ட், பேண்ட், சட்டை, ஸ்போர்ட்ஸ் ஷூ என்று நாம் எதை ஆர்டர் செய்தாலும், உங்களுக்குப் பொருந்தக் கூடிய கரெக்ட் சைஸ் எது என்பதை நீங்கள் நன்கு அறிந்த பின்னர் தான் ஆர்டர்களை பிளேஸ் செய்வீர்கள். ஆன்லைன் மூலம் நீங்கள் நகை வாங்கும் போதும், அதன் அளவை சரியாகத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
பொதுவாக மோதிர அளவை எப்படி அளவிடுவார்கள்?
ஆனால், நம்மில் பெரும்பாலானோருக்கு நமது விரல் இருக்கும் மோதிரத்தின் அளவு பற்றிய விபரங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு. மோதிர அளவை அளவெடுப்பது எப்படி என்று யாரிடமாவது கேட்டால், அவர்கள் உடனே, ஒரு பெரிய நூலை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் விரலை சுற்றி டைட் செய்து, போதுமான இறுக்கத்துடன் என்ன அளவில் இருக்கிறது என்று மார்க் செய்துகொள்ளுங்கள்.
பிறகு அந்த நூலை எடுத்து, ஸ்கேல் அல்லது ரூலரில் வைத்து அதன் அளவு என்ன என்பதை நோட் செய்துகொள்ளுங்கள் என்று கூறுவார்கள். இதெல்லாம், சங்ககாலத்து வழிமுறை, இப்போது நாம் அதிநவீனமான ஹை-டெக் காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் நீங்கள் இவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. காரணம் உங்கள் கையில் ஸ்மார்ட்போன் உள்ளது.
ஸ்மார்ட்போன் மூலம் எப்படி மோதிர அளவை கண்டுபிடிப்பது? இதோ வழி.!
இந்த ஒரு சாதனம் போதும், உங்களின் தேவை அனைத்தையும் பூர்த்தி செய்துவிடும். உங்கள் கை விரலுக்குப் பொருத்தமான மோதிரத்தின் அளவை தெரிந்துகொள்ள
- நீங்கள் உடனே கூகிள் பிளே ஸ்டோர் செல்ல வேண்டும்.
- கூகிள் பிளே ஸ்டோர் சர்ச் பாரில் ரிங் சைஸர் (Ring Sizer) என்று டைப் செய்யவும்.
- காண்பிக்கப்படும் விருப்பங்களில் இருந்து Ring Sizer by Jason Withers என்ற ஆப்ஸை செலக்ட் செய்யவும்.
- இந்த ஆப்ஸை உங்கள் போனில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
- இப்போது இந்த ஆப்ஸை ஓபன் செய்தால், உங்களுக்கு மேல் பகுதியில் ஒரு பெரிய வட்டம் காண்பிக்கப்படும்.
- இந்த வட்டத்தில் உங்களுடைய பழைய மோதிரத்தை வைத்துவிடுங்கள்.
- கீழே உள்ள கர்ஸரை நகர்த்தினால், வட்டத்தின் அளவு மாறும்.
- உங்கள் மோதிரத்தின் அளவிற்கு ஏற்றார் போல அட்ஜெஸ்ட் செய்துகொள்ளுங்கள்.
- இப்போது உங்கள் மோதிரத்தின் அளவு 'இன்ச் (inch)' அளவில் காண்பிக்கப்படும்.
- வெளிநாட்டு நகை தளங்களில் மோதிரம் ஆர்டர் செய்தால், அந்த நாட்டிற்கான அளவும் கீழே காண்பிக்கப்படும்.
உங்களிடம் மோதிரமே இல்லையா? விறல் மட்டும் தான் இருக்கிறதா? அப்போ 'இப்படி' செய்யுங்கள்.!
உங்களிடம் மோதிரமே இல்லை, முதல் முறையாக இனி தான் மோதிரம் வாங்க போகிறீர்கள் என்றால், இந்த ஆப்ஸில் காண்பிக்கப்படும் வட்டதில் உங்கள் விரலை வைத்துக்கொள்ளுங்கள். மோதிரம் பொருந்தும் இடம், சரியாக வட்டத்திற்குள் இருக்கும் படி வைக்க வேண்டும். டிஸ்பிளேவில் காண்பிக்கப்படும் வட்டம் உங்கள் விரலை விட்டு சிறிதளவு எட்டி பார்க்கும் படி அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள். அது தான் உங்களுடைய சரியான் மோதிர அளவாகும்.
இப்படி இந்த ஆப்ஸை பயன்படுத்தி, உங்கள் விரலுக்கான சரியான மோதிர அளவு என்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். இதேபோல், வீட்டின் உள் இருக்கும் ஏரியாவை அளவிடவும், குழந்தைகளின் உயரத்தை அளவிடவும் தனி-தனி மொபைல் ஆப்ஸ்கள் இப்போது ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கு கிடைக்கிறது. அதையும் ட்ரை செய்து பாருங்கள்.
What's Your Reaction?






