சளி, இருமல், நோய் எதிப்பு சக்தி.. குழந்தைக்கு தரும் பாலில் இந்த ஒரு மசலாவை கலந்து கொடுங்க..
இரவில் குழந்தைக்கு பாலில் இலவங்கப்பட்டை சேர்ப்பது தூக்கம், செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, ரத்த சர்க்கரை கட்டுப்பாடு, மூளை செயல்பாடு மற்றும் சளி, இருமல் போன்றவற்றுக்கு உதவும்

உங்கள் குழந்தைக்கு இரவில் வழக்கமாக ஒரு கிளாஸ் பால் கொடுக்கிறீர்கள் என்றால், அதில் ஒரு எளிய மசாலா பொருளை சேர்ப்பது அவர்கள் குடிக்கும் பாலின் சுவை மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அது என்ன மசாலா என்று கேட்கிறீர்களா, இலவங்கப்பட்டை தன அது. உங்கள் குழந்தை இரவில் குடிக்கும் பாலில் இந்த அற்புத மசாலாவை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் இங்கே..
நம் அன்றாட சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மசாலா பொருளாக உள்ளது ஒரு லேசான இனிப்பு சுவையை கொண்டுள்ள இலவங்கப்பட்டை. பாலில் இதை சேர்ப்பது உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- இலவங்கப்பட்டை வழங்கும் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று, சிறந்த தூக்கத்திற்கு உதவும் அதன் திறன். இந்த மசாலா பொருளில் உள்ள இயற்கை சேர்மங்கள் உடலையும், மனதையும் ரிலாக்ஸாக வைக்கவும், அமைதியான தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. இதை சூடான பாலில் சேர்க்கும் போது நல்ல தரமான தூக்க கிடைக்கும் வகையிலான கலவையை உடலில் உருவாக்கும். பாலின் சூடு மற்றும் இலவங்கப்பட்டையின் இயற்கை தன்மை இரண்டும் சேர்ந்து படுக்கை நேரத்திற்கு ஏற்ற பானமாக அமைந்து நன்கு தூங்க உதவுகிறது.
- இலவங்கப்பட்டையில் இயற்கையாகவே காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு போன்றவை செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. செரிமான கோளாறு அல்லது அஜீரண பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு, இலவங்கப்பட்டை கலந்து ஒரு கப் சூடான பால் கொடுப்பது வயிறு உப்பசம் மற்றும் வாயு தொல்லையை குறைக்க உதவும். செரிமான நொதிகளின் உற்பத்தியை மேம்படுத்த, நம் உடல் உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதை உறுதி செய்ய மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை குறைக்க இலவங்கப்பட்டை உதவுகிறது.
- குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள், இலவங்கப்பட்டையில் அதிகம் உள்ளது. இவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்து போராடி, ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது, இதன் மூலம் நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது. எனவே வழக்கமான அடிப்படையில் இரவில் உங்கள் குழந்தைக்கு கொடுக்கும்பாலில் இலவங்கப்பட்டை சேர்ப்பதனால், உங்களின் குழந்தையினுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
- ரத்த சர்க்கரை அளவை இலவங்கப்பட்டை ஒழுங்குபடுத்துகிறது. உங்கள் குழந்தையின் ரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருந்தால் அல்லது நீரிழிவு அபாயத்தில் இருந்தால் டயட்டில் இலவங்கப்பட்டை சேர்ப்பது ரத்த சர்க்கரை லெவலை கட்டுப்படுத்த உதவும். இரவு நேரம் குடிக்கும் பாலில் சிறிதளவு இலவங்கப்பட்டை சேர்ப்பது ஆரோக்கியமான குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்திற்கு கணிசமாக பங்களிக்கும்.
- மூளை செயல்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த மற்றும் அறிவாற்றல் திறன்களை அதிகரிக்க உதவும் சேர்மங்கள் இலவங்கப்பட்டையில் உள்ளன. எனவே படிப்பில் கவனம், மன தெளிவு மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க தேவைப்படும் குழந்தைகளுக்கு இந்த மசாலா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே குழந்தைக்கு இரவில் கொடுக்கும் பாலில் இதனை சேர்ப்பது குழந்தைகள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் சிறந்த செயல்திறனை பேணுவதற்கு உதவும்.
- குளிர் சீசனில் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமலுக்கு இயற்கை தீர்வாக இலவங்கப்பட்டை இருக்கும். இதில் ஆன்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, எனவே தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உதவும். இலவங்கப்பட்டை சேர்க்கப்பட்ட ஒரு கப் சூடான பால் தொண்டை வலியைத் தணிக்கும், இருமலை குறைக்கும். இதனால் உங்கள் குழந்தை இரவில் மிகவும் சௌகரியமாக தூங்க முடியும்.
What's Your Reaction?






