காது குத்துவதற்கு பின் உள்ள அறிவியல் உண்மை

Ear Piercing Benefits in tamil

Jan 21, 2025 - 21:41
 0  6
காது குத்துவதற்கு பின் உள்ள  அறிவியல் உண்மை

 

 

காது குத்துவதற்கு பின் உள்ள  அறிவியல் உண்மை

 

இந்து மதத்தை மொறுத்தவரை குழந்தை பிறந்த பதினோராவது மாதத்திலோ அல்லது அதற்கு பிறகோ காது குத்துவது வழக்கம். ஆண் குழந்தை பெண் குழந்தை என இருவருக்கு காது குத்தப்படுகிறது. இந்த சடங்கிற்கு பின் ஒரு அற்புதமான அறிவியல் ஒளிந்துள்ளது. வாருங்கள் அது குறித்து விரிவாக பார்ப்போம். நம் உடம்பானது வெறும் எலும்பும் தோலும் மட்டுமே நிறைந்தது கிடையாது. நமது உடலை ஒரு சக்தி மண்டலம் இயக்குகிறது. அந்த சக்தி மண்டலத்தை சீராக வைத்துக்கொள்ள நாம் சில விடையங்களை செய்தாக வேண்டி உள்ளது. அதில் ஒன்று தான் காது குத்துதல் என்னும் சடங்கு. குழந்தைகளுக்கு சிறு வயதிலே காது குத்துவதன் மூலம் அவர்களது மூளை வளர்ச்சி மற்றும் நியாபக சக்தி அதிகரிக்கிறது. இடது மற்றும் வலது முலையை ஒன்றிணைக்கும் மையப்பகுதியாக காது விளங்குவதால் காது குத்தவதன் மூலம் நியாபக சக்தி அதிகரிக்கும் என்று விஞ்ஞானபூர்வமாக கூறப்படுகிறது. காது குத்தி  தோடு அணிவதன் மூலம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறையும் என்று கூறப்படுகிறது. அதோடு காது குத்துவதன் மூலம் செரிமான மண்டலம் சரிவர இயங்குகிறது என்றும் கூறப்படுகிறது.

காது குத்தும் சமயத்தில் கவனிக்க வேண்டியவை: பொதுவாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ஆகையால் காது குத்துவதற்கு முன்பு காது சுத்தமாக இருக்கிறதா, காது குத்தும் ஊசி சுத்தமாக இருக்கிறதா என்பதை பரிசோதிப்பது அவசியம். இல்லையேல் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது

காதில் அணிவிப்பதற்காக வாங்கும் தோடு தொங்குவது போல் இல்லாமல் எவ்வளவு சிறியதாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது. குழந்தைகள் புதிதாக தோடை அணிவதால் அவர்களுக்கு அதை இழுக்க வேண்டும் என்ற எண்ணம் வர வாய்ப்புள்ளது. ஆகையால் அவர்கள் கையில் சிக்காத வகையில் தோடு இருப்பது நல்லது. இதையும் படிக்கலாமே: பெண்கள் தலையில் பூ சுடுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல் உண்மை காது குத்திய பிறகு குறைந்தது ஒரு வார காலத்திற்கு அந்த இடத்தில் தூய தேங்காய் எண்ணெயை விட்டு வரலாம். தினமும் ஓர் இரு முறை கம்மலை திருக வேண்டும். இப்படி தொடர்ந்து ஆறுமாதம் வரை திருகினால்தான் கம்மல் காதோடு ஒட்டாமல் காதில் உள்ள ஓட்டை தெளிவாக இருக்கும்.

காது குத்துவதால் நன்மைகள் என்ற தலைப்பில், நமது பாரம்பரிய மருத்துவம் மற்றும் கலாச்சாரத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சில நன்மைகளை பார்க்கலாம்:

  1. மெரிடியன் புள்ளிகளின் செயற்பாடு:
    காது குத்துவதற்கு பயன்படுத்தப்படும் இடங்கள் அக்குபங்க்சர் புள்ளிகளாகும். இவை உடல் ஆரோக்கியத்திற்கான சில மெரிடியன் புள்ளிகளைச் செயலில் ஈடுபடுத்துகிறது, குறிப்பாக கண், காதல், தலைவலி போன்ற பிரச்சனைகளை குறைப்பதில் உதவலாம்.
  2. நரம்பு மண்டலம் (Nervous System) சீராக செயல்படுதல்:
    காதுகளில் உள்ள சில புள்ளிகள் உடல் நரம்பு மண்டலத்துடன் நேரடியாக தொடர்புடையவை. காது குத்துவதால் இவை உச்ச ஸ்திதியில் செயல்படும்.
  3. அழகியல் நோக்கத்தில்:
    கலாச்சார ரீதியாக, காதில் ஆபரணங்களை அணிவது பெண்கள் மற்றும் ஆண்கள் அழகை மேம்படுத்தும் ஒரு வழியாக கருதப்பட்டுள்ளது.
  4. குழந்தைகளின் வளர்ச்சி:
    பாரம்பரியமாக, சிறு குழந்தைகளின் காது குத்துவதால் அவர்களின் மூளை வளர்ச்சி மற்றும் ஆற்றல் சீராக இருக்கும் என நம்பப்படுகிறது.
  5. உளச்சிந்தனை மற்றும் மனநிலையின் பராமரிப்பு:
    காது குத்துவதை சிலர் மன அமைதிக்கான ஒரு புனித செயலாகவும், மன அழுத்தத்தை குறைக்க உதவுவதாகவும் நம்புகின்றனர்.

கவனிக்கவேண்டியவை:

  • காது குத்தும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.
  • சரியான முறையில் அனுபவமுள்ளவரால் குத்தப்பட வேண்டும்.
  • தொற்றுகள் மற்றும் வலியை தவிர்க்க அருகிலுள்ள மருத்துவரின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும்.

இது பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் மருத்துவ அறிவினை சார்ந்தது. உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கேற்ப, எந்த செயலையும் செய்யும் முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.

 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0