கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வரலாறு மற்றும் அவருடைய நாவல்கள்

கல்கி கிருஷ்ணமூர்த்தி (1899-1954) ஒரு இந்திய எழுத்தாளர், பத்திரிகையாளர், கவிஞர், விமர்சகர், சுதந்திரப் போராட்ட வீரர். கல்கி என்ற பெயரில் பத்திரிகையும் தொடங்கினார்

Jan 21, 2025 - 12:10
Jan 21, 2025 - 12:10
 0  2

1. கல்கி கிருஷ்ணமூர்த்தி வரலாறு

வணக்கம் நண்பர்களே இன்றைய  பதிவில் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கை வரலாறுகள் பற்றியும் அவரால் படைக்கப்பட்ட நாவல்கள் பற்றியும் தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாக இவர் எழுதும் நாவல்களை  படிக்க ஆரமித்து விட்டால் வைப்பதற்கு மனமே இருக்காது. இவர் எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதை சுருக்கி மற்றவர்களுக்கு  புரியும் படி  நாவல்களை வெளியிடுவார். இவர் எழுதும் ஒவ்வொரு நாவல்களையும் படிக்கும் பொழுது அந்த கதைக்கு சென்றது போல உணர்வுகள் ஏற்படும். இது போன்ற நாவலை எழுதிய கல்கி கிருஷ்ணசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு எப்படி பற்றி  தெரிந்துகொள்வோம் வாங்க.

2. கல்கி வாழ்க்கை வரலாறு:

கல்கி அவர்கள் மிகவும் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளர் ஆவார். இவருடைய இயற்பெயர் இரா. கிருஷ்ணமூர்த்தி ஆகும்.  இவர் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் நாள் தஞ்சை மாவட்டம் புத்தமங்கலம் கிராமத்தில் (மயிலாடுதுறை சமீபம்) என்ற ஊரில் பிறந்தார். இவர் பிராமண சமயத்தை சேர்ந்தவர் ஆவார். இவருடைய தந்தை பெயர் இராமசாமி ஐயர், தாய் தையல் நாயகி ஆவார்.

கல்கி அவர்கள் எட்டு வயதிலேயே வேத மந்திரங்களை மனப்பாடம் செய்து பல திறன்களையும் கொண்டிருந்தார்.  இவர் தனது ஆரம்ப படிப்பை கிராமத்தில் படித்து வந்தார் அதன் பிறகு திருச்சியில் இருக்கும் தேசிய உயர் நிலை பள்ளியில் படித்து வந்தார். அதன் பிறகு காந்தியின் மீது அதிகமான பற்றின் காரணமாக ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு  இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்து கொண்டார்.  1922- ஆம் ஆண்டு நடந்த சுதந்திர தின போராட்டத்தில் கலந்து கொண்டு ஒரு வருடம் சிறை வாழ்க்கையையும் அனுபவித்து வந்தார். 

இவருடைய படைப்பில்  பல சுவாரசியமான நூல்களையும் வெளியிட்டுள்ளார். அதாவது  கட்டுரைகள், புதினங்கள்,  35 சிறுகதைத் தொகுதிகள்,  பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாறு  கொண்ட நூல்கள் என பலவற்றை எழுதியுள்ளார்.

எனவே இவர் மிகவும் புகழ்  பெற்ற வரலாறு, புதினங்களை எழுதியவராக கருதப்பட்டார். இவர் எழுதிய புதினங்களில் “பெண்ணின் செல்வன்” மிகவும் புகழ் பெற்ற ஒரு நூலாகவும் இருந்தது. இவர் எழுதி புதினங்கள் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டது. மேலும் 1927 ஆம் ஆண்டு  இவர் எழுதிய  “ஏட்டிக்குப் போட்டி” என்ற புத்தகம் முதலில்  வெளியானது.

கல்கி அவர்கள் திரு.வி.க. அவர்கள் அழைப்பினால்  நவ சக்தி  பத்திரிக்கையில் பணிபுரிவதற்காக சென்றார். அப்பொழுது  கல்கி  ருக்மிணி என்ற பெண்ணை பார்த்தார்.   இருவருக்கும் காதல் மலர்ந்ததால் திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு இருவருக்கும்  ராஜேந்திரன், ஆனந்தி என்ற இரு குழந்தைகளும் பிறந்தன.

3. கல்கி எழுதிய வரலாற்று நாவல்கள் யாவை:

  1. சிவகாமியின் சபதம்
  2. பார்த்திபன் கனவு 
  3. பொன்னியின் செல்வன்

4. கல்கி எழுதிய புதினங்கள்:

  1. கள்வனின் காதலி 
  2. தியாகபூமி 
  3. மகுடபதி 
  4. அபலையின் கண்ணீர்
  5. சோலைமலை இளவரசி
  6. அலை ஓசை 
  7. தேவகியின் கணவன்
  8. மோகினித்தீவு 
  9. பொய்மான் கரடு 
  10. புன்னைவனத்துப் புலி
  11. அமரதாரா

5. கல்கி சிறுகதைகள்:

  1. சுபத்திரையின் சகோதரன்
  2. ஒற்றை ரோஜா
  3. தீப்பிடித்த குடிசைகள்
  4. புது ஓவர்சியர்
  5. வஸ்தாது வேணு
  6. அமர வாழ்வு
  7. சுண்டுவின் சந்நியாசம்
  8. திருடன் மகன் திருடன்
  9. இமயமலை எங்கள் மலை
  10. பொங்குமாங்கடல்
  11. மாஸ்டர் மெதுவடை
  12. புஷ்பப் பல்லக்கு
  13. பிரபல நட்சத்திரம்
  14. பித்தளை ஒட்டியாணம்
  15. அருணாசலத்தின் அலுவல்
  16. பரிசல் துறை
  17. ஸுசீலா எம். ஏ.
  18. கமலாவின் கல்யாணம்
  19. தற்கொலை
  20. எஸ். எஸ். மேனகா
  21. சாரதையின் தந்திரம்
  22. கவர்னர் விஜயம்
  23. நம்பர்
  24. ஒன்பது குழி நிலம்
  25. புன்னைவனத்துப் புலி
  26. திருவழுந்தூர் சிவக்கொழுந்து
  27. ஜமீன்தார் மகன்
  28. மயிலைக் காளை
  29. ரங்கதுர்க்கம் ராஜா
  30. இடிந்த கோட்டை
  31. மயில்விழி மான்
  32. நாடகக்காரி
  33. “தப்பிலி கப்”
  34. கணையாழியின் கனவு
  35. கேதாரியின் தாயார்
  36. காந்திமதியின் காதலன்
  37. சிரஞ்சீவிக் கதை
  38. ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்
  39. பாழடைந்த பங்களா
  40. சந்திரமதி
  41. போலீஸ் விருந்து
  42. கைதியின் பிரார்த்தனை
  43. காரிருளில் ஒரு மின்னல்
  44. தந்தையும் மகனும்
  45. பவானி, பி. ஏ, பி. எல்
  46. கடிதமும் கண்ணீரும்
  47. வைர மோதிரம்
  48. வீணை பவானி
  49. தூக்குத் தண்டனை
  50. என் தெய்வம்
  51. எஜமான விசுவாசம்
  52. இது என்ன சொர்க்கம்
  53. கைலாசமய்யர் காபரா
  54. லஞ்சம் வாங்காதவன்
  55. ஸினிமாக் கதை
  56. எங்கள் ஊர் சங்கீதப் போட்டி
  57. ரங்கூன் மாப்பிள்ளை
  58. தேவகியின் கணவன்
  59. பால ஜோசியர்
  60. மாடத்தேவன் சுனை
  61. காதறாக் கள்ளன்
  62. மாலதியின் தந்தை
  63. வீடு தேடும் படலம்
  64. நீண்ட முகவுரை
  65. பாங்கர் விநாயகராவ்
  66. தெய்வயானை
  67. கோவிந்தனும் வீரப்பனும்
  68. சின்னத்தம்பியும் திருடர்களும்
  69. விதூஷகன் சின்னுமுதலி
  70. அரசூர் பஞ்சாயத்து
  71. கவர்னர் வண்டி
  72. தண்டனை யாருக்கு?
  73. சுயநலம்
  74. புலி ராஜா
  75. விஷ மந்திரம்

6. கல்கி இறப்பு:

டிசம்பர் 5 – 1954  ஆம் ஆண்டு கல்கி ஆஸ்துமா பிரச்சனையால்  55 வயதிலேயே இவருடைய வாழ்க்கை முடிவு பெற்றது. இவர் ஆஸ்துமாவுடன் போராடிக்கொண்டே பல புதினங்களை வெளியிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow