இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள புகைப்படங்கள் என்னென்ன தெரியுமா?
இந்த பதிவில் இந்திய ரூபாய் நோட்டுக்களையும் அதில் அச்சடிக்கப்பட்டுள்ள படங்களை குறித்தும் பார்க்கலாம் வாருங்கள்.
1. ரூ 100 நோட்டு - ராணிக்கி வாவ் (படிக்கிணறு) குஜராத்

மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய கத்தரிப்பூ கலரில் உள்ள ரூ 100 நோட்டின் பின்புறம் குஜராத் மாநிலம் பதான் பகுதியில் உள்ள ராணிக்கி வாவ் என்ற ராணியின் படிக்கிணறு பகுதியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
2. பழைய ரூ100 - இமயமலை

இந்திய அரசு வெளியிட்ட பழைய ரூ100 நோட்டில் இந்தியாவின் மிக முக்கிய அடையாளமான கஞ்சன்சுங்கா மலையின் பானாரோமிக் வியூ இடம் பெற்றிருந்தது. இந்த வீயூவை நாம் சிக்கிம் மாநிலத்தில் இருந்து பார்க்கலாம்
3. பழைய ரூ 500 - தண்டி ஊர்வலம்

பழைய ரூ 500 - தண்டி ஊர்வலம்
இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ500 நோட்டிற்கு பின்னால் தேசப்பிதா காந்தி தண்டி ஊர்வலம் சென்றதன் நினைவாக டில்லியில் அமைக்கப்பட்ட சிலையின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
4. ரூ 100 - சிக்கிம்

ஏற்கனவே நாம் முன்னர் பார்த்தபடி பழைய ரூ100 நோட்டின் பின்புறம் உள்ள கஞ்சன்சுங்கா மலையின் வேறு கோணம்
5. புதிய ரூ 50 - ஹம்பி

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ50 நோட்டின் பின்புறம் கர்நாடகா மாநிலத்தில் இருந்து உலக புராதான சின்னமாக அறிவிக்கப்பட்ட ஹம்பி பகுதியின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளது.
6. புதிய ரூ 200 - சஞ்ச்யி ஸ்துபி

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரூ200 நோட்டில் மத்திய பிரதேச மாநிலத்தில் சஞ்சி நகரத்தில் சந்திரகுப்த மெளரியர் காலத்தில் கட்டப்பட்ட சஞ்சி ஸ்தூபியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
7. பழைய ரூ 20 - அந்தமான் கடற்கரை

பழைய ரூ 20 நோட்டில் அந்தமானின் போர்ட் பிளேயர் அருகே உள்ள ஒரு அற்புதமான கடற்கரையின் தோற்றம் இடம் பெற்றுள்ளது.
8. பழையய ரூ50 - பாராளுமன்ற கட்டிடம்

பழைய ரூ 50 நோட்டின் பின்புறம் இந்திய மக்களின் வளர்ச்சியை தீர்மானிக்கும் கட்டடமான இந்திய பாராளுமன்ற கட்டடத்தின் தோற்றம் இடம் பெற்றுள்ளது.
9. ரூ 500 - செங்கோட்டை

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ 500 நோட்டின் பின்புறம் டில்லியில் உள்ள செங்கோட்டையின் தோற்றம் இடம் பெற்றுள்ளது.
What's Your Reaction?






