அனுமன் கதை

இதோ குழந்தைகளுக்கான (Kids version) எளிய மொழியில் அனுமன் கதைகள்

Apr 18, 2026 - 11:33
 0  1
அனுமன்  கதை

ஒரு காலத்தில் அனுமன் என்ற ஒரு வலிமையான குரங்கு இருந்தான். அவன் மிகவும் நல்லவன், புத்திசாலி, தைரியமானவன்.அவனுக்கு ராமன் மீது அளவில்லாத அன்பு. ஒரு நாள், ராமனின் மனைவி சீதை காணாமல் போனாள்.அவளை ஒரு தீய அரசன் லங்கா என்ற இடத்துக்கு கொண்டு போயிருந்தான்.ராமன் கவலையில் இருந்தார் அப்போது அனுமன் சொன்னான்:  “நான் சென்று  சீதையை தேடிக்கொண்டு வருகிறேன்!”அவனுக்கு முன் பெரிய கடல் இருந்தது  அதை பார்த்தவுடன் எல்லோரும் பயந்தார்கள்…ஆனா அனுமன் பயப்படவில்லை! “  என்னால் முடியும்!” என்று நம்பிக்கை வைத்தான் ஒரே பெரிய தாவலில் கடலை தாண்டி லங்காவை அடைந்தான்.அங்கு சீதையை கண்டுபிடித்தான்  “அம்மா, கவலைப்படாதீர்கள் ராமன் உங்களை காப்பாற்ற வருகிறார்” என்று சொன்னான் சீதைக்கு மிகவும் நிம்மதி கிடைத்தது  அங்கிருந்தவர்கள் அனுமனை பிடித்தார்கள் அவரின் வாலில் தீ வைத்தார்கள் ஆனா அனுமன் என்ன செய்தான் தெரியுமா? முழு லங்காவையும் சுற்றி பறந்து
தீயை பரப்பி விட்டான்! அது அவன் தைரியத்தை காட்டியது.

நமக்கு கிடைக்கும் பாடம்
 தைரியம் இருந்தால் எதையும் செய்யலாம்
 நல்ல மனம் இருந்தால் எல்லோரும் நேசிப்பார்கள்
 நண்பர்களுக்கு உதவுவது மிக முக்கியம்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.