Haldi function : கல்யாணத்துக்கு முன்னாடி நாள் மஞ்சள் தேய்ச்சு நலங்கு வைக்கறது எதுக்குனு தெரியுமா?

திருமணத்தின் போது மணமகன், மணமகள் இருவருக்கும் உடல் முழுவதும் மஞ்சள் பூசி மஞ்சள் நீரால் குளிக்க வைப்பார்கள். வட இந்திய மாநிலங்களில் திருமணத்துக்கு முதல் நாள் இந்த ஹல்தி சடங்கு விமரிசையாகச் செய்வார்கள். தென்னிந்தியாவில் இதுவே நலங்கு என்கிற பெயரில் நடக்கிறது. இந்த சடங்குக்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன, இதனால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

Jan 28, 2025 - 15:55
Jan 28, 2025 - 15:55
 0  1
Haldi function : கல்யாணத்துக்கு முன்னாடி நாள் மஞ்சள் தேய்ச்சு நலங்கு வைக்கறது எதுக்குனு தெரியுமா?

திருமணங்களில் மஞ்சள் பூசுதல் பழங்காலத்திலிருந்தே நடந்து வருகிறது. மஞ்சளுக்கும் திருமணத்துக்கும் நிறைய பொருத்தங்கள் இருக்கின்றன. அதனால் தான் தாலியில் மாங்கல்யத்துக்கு பதிலாகக் கூட மஞ்சள் கொம்பை கட்டும் பழக்கம் இருந்திருக்கிறது. திருமணத்துக்கு முதல் நாள் செய்யப்படும் இந்த ஹல்தி சடங்குக்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் தெரிந்தால் அது உங்களுக்கு வியப்பாக இருக்கும்.

சிறிய சடங்கு

ஹல்தி என்னும் மஞ்சள் நீராட்டும் நிகழ்வு ஆரம்ப காலங்களில் மிகச் சாதாரணமாக ஒரு சடங்காக மட்டுமே செய்யப்பட்டு வந்தது. ஆனால் சமீப காலங்களில் ஹல்தி என்னும் சடங்கு தனி கவனம் பெற்றிருக்கிறது.

இதற்கென தனியே திருமணத்தைப் போலவே ஆடைகள், நகைகள், மற்ற மண்டப அலங்கரங்கள் மஞ்சள் நிறத்திலேயே செய்வது மிக கோலாகலமாக செய்யப்படுகிறது. திருமணத்துக்கு இணையாக ஹல்தியும் ஆடம்பரமாக நடத்தப்படுகிறது. ஹல்தி சடங்குக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று தெரியுமா?

மஞ்சளுடன் தொடங்கும் திருமணம்

திருமணச் சடங்குகளில் மஞ்சளுக்கு மிக முக்கியமான இடமுண்டு. மஞ்சளில் தான் தொடங்குகிறது.


இந்தியா முழுவதும் இது வெவ்வெறு விதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. சில இடங்களில் திருமணத்துக்கு முதல் நாள் இந்த சடங்கு நடைபெறும். சில இடங்களில் திருமணத்துக்கு மூன்ற நாட்களுக்கு முன்பாக நடக்கும்.

இன்னும் சில இடங்களில் திருமணத்தன்று அதிகாலையில் மணமகனும் மணமகளும் மாறி மாறி தங்களுக்கு மஞ்சள் பூசிக் கொள்வார்கள். இந்து சமய நம்பிக்கைப் படி மஞ்சள் என்பது விஷ்ணுவின் அம்சம்.. அதைக்கொண்டு தொடங்கும்போது பகவான் விஷ்ணுவின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

​அறிவியல் சொல்லும் உண்மை என்ன?

பழங்காலந் தொட்டே உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகை தான் மஞ்சள். இதில் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி டிப்ரஸன் பண்புகள் அதிக அளவில் இருக்கின்றன.

சருமத்தில் ஏற்படும் எல்லா வகையான தொற்றுக்களுக்கும் தீர்வு தரக்கூடியது இந்த மஞ்சள். இது மிகச்சிறந்த டீடாக்ஸாகவும் செயல்படுகிறது.

மஞ்சளை உடலில் அப்ளை செய்யும்போது உடல் மிகவும் ரிலாக்ஸ் அடைவதோடு சருமத்திற்கு கூடுதலான பளபளப்பையும் கொடுக்கும். குறிப்பாக நரம்பு மண்டலத்தை அதைியடையச் செய்து திருமண நேரத்தில் உண்டாகும் பதட்டத்தைக் குறைக்கச் செய்யும்.

​மஞ்சள் பற்றிய நம்பிக்கைகள்

திருமணத்தில் மஞ்சளை பயன்படுத்தும்போது மணமகன், மணமகளுக்கு கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்கும் என்கிற நம்பிக்கையும் உண்டு.


அதனால் தான் ஹல்தி சடங்கு முடிந்ததும் (நலுங்கு) அடுத்து திருமணம் முடியும் வரை மணமகனையும் மணமகளையும் வீட்டை விட்டு வெளியே அனுப்ப மாட்டார்கள்.

இப்படி மஞ்சள் பற்றிய நம்பிக்கைகள் திருமணச் சடங்குகளில் ஏராளமாக உண்டு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow