தினமும் பிஸ்கட் சாப்பிடுவீங்களா? உடலில் வரும் இந்த பிரச்சனைகளை தெரிஞ்சிக்கோங்க
தினமும் பிஸ்கட் சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்து, இதய நோய் வருவதற்கான ஆபத்தை உண்டாக்குகிறது. அந்த வரிசையில் தினமும் பிஸ்கட் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பும் சுவையான பிஸ்கட், உண்மையில் உடலுக்கு ஏற்படுத்தும் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? பிஸ்கட் தயாரிக்கும் போது அதிக வெப்பத்தில் எண்ணெய் டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) ஆக உருவாகிறது. இந்தத் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு எவ்வளவு அளவு பயன்படுத்தப்படுகிறது என்பதை பெரும்பாலான பிஸ்கட் பாக்கெட்டுகளில் குறிப்பிடுவதில்லை. இது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்து, இதய நோய் வருவதற்கான ஆபத்தை உண்டாக்குகிறது. அந்த வரிசையில் தினமும் பிஸ்கட் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
அதிக உப்பு மற்றும் தடை செய்யப்பட்ட கெமிக்கல்ஸ்:
பிஸ்கட் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கவும், சுவைக்காகவும் அதிகப்படியான உப்பு சேர்க்கப்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும், பிஸ்கட்டின் சுவை மற்றும் நிறத்திற்காக சேர்க்கப்படும் சில வேதிப்பொருட்கள் தடை செய்யப்பட்டவையாக இருக்கலாம்.
மிருதுவான தன்மைக்கு பின்னால் உள்ள உண்மை:
பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் (Gluten), சர்க்கரை, ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட் மற்றும் செயற்கை நிறங்கள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கட் எவ்வளவு மிருதுவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதில் புரதச் சத்து குறைவாக இருக்கும். மிருதுத்தன்மை குறைந்த பிஸ்கட்டுகளில் கொழுப்புச்சத்து அதிகம் இருக்கும்.
சர்க்கரை - ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு காரணம்:
பிஸ்கட்டில் அதிக அளவில் சேர்க்கப்படும் சுக்ரோஸ் (Sucrose) உடலில் சர்க்கரை அளவை திடீரென உயர்த்தி, நீண்டகாலத்தில் சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் கொழுப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை உருவாக்கும்.
சோடியம் பைகார்பனேட்டின் விளைவுகள்:
பிஸ்கட்டில் அதிக அளவில் உள்ள சோடியம் பைகார்பனேட் (பேக்கிங் சோடா) உடலில் சோடியத்தின் அளவை உயர்த்தி, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள் மற்றும் இதய பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
உடல் எடை அதிகரிப்பு:
பிஸ்கட்டில் உள்ள கெட்ட கொழுப்புச்சத்து உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்கிறது. கடைகளில் கிடைக்கும் "டிரான்ஸ் ஃபேட் ஜீரோ" என்று குறிப்பிடப்பட்ட பிஸ்கட்டுகளில் கூட, உண்மையில் இது ஜீரோவாக இருக்க முடியாது.
லோ கலோரி என்ற தந்திரம்:
"லோ கலோரி" என்று குறிப்பிடப்படும் பல பிஸ்கட்டுகளில், குறிப்பாக ஒரு க்ரீம் பிஸ்கட் குறைந்தபட்சம் 40 கலோரிகளைக் கொண்டிருக்கும். எனவே, இவற்றை குறைந்த கலோரி உணவு என்று கருதுவது தவறான எண்ணமாகும்.
காலை உணவாக பிஸ்கட் சாப்பிடுவது ஆரோக்கியமல்ல:
பலர் காலை உணவாக டீ அல்லது பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகின்றனர். இது சிறுவயதிலேயே செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்சனைகள் மற்றும் உடல் பருமனை ஏற்படுத்தும். எனவே, பிஸ்கட்டை தவிர்த்து ஆரோக்கியமான மாற்று உணவுகளை தேர்வு செய்வது நல்லது.
அந்த வரிசையில் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க பிஸ்கட் சாப்பிடுவதை குறைத்து, பழங்கள், நட்ஸ் வகைகள் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான சிற்றுண்டிகளை மாற்றாக சாப்பிட்டு வரலாம்.
What's Your Reaction?






