கொங்கு ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதத்தை இப்படி செய்யுங்கள்!
தக்காளி சாதம், தேங்காய் சாதம் போன்று சுவையான ஒன் பாட் டிஷ் வகைகளில் மிகவும் ஈஸியான, மற்றும் சுவையான டிஷ் தான் இந்த அரிசி பருப்பு சாதம்.கொங்கு மண்டலங்களில் மிகவும் பேமஸான உணவு என்றே சொல்லலாம். வீட்டிற்கு திடீரென விருந்தாளிகள் வந்து விட்டால், என்ன செய்வது என முழிக்காமல் 15 நிமிடத்தில் ரெடியாகும் இந்த அரிசி பருப்பு சாதத்தை செய்து அசத்துங்கள். பக்குவமாய் அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்..

தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
இடித்த பூண்டு - 6
சீரகம் - கால் டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில், அரிசி மற்றும் பருப்பு ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கழுவி 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து விடுங்கள்
இப்போது, அடுப்பில் ஒரு குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
பின், அதில் கடுகு, சீரகம், மிளகு போட்டு தாளித்ததும், கறிவேப்பிலை, வர மிளகாய் மற்றும் நீட்டவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வந்ததும், இடித்து வைத்துள்ள பூண்டு, தக்காளி, மஞ்சள் தூள், சாம்பார் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
அனைத்து நன்றாக வதங்கிய பிறகு அரிசி மற்றும் பருப்புக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
கலவை நன்றாக கொதித்து வந்ததும், ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விடவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
2 விசில் வந்ததும், அடுப்பை அணைத்து கொத்தமல்லியை தூவி இறக்கினால் சுடச்சுடச் சுவையான அரிசி பருப்பு சாதம் ரெடி. இதற்கு தொட்டுக்க ஊறுகாய், சிப்ஸ் வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்...ஒரு முறை செய்து பாருங்க!
What's Your Reaction?






