குழந்தைகள் விரும்பும் ஆப்பிள் மில்க்ஷேக்
"நாள் ஒன்றுக்கு ஒரு ஆப்பிள் உண்டால் மருத்துவரை தவிர்க்கலாம்" என்ற பழமொழியை கடைபிடிக்க ஒரு நல்ல வாய்ப்பு. சுவையான ஆப்பிள் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

நம்ம வீட்டு குழந்தைகளை இந்த கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டிய கடமை நமக்கு உள்ளது..எனவே தினந்தோறும் விதவிதமா ஜீஸ் செய்து அவர்களை குஷி படுத்த வேண்டும்
Directions
1. தேவையான பொருட்கள்
ஆப்பிள் - ஒன்று,
- பால் - 1 கிளாஸ்
- பேரீச்சம் பழம் - 4-5
-சுவையூட்ட தேன் அல்லது சர்க்கரை - 1 டீஸ்பூன்.
2. செய்முறை
பாலை நன்றாக தண்னீர் சேர்க்காமல் காய்ச்சவும்.
2. ஆப்பிளை தோல் மற்றும் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக கட் செய்துகொள்ளவும்.
3. பேரீச்சம் பழத்தை சிறுது நீரில் கழுவி, அதன் தொல் மற்றும் கொட்டையை நீக்கி வைக்கவும்.
4. இதை பாலில் நன்றாக ஊறவைக்கவும்.
5. ஆப்பிள் துண்டை பேரீச்சம் பழம் சேர்த்த பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
6. மிகவும் ஹெல்த்தியான ஆப்பிள் டேட் ஷேக். தேவைப்பட்டால், இதில் சர்க்கரை அல்லது தேன் சேர்த்தும் பரிமாறலாம்.

What's Your Reaction?






