அஜித் மகன் ஓட்டிய கார்ல இவ்வளவு விஷயம் இருக்குதா? இதை ஓட்ட லைசென்ஸ் கூட தேவையில்ல!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் அஜித்குமார். இவர் சினிமா மட்டுமல்லாமல் கார் ரேஸிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவரது மகன் ஆத்விக்கும் கார் ரேஸ் களத்தில் குதித்துள்ளார். தந்தை அஜித் குமாருடன் சேர்ந்து சென்னை கோ கார்ட் ரேஸ் டிராக்கில் அவரது மகன் ஆத்விக் கார் ரேஸ் பயிற்சி பெற்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் வரும் 10ம் தேதி குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தை அவரது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் அவர்களுக்க இன்ப அதிர்ச்சி தரும் வகையில் புதிய புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் இருக்கின்றனர்.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஒரு பக்கம் கவனம் செலுத்தினாலும் மற்றொரு பக்கம் தனியாக கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சர்வதேச அளவில் நடக்கும் கார் பந்தைய போட்டிகளில் பங்கேற்பதற்காக அஜித்குமார் ரேஸிங் என்ற ஒரு அணியை உருவாக்கியுள்ளார். இந்த அணி தற்போது சர்வதேச அளவில் உள்ள பேட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில் அஜித்குமாரும் ஒரு ரேஸராக இருக்கிறார். இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக்கும் தற்போது கார் ரேஸ் பயிற்சியில் இறங்கியுள்ளார். மெட்ராஸ் இண்டர்நேஷனல் சர்க்யூட்டில் உள்ள மைக்கா கோ கார்ட் ரேஸிங்கில் நடிகர் அஜித்குமார் குடும்பத்தினருடன் சென்று தனது மகனுக்க கார் பந்தைய பயிற்சியை வழங்கினர். நடிகர் அஜித்குமார் போல ஆத்விக்கும் ரேஸிங் ஆடைகள் அணிந்து கோ கார்ட் காரை ஓட்டினார். இந்த வீடியோக்கள் தான் தற்போது வெளியாகியுள்ளது.
கோ கார்ட் என்பது சிறுவர்களும் ஓட்டும் காராக இருக்கும். இது முற்றிலும் பாதுகாப்பான சூழ்நிலையில் இயங்குவதால் இதில் கார் ஓட்டுவதற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டியதில்லை. இதில் உள்ள கார்கள் ரேஸ் கார்கள் போன்ற தோற்றத்திலேயே வடிவமைக்கப்பட்டிருக்கும் ஆனால் இன்ஜின் பவர் குறைவாக இருக்கும். சிறுவர்களுக்கான கார் ரேஸ் போட்டிகள் கூட இதில் நடக்கிறது. தற்போது மைக்கா கார்ட்டிங் சர்க்யூட்டில் 3 விதமான கார்ட்டிங் கார்கள் பயன்படுத்தப்படுகைறது. வழக்கமான ரேஸ் கார் போல பெட்ரோல் மூலம் இயங்கும் கார். எலெக்ட்ரிக் ரேஸ் கார், மற்றும் சிறுவர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் கார்ட்டிங் கார் ஆகியவை பயன்பாட்டில் உள்ளன. விரைவில் 2 சீட்டர் கொண்ட கார்கார். ரோட்டக்ஸ் ரக கார்கள் எல்லாம் இதில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரேஸிங் டிராக் சுமார் 1.2 கி.மீ நீளம் கொண்டதாக இருக்கிறது.
இந்த 1.2 கி.மீ நீளத்தில் வேகமாக பயணிக்கும் வகையில் நேராக உள்ள சாலைகள், வேகமாக திரும்பும் திருப்பங்கள். உள்ளிட்ட பல சவால்கள் நிறைந்த சாலையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கோ கார்ட்டில் பயன்படுத்தப்படும் கார்களின் இன்ஜின் அதிகபட்சம் 48 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். அதே நேரம் அதிகபட்சமாக 15 ஆயிரம் ஆர்பிஎம் வரை செல்லும் திறன் கொண்டது. இதனால் அதிக வேகத்தில் இந்த காரில் பயணிக்க முடியும்.
Read more at: https://tamil.drivespark.com/off-beat/actor-ajith-son-go-cart-racing-video-viral-055163.html?utm_source=Notification-Tray&utm_medium=desktop-push-notifications&utm_campaign=Push-Notification

What's Your Reaction?