வெயில் காலத்துல கிடைக்க கூடிய வெள்ளரிக்காய் வைத்து சூப்பரான ஒரு வெள்ளரிக்காய் சாதம் செஞ்சு பாருங்க!!

How to prepare Cucumber Rice Recipe in tamil

Mar 15, 2025 - 11:28
 0  11
வெயில் காலத்துல கிடைக்க கூடிய வெள்ளரிக்காய் வைத்து சூப்பரான ஒரு வெள்ளரிக்காய் சாதம் செஞ்சு பாருங்க!!

வெயில் காலத்துல கிடைக்க கூடிய வெள்ளரிக்காய் வைத்து சூப்பரான ஒரு வெள்ளரிக்காய் சாதம் செஞ்சு

 பாருங்க!!

வெயில் காலம் ஆரம்பிச்சிடுச்சு இனிமேல் நம்ம என்ன சாப்பிட்டாலும் நமக்கு சூடு பிடிக்கும் அது மட்டும் இல்லாம இந்த வெயிலால அலர்ஜி, தடிப்பு, தோல் பிரச்சினைகள், உடல் சூடு, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். அது எல்லாம் தடுக்குறதுக்கு நிறைய தண்ணீர் குடிக்கணும் தண்ணீர் காய்கறிகள் தண்ணீர் பழங்கள் சாப்பிடணும். அந்த வகையில அந்த தண்ணீர் காய்கறிகளையும் பழங்களையும் அப்படியே சாப்பிட பிடிக்கலைன்னா அதுல ஏதாவது ஒரு ரெசிபி செஞ்சு சாப்பிடலாம். அப்படித்தான் இன்னைக்கு நம்ம வெயில் காலத்துல ரொம்ப ரொம்ப கட்டாயமா எடுத்துக்க வேண்டிய வெள்ளரிக்காய் வச்சு ஒரு சூப்பரான வெள்ளரிக்காய் சாதம் செய்ய போறோம். இந்த வெள்ளரிக்காய் சாதம் சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். வெள்ளரிக்காய் சாதத்தை குழந்தைகளுக்கு ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துவிடலாம் வீட்டிலேயே மதியம் லஞ்சுக்கு செய்யலாம். தினமும் கூட்டு பொரியல் அப்டினு செஞ்சு சாப்பிட போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி வெள்ளரிக்காய் சாதம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இதுக்கு அப்பளம் இல்லனா உருளைக்கிழங்கு பொரியல் செஞ்சு சாப்பிட்டாலே அவ்ளோ சூப்பரா இருக்கும்.

வெள்ளரிக்காய் ஜூஸ் போட்டு குடிச்சி இருப்பீங்க வெள்ளரிக்காய் சாலட் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க வெள்ளரிக்காய் பச்சடி சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த வெள்ளரிக்காய் சாதம் கொஞ்சம் வித்தியாசமா டேஸ்டாவும் இருக்கும். மாங்காய் சாதம் தேங்காய் சாதம், புளி சாதம், லெமன் சாதம் மாதிரி இந்த வெள்ளரிக்காய் சாதத்தையும் இனிமேல் அடிக்கடி செஞ்சு பாருங்க. வீட்ல இருக்க கூடிய குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் பிடிக்கும். வெள்ளரிக்காய் சாப்பிடுவது கண்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. கண்களை சுற்றியுள்ள கருவளையம் இருந்துச்சுன்னா வெள்ளரிக்காயை அப்படியே கண்ணில் வைக்காமல் சாப்பிட்டு வந்தோம் அப்படின்னாலே கருவளையம் மறைஞ்சு போகும் முகத்தில் இருக்கக்கூடிய நிறைய கரும்புள்ளிகளும் மறைந்து போகும். இவ்வளவு நன்மைகள் இருக்கக்கூடிய வெள்ளரிக்காய அப்படியே சாப்பிடுவதும் நல்லது இந்த மாதிரி ஏதாவது ரெசிபி செஞ்சு சாப்பிடுறதும் நல்லது. அந்த வகையில இப்ப வாங்க இந்த சுவையான வெள்ளரிக்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்

2 வெள்ளரிக்காய்

1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு

1 டீஸ்பூன் கடலை பருப்பு

1 கப் வடித்த சாதம்

2 காய்ந்த மிளகாய்

1/4 டீஸ்பூன் மிளகு தூள்

1 கொத்து கறிவேப்பிலை

உப்பு  தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

1 டீஸ்பூன் வேர்க்கடலை

1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்

 செய்முறை

 முதலில் வெள்ளரிக்காயை துருவி எடுத்துக் கொள்ளவும்.  ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை கடலைப்பருப்பு வேர்க்கடலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.  காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பிறகு துருவி வைத்துள்ள வெள்ளரிக்காயை சேர்த்து வதக்கவும்.  தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி தண்ணீர் வற்றி வந்ததும் சாதம் போட்டு கிளறி இறக்கினால் சுவையான வெள்ளரிக்காய் சாதம் தயார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0