நம்ம தூத்துக்குடிக்கு இன்று பிறந்த நாள்:
அக்டோபர்-20ம் தேதி 1986 அன்று, பழைய திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து செதுக்கப்பட்ட ஒரு புதிய மாவட்டம், தமிழ்நாட்டில் பிறந்து, தெற்கில் சுதேசி இயக்கத்தை வழிநடத்திய ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த ஒரு சிறந்த தேசிய தலைவரான வ.உ.சிதம்பரனாரின் பெயரால் சூட்டப்பட்டது.
*வ.உ.சிதம்பரனார் பெயரில் தோற்றுவிக்கப்பட்ட இம்மாவட்டம், 1997-லிருந்து தூத்துக்குடி மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது.
*தமிழ்நாட்டின் நுழைவு வாயில் என்றழைக்கப்படும் தூத்துக்குடி அதற்கென தனி வீரம், சிறந்த பண்பாடு மரபுகள், வீரவரலாறு ஆகியவையும் கொண்டிருக்கிறது.
*தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம், உப்பு உற்பத்தி, மீன்பிடித்தொழில், ஏற்றுமதி, இறக்குமதி என பல்வேறு தொழில்கள் எப்போதுமே இருந்து வந்திருக்கின்றன.
*நில அமைப்பை பொறுத்தவரையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களையும் கொண்ட மாவட்டம் இது.
*தமிழகத்தின் 10-ஆவது மாநகராட்சியாக (தூத்துக்குடி மாநகராட்சி), ஆகஸ்ட் 5, 2008-ல் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
*கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்று ரீதியில், பரதவர் இன மக்கள் மீன் பிடித்தும், அதிகளவில் முத்துகுளித்தும் வந்தனர். இன்றளவும் இம்மக்கள்,சங்கு குளிக்கும் தொழில் செய்கின்றனர். இதை நாம், அகநானூறு 350-வது அதிகாரத்தில் காணலாம்.
பெயர் காரணம்: நீர் நிறைந்த நிலத்தைத் தூத்து, துறைமுகமும், குடியிருப்பும் தோன்றிய ஊர் என்பதால் 'தூத்துக்குடி' என்றாயிற்று. வாகைக்குளம், கங்கைக்கொண்டான் கல்வெட்டுக்களில், இவ்வூர் 'தூற்றிக்குடி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.
*பொ.ஊ.மு. 123இல் தாலமி என்ற கிரேக்கப் பயணி, தனது பயண நூலில் "சோஷிக் குரி"( சிறு குடி) சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான், 'தூத்துக்குடி' என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.
சங்க காலம்: சங்க காலத்தைச் சேர்ந்த வேள்விக்குடி சாசனம், தூத்துக்குடியைப் பற்றி குறிப்பிடுகிறது.
இரும்பு, செம்பு காலங்களைச் சேர்ந்த நாகரிகங்களை வளர்த்தெடுத்த ஆதிச்சநல்லூர், ஒரு புராதன பண்பாட்டு சின்னமாகும்.
சிறப்புப் பெயர்கள்: தூத்துக்குடி நகருக்கு, 'திருமந்திர நகர்' என்றும், 'முத்துநகர்' என்றும் வேறு சிறப்பு பெயர்களும் இருக்கின்றன.
திருமந்திர நகர்: தூத்துக்குடிக்கு திருமந்திர நகர் என்ற பெயர் வந்ததற்கு ஒரு தனிக்கதை உண்டு. ராமன் திருமந்திரங்களை உச்சரித்த இடம் என்பதால் 'திருமந்திர நகர்' என்று பெயர் வந்துவிட்டது என்று ஒரு சிலர் கருத்து சொல்கின்றனர்.
முத்துநகர்: ஆதிகுடியான பரதவர் இன மக்கள், தூத்துக்குடியில் அதிகளவில் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குலதொழில், 'மீன் பிடித்தல்' மற்றும் கடலுக்கு அடியில் சென்று 'முத்து எடுப்பது' தான். இவர்கள் தொழில் செய்வதை வைத்து முத்துக்கள் அதிகம் கிடைத்த நகரம் என்பதால் ”முத்து நகர்: என்று பெயர் ஏற்பட்டது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் இரயிலுக்கு, முத்து நகர் விரைவு இரயில் என்று பெயர்.
துறைமுகம்: ஆங்கிலேயர் ஆட்சியில் தூத்துக்குடி துறைமுகம், 1913-ல் மன்னார் வளைகுடா அருகே அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம், ஒரு 'இயற்கைத் துறைமுகம்'. இப்பகுதி, புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது.
வர்த்தகம்; ஏற்றுமதி இறக்குமதி கையாளும் நிறுவனங்கள்.உப்பளங்கள். ஸ்பிக் உரத்தொழிற்சாலை.
தூத்துக்குடி அல்காலி இரசாயன நிறுவனம். தேங்காய் எண்ணெய் ஆலைகள். கடல் சார் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.
துறைமுக வணிகம்: பிப்ரவரி 1996 ஆம் ஆண்டில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஐஎஸ்ஓ 9002 என்னும் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கிழக்குக் கடற்கரையோரத்தில் சென்னைக்கு அடுத்த தூத்துக்குடியில், இங்கு ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் நடைபெறுகிறது. இங்கு முக்கிய அமைப்புகள் பெரும்பங்காற்றி வருகின்றன.
போக்குவரத்து: தூத்துக்குடி நகரமானது சாலை, இரயில் மற்றும் விமானப் போக்குவரத்து மூலம் மற்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்து: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், தூத்துக்குடியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு, தினசரி பேருந்து சேவைகளை இயக்குகிறது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், பெங்களூரு, சென்னை, வேலூர், திருப்பதி மற்றும் கன்னியாகுமரி போன்ற முக்கியமான நீண்ட தொலைவிலுள்ள நகரங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது. தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாக இருப்பதால், நிறைய கொள்கலன் லாரிகள், இந்நகரத்திற்கு வந்து, செல்கின்றன. 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, நகரத்திற்குள் நுழையும் கொள்கலன் லாரிகளின் எண்ணிக்கை 1000 ஆகும்.
*இந்நகரத்தில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன; பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் மீனாட்சிபுரம் பிரதான சாலையிலும்,
*தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் எட்டையபுரம் சாலையிலும் அமைந்துள்ளது. இந்த இரண்டு பேருந்து நிலையங்களிலிருந்தும் சுமார் 700 பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன.
ரெயில் போக்குவரத்து: தூத்துக்குடி இரயில் நிலையமானது, இந்தியாவின் பழமையான மற்றும் பிரபலமான இரயில் நிலையங்களில் ஒன்றாகும். தூத்துக்குடியில் இருந்து நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படுகிறது. தூத்துக்குடியை இணைக்கும் இரயில் பாதைகள் சமீபத்தில் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன.
*தூத்துக்குடியிலிருந்து சென்னை, மைசூர், திருநெல்வேலி ஆகியவற்றுக்கு, தினசரி இரயில்கள் இயக்கப்படுகின்றன.முத்து நகர் அதிவிரைவுத் தொடர்வண்டியானது, தெற்கு இரயில்வேயின் முக்கிய ரயில்களில் ஒன்றாகும்.
வானூர்தி நிலையம்: தூத்துக்குடி வானூர்தி நிலையமானது, நகரின் மையப்பகுதியிலிருந்து 14 கி.மீ. (9 மைல்) தொலைவிலுள்ள வாகைக்குளத்தில் உள்ளது.
*இங்கிருந்து இன்டிகோ விமானம் சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு, ஸ்பைஸ் ஜெட் விமானம் சென்னைக்கும் இயக்கப்படுகின்றன.
சிறப்புகள்:
*இங்கு தயாராகும் உப்பு, ஆசியாக் கண்டத்திலேயே மிகச் சிறந்த உப்பாகும்.
*இங்கு சுடுமனைகள் (பேக்கரிகள்) அதிக அளவில் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் 'மெக்ரூன்' எனப்படும் இனிப்பு மிகவும் சுவையானது.
*புரோட்டாவிற்கு பெயர் பெற்ற விருதுநகருக்கு அடுத்து தூத்துக்குடி இரண்டாமிடத்தில் இருக்கிறது.
*இங்குள்ள பனிமயமாதா பேராலயத் தங்கத்தேர் திருவிழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிறப்பு பெற்ற ஒரு விழாவாகும்.
சுற்றுலாத் தலங்கள்:
தூத்துக்குடியை பொறுத்தும் மட்டில் இங்கே சுற்றுதலங்கள் என்ற பெயிரில் இவ்விடத்தையும் குறிப்பிட இயலாது, ஏனென்றால் இங்கு வழிபாட்டு தலங்களும்.,வரலாற்று சின்னங்களும், வீரத்தின் அடையாளமும்,மாக கவிகள் பிறந்த இடங்களாகவும் தான் காணப்படுகின்றன. எனவே இங்குள்ள இடங்கள் அனைத்தையும் காணத்தக்க இடங்கள் என்றே குறிப்பிட வேண்டும்.
காணத்தக்க இடங்கள்:
எட்டையாபுரம்: எட்டையாபுரம் புரட்சி கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் பிறந்த ஊர் எட்டையாபுரம் ஆகும்.
அவர் வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக அரசால் மாற்றப்பட்டுள்ளது. தமிழ் புலவரான உமறுபுலவரின் தான்ஷா இவ்வூரில் அமைந்துள்ளது.
அய்யனார் சுணை (அய்யனார் சுணை கோயில்): அய்யனர் சுணை திருச்செந்தூரிலிருந்து 4 கி.மீ.தொலைவிலும் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் ஊற்றி பெருகும் இயற்கையான நீருற்று இதன் அருகில் ஒரு அய்யனார் கோவில் உள்ளது மனற்குனக்றுகள் மற்றும் காடுகள் சூழ்ந்த இந்த இடம் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது
கழுகுமலை வைணவ கோவில் (கழுகுமலை சமண கோவில்): கழுகுமலை வையணவ கோவில் கோவில்பட்டியிலிருந்து 21 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. வைணவகோவிலான இக்கோவில் ஆதிநாதன்நேமிநாத மகாவீர பர்வநாதர், பாகுபலி ஆகியோரின் சிலைகள் உள்ளன . இங்கே பிரதித்தி பெற்ற வெட்டுவான் கோவிலும் உள்ளது. பாண்டிய மன்ர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இக்கோவில் இப்போதும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கிறது.
குலசேகரபட்டிணம் (குலசேகரபட்டிணம் கோயில்): இத்திருத்தலம் கன்னியாகுமாரி – திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. முத்தாரம்மன் கோவில் திருச்செந்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. குலசேகரபட்டிணத்தில் சிறப்பு மிக்க முத்தாரம்மன் கோவில் வங்காளவிரிகுடா கடற்கரையின் அருகாமையில் அமைந்துள்ளது.
இது ஏறக்குறைய 150 வருடங்கள் பழமையானது. இங்க ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் தசராப் பண்டிகை கொண்டாப்படுகிறது. கிராமிய கலைகள் மற்றும் தெய்வ அவதாரங்களின் உருவங்கள் வேடம் அணிந்து பக்தா்கள் இத்திருத்தலத்திற்கு வருகை புரிந்து அம்மன் அருள் பெற்று செல்கின்றனர்.
பனிமயமாதா ஆலயம் (பனிமயமாதா ஆலயத் தோற்றம்): தூத்துக்குடி நகரின் கடற்கரை ஒரத்தில் அமைந்துள்ள பணிமயமாதா ஆலயம் கிறிஸ்தவர்களின் பிரசித்தப் பெற்ற வழிப்பாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயம் கி.பி. 1711 போர்த்துகிசியர்காளால் நிர்மாணிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி பனிமயமாதா திருவிழா கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
ஆதிச்சநல்லூர் (ஆதிச்சநல்லூர் அகலாய்வு): திருச்செந்தூர் திருநெல்வேலி நெடுங்சாலையில் திருநெல்வேலி 25.கி.மீ தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது பழங்காலங்களில் இறந்தவர்களை மண்பானையில் புதைக்கும் வழக்கம் இருந்தது. இங்கு அகல்வாராய்ச்சின் மூலம் மண் பாண்ட தாழி மற்றும் பழங்காலத்தில் உபயோகப்படுத்திய பாத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இந்த இடம் தற்போது தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்சி துறையின் கட்டுபாட்டில் உள்ளது.
காயல்பட்டிணம் (காயல்பட்டிணம் கடற்கரை): காயல்பட்டிணம் கொற்கைக்கு அடுத்தாற்போல் பிரசித்திபெற்ற துறைமுகமாக கி.பி 12 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் செயல்பட்டது. இது திருச்செந்தூரலிருந்து 18 கி.மீ தொலைவில் தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது வங்காளவிாிகுடாவில் அமைந்துள்ள சிறந்த கடற்கரை ஒன்றாகும்.
கயத்தார் (கயத்தார் மண்டபம்): கயத்தார் திருநெல்வேலியிலிருந்து மதுரை செல்லும் சாலையில் 25 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயேரை எதிர்த்து முதலில் குரல் கொடுத்த சுதந்திர போராட்ட வீரா் வீர பாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயேர் இவ்விடத்தில் தூக்கிலிட்டனர். வீரம் செறிந்த இச்சுதந்திர போராட்ட வீரரின் நினைவு சின்னம் அவரை தூக்கிலிடப்பட்ட இடத்திலேயே தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
கொற்கை பழைய துறைமுகம் (கொற்கை துறைமுகம்): சங்க காலத்தில் பாண்டிய மன்னர்கள் ஆட்சியிலிருந்து கொற்கை துறைமுகம் செயல்பட்டு வந்துள்ளது.தூத்தக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. பழங்கால பிரசித்துபெற்ற வெற்றிவேலம்மன் கோவில் இப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.
மணப்பாடு (மணப்பாடு தேவாலயம்): இத்திருத்தலம் திருச்செந்தூரிலிருந்து 18 கி.மி. தொலைவிலும் திருநெல்வேலியிருந்து 70 கி.மி. தொலைவிலும் உள்ள மணப்பாடு என்னும் கிராமத்தில் திருச்சிலுவை ஆலயம் அமையப்பட்டுள்ளது.
மெஞ்ஞனபுரம் (மெஞ்ஞனபுரம் தேவாலயம்): திருச்செந்தூரிலிருந்து 13 கி.மி. தொலைவில் அமைந்துள்ள இக்கிராமம் ஒரு பழமையான கிராமம் ஆகும். 1847 ஆம் ஆண்டு தூய பொலின் ஆலயம் இவ்வூரில் கட்டப்பட்டுள்ளது. இது 110 அடி நிலத்திலும் 55 அடி அகலத்தில் கட்டப்பட்ட இவ்வாலயத்தின் முகப்பில் 192 அடி உயரத்தில் வானளாவிய கோபுரம் அமைந்துள்ளது. இத்திருத்தலம் இம்மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாலயங்களில் மிக உயரமான கோபுரத்துடன் கூடிய பெரிய தேவாலயமாகும்.
நவகைலாயம்: நவகைலாய திருத்தலங்கள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது.
1.பாபநாசம் (சூரியன்) 2.சேரன்மகாதேவி (சந்திரன்) 3.கோடகநல்லூர் (செவ்வாய்) 4.குன்னத்தூர் (ராகு) 5.முறப்பநாடு (குரு) 6.திருவைகுண்டம் (சனி) 7.தென்திருப்பேரை (புதன்) 8.இராஜபதி (கேது) 9.சேந்தபுமங்கலம் (சுக்கிரன்)
நவதிருப்பதி: தூத்துக்குடி மாவட்டத்தில் 9விஷ்ணு கோவில்களிலும் அருகாமையில் அமைந்துள்ளனர். இக்கோவிலில் வழிபடுவதின் மூலம் நவக்கிரங்களால் எற்படுகின்ற தீமையினின்று விடுதலைக் கிடைக்கும் இக்கோவில் பண்டைக்கால கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளது.
பாஞ்சாலங்குறிச்சி (பாஞ்சாலங்குறிச்சி கோட்டை): பாஞ்சாலங்குறிச்சி கிராமம் தூத்துக்குடியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க சிறிய ஊராகும். இவ்வூரில் பிறந்த மக்களால் போற்றப்பட்ட வீரபாண்டியக்கட்டபொம்மன் கி.பி. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரசை எதிர்த்து குரல் எழுப்பினார்.
வீரப்பாண்டிய கட்டபொம்மனுக்கு நினைவுச் சின்னம் 1974ல் தமிழக அரசால் கட்டப்பட்டது. நினைவுச்சின்னம் கட்டிடத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் வீர தீரங்களையும் அவர்கால வரலாற்று சான்றுகளையும் வெளிப்படுத்தும் முகமாய் அமைந்துள்ளன. கோட்டைக்குள் ஸ்ரீதேவி சக்கம்மாள் கோவில் அமைந்துள்ளது.
கோட்டையின் அருகே போரில் மரணம் அடைந்த ஆங்கிலேய போர் விரர்களை புதைக்கப்பட்ட இடம் உள்ளது. ஆங்கிலேயர்களால் அனுமதிக்கப்பட்ட பழைய கோட்டையின் எஞ்சியப் பகுதிகளை தொல்லியில் துறையினரால் பராமரிக்கப்பட்டது.
திருச்செந்தூர் (திருச்செந்தூர் முருகன் கோவில்): திருச்செந்தில் உள்ள அருள்மிகு முருகன் திருக்கோவில் தென் இந்தியாவில் உள்ள புனித தலங்களில் ஒன்றாகும் இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.இக்கோவில் தூத்துக்குடியிலிருந்து 40கி.மீ தொலைவில் அமைந்துள்ளது . கி.பி.17ம் நூற்றாண்டில் இத்திருத்தலத்தின் கோபுரம் 157 அடி உயரத்தில் 9 அடுக்குகளை கொண்டுள்ளது
இக்கோவிலில் வள்ளிகுகை மற்றும் நாலிக்கிணறு ஆகியவை புனித இடமாக கருதப்படுகிறது.
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலம்: புனித பரலோக மாதா திருத்தலம் என்பது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் காம நாயக்கன்பட்டி புதுமை நகரில் உள்ள இந்தியாவின் புகழ் பெற்ற கத்தோலிக்க பேராலயம் ஆகும். இத்திருத்தலம் கி.பி 1684-இல் பங்குத்தந்தை சான் டி பிரிட்டோவால் சிறிய அளவில் கட்டப்பட்டது. பின்னர் கி.பி. 1850-இல் விரிவுபடுத்தப்பட்டது. இந்த ஆலயம் புனித பரலோக மாதாவின் பெயரால் கட்டப்பட்டதாகும்.
*இத்தாலி நாட்டுக் கவிஞரும், தேம்பாவணி இயற்றிய வீரமாமுனிவர் இத்திருத்தலத்தில் பங்குத்ததந்தையாக
l712 முதல் 1715 வரை பணியாற்றினார்.
திருவிழாக்கள்; (முக்கிய விழா மற்றும் நிகழ்வுகள்);
*முத்தாரம்மன் கோவில் திருவிழா
*பனிமயமாதா திருவிழா
*திருச்செந்தூர் சஷ்டி
*திருச்செந்தூர் வைகாசி விவசாகம்
*கோவில்பட்டி செண்பகவல்லியம்மன்
*காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருவிழா
தூத்துக்குடி கல்வி, மருத்துவம், தொழில்துறைகள், போக்குவரத்து, பொழுதுபோக்கு, வேலை வாய்ப்புகள் என அனைத்திலும் சிறந்த மாவட்டமாக விளங்குகிறது. தூத்துக்குடிக்கு இன்று பிறந்தாள் வாழ்த்துக்கள் கூறி மகிழ்வோம்.