ஆலோவீன் வரலாறு (The History of Halloween)
ஆலோவீன், அமெரிக்காவில் மிகவும் பிரபலமான பண்டிகை. இப்போது குழந்தைகள் ஜாதுகர்கள், பேய்கள், மர்மங்கள் மாதிரி வேடமணிந்து "டிரிக்-அர்-ட்ரீட்" செய்து மகிழ்கிறார்கள். இந்த ஆலோவீன் எப்படிப் பிரபலமான கொண்டாட்டமாக மாறியது என்பதை ஆராய்வோம்.
ஆலோவீன் (Halloween)
என்பது அக்டோபர் 31 அன்று அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதாகக் கருதிக் கொண்டாடப்படும் நிகழ்ச்சி ஆகும். இக்கொண்டாட்டத்தின் அடிப்படைகள் சம்ஹைன் எனக் கொண்டாடப்படும் கெல்ட்டியத் திருவிழாவிலும் மற்றும் கிருத்துவர் புனித நாளான அனைத்து துறவியர் தினத்திலும் இருந்தாலும் இன்று இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது.இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.
மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.
வரலாறு/ History of Halloween
ஆலோவீன் பழமையான செல்டிக் திருவிழாவான சமஹைனிலிருந்து வந்தது. இந்த திருவிழா கேல் நாகரிகத்தின் அறுவடைக் காலங்களில் நவம்பர் 1ல் கொண்டாடப்பட்டது. இந்த நாளில், செல்ட் மக்கள் தங்களது முன்னோர்களின் ஆவிகளுக்கு மரியாதை செலுத்தி, தீய ஆவிகளை துரத்த வேண்டும் என்று நம்பினர். அதற்காக அவர்கள் முகமூடிகளையும் ஆடைகளையும் அணிந்து கொள்வார்கள். இந்த கொண்டாட்டத்தில், ஒரு சிறிய தீயை எரித்து அதில் அழிக்கவேண்டிய பொருட்களை எரிப்பார்கள்.
ஆலோவீன் அடையாளங்கள்/ Halloween Symbols (Jack-O-Lantern)
ஆலோவீன் நாளன்று பழைய எலும்புக்கூடுகளை முன்னிலைப்படுத்துவது நமது முன்னோர்களை நினைவுபடுத்துகின்றது. ஐரோப்பாவில், முதலில் டர்னிப் காய்கறிகளில் தீய ஆவியின் முகம் செதுக்கப்பட்டு, மெழுகுவர்த்தியால் ஏற்றப்பட்டது. இது "ஜேக்-ஓ-லாந்தர்" என்று அறியப்படுகிறது.
இருந்தாலும், அமெரிக்காவில் டர்னிப்புக்குப் பதிலாக பறங்கிக்காய்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆலோவீனோடு தொடர்புடைய உருவச் சித்திரங்கள் மற்றும் மரபுகள், கோதிக் மற்றும் திகில் இலக்கியங்கள், பிராங்கன்ஸ்டீன், தி மம்மி போன்ற படங்கள் ஆகியவற்றிலிருந்து வந்துள்ளன. ஆலோவீன் பண்டிகையில், வீடுகள் ஆரஞ்சு மற்றும் கருமை வண்ணங்களில் அலங்கரிக்கப்படுகின்றன, இது இருளையும் நெருப்பின் வண்ணத்தையும் குறிப்பிடுகிறது.
ஹாலோவீன் கொண்டாட்டம்/ Trick or Treat
பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா? குழந்தைகள் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் சென்று, "பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா?" என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது பணம் கொடுத்து அனுப்புவர்.
ஆடை அலங்காரம்
ஹாலோவீன் ஆடை அலங்காரங்கள் பெரிய பேய்கள், சூனியக்காரிகள், எலும்புக்கூடுகள் மற்றும் பிசாசுகள் போன்ற அடையாளங்களை கொண்டது. தொலைக்காட்சி, திரைப்படங்கள் மற்றும் நவீன நாகரிகத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்த ஆடை அலங்காரங்கள் அமைகின்றன.
அமெரிக்காவில் யுனிசெப்
அமெரிக்காவில், யுனிசெப் நிதி திரட்டும் திட்டம் இந்த கொண்டாட்டத்துடன் சேர்ந்து செயல்படுகிறது. பள்ளிகள், மாணவர்களுக்கு சிறு பரிசுப் பெட்டிகளை கொடுத்து, வீடுகளுக்கு அனுப்புவர். அவர்கள், யுனிசெப்புக்கான நிதியைப் பெற்றுத் திரும்புவர். இதுவரை 118 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை மாணவர்கள் திரட்டியுள்ளனர்.
What's Your Reaction?