1 கப் ரவை வெச்சு.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை செஞ்சு பாருங்க..
Rava Snacks Recipe in tamil
1 கப் ரவை வெச்சு.. ஈவ்னிங்
இந்த ஸ்நாக்ஸை செஞ்சு
பாருங்க..
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? வடை, பஜ்ஜி போன்றவற்றை உங்கள் குழந்தைகள் சாப்பிடமாட்டார்களா? சற்று வித்தியாசமான, அதே சமயம் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்குமாறு கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் 1 கப் ரவை உள்ளதா? அப்படியானால் அந்த ரவையைக் கொண்டு அட்டகாசமான ஸ்நாக்ஸை செய்யுங்கள். இந்த ஸ்நாக்ஸ் 2-3 நாட்கள் வரை வைத்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்
கீழே ரவா ஸ்நாக்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பொரிப்பதற்கு தேவையான அளவு
* தண்ணீர் – சிறிது
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் கசூரி மெத்தியை கைகளால் நசுக்கி சேர்க்க வேண்டும். பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள் சேர்த்து ஸ்பூன் கொண்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை நன்கு சூடேற்றி ஊற்றி, ஸ்பூன் கொண்டு நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி சற்று தளர்வாக பிசைந்து கொண்டு, 30 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். 30 நிமிடம் கழித்து, மாவை கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும் பின் பிசைந்த மாவை சிறிது எடுத்து, ஒரு முட்கரண்டியின் அடிப்பகுதியில் வைத்து பரப்பி அப்படி உருட்டி விட வேண்டும். அப்படி உருட்டும் போது முட்கரண்டியின் அச்சானது மாவில் விழுந்து, ஒரு அழகான தோற்றத்தைத் தரும். இதேப் போல் அனைத்து மாவையும் உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து, மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ரவா ஸ்நாக்ஸ் தயார். "
What's Your Reaction?