பாசிப்பருப்பு பாயாசம் இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க..!

பொதுவாகவே, குழந்தைகளுக்கு பாயாசம் என்றாலே மிகவும் பிடிக்கும். அதுவும், பாசிப்பருப்பு பாயாசம் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு அதன் சுவை அருமையாக இருக்கும் இந்த பாசிப்பருப்பு பாயாசம் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது வெறும் பத்தே நிமிடம் போதும் முக்கியமாக இது ஆரோக்கியமானதும் கூட. சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் குழந்தைகளுக்கு பிடித்த பாசிப்பருப்பு பாயாசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Feb 7, 2025 - 17:01
Feb 7, 2025 - 16:51
 0  5

1. பாசிப்பருப்பு பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் - 2
பால் - 1 கப்
முந்தரி - 3/4 கப்
உலர் திராட்சை - 3/4 கப்
தேங்காய் - 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
நெய் - தேவையான அளவு

2. செய்முறை :

செய்முறை :

பாசிப்பருப்பு பாயாசம் செய்ய முதலில், அரை மூடி தேங்காயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு, ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய தேங்காயை போட்டு வறுத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது, அதே கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி சூடானதும் அதில், எடுத்து வைத்த பாசிப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அதை ஒரு குக்கரில் போட்டு நன்கு குழைய வேக வைத்து எடுக்கவும். 

பாகு தயாரிக்க அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி எடுத்து வைத்த வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் அதை வடிகட்டி, வேக வைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். இதனுடன் பால் சேர்த்துக் கொள்ளுங்கள் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

மறுபுறம், அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில், சிறிதளவு நெய் ஊற்றி, சூடானதும் அதில் முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்கவும். பிறகு வறுத்த இதனை நெய்யுடன் கொதிக்கும் பாயாசத்தில் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். சிறிது நேரம் கழித்து ஏலக்காயை இடித்து பாயாசத்தில் போட்டு ஒரு முறை கிளறி விடுங்கள். பாயாசம் நன்றாக கொதித்ததும், அதில் வறுத்து வைத்த தேங்காயை இதில் சேர்க்கவும். ஒருவேளை உங்களுக்கு தேங்காயை இப்படி போட விரும்பவில்லை என்றால், நீங்கள் தேங்காயை நெய்யில் வறுத்து கூட போடலாம். பிறகு 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டுங்கள். அவ்வளவுதான் டேஸ்ட்டான மற்றும் சத்தான பாசிப்பருப்பு பாயாசம் ரெடி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow