வீட்டிலேயே பன்னீர் செய்வது எப்படி?

அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் உணவுப் பொருள் தான் பன்னீர். இந்த பன்னீரை நீங்கள் கடைகளில் தான் வாங்கி சமைத்திருப்பீர்கள். ஆனால் இதை எளிதில் வீட்டிலேயே தயாரிக்கலாம். அதுவும் வெறும் இரண்டு பொருட்களைக் கொண்டே 30 நிமிடத்தில் தயாரிக்கலாம். உங்களுக்கு வீட்டில் எளிய முறையில் எப்படி பன்னீர் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வீட்டில் தயாரிக்கும் பன்னீர் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

Jan 9, 2025 - 16:00
Jan 9, 2025 - 16:00
 0  3

1. தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:
  • கொழுப்புமிக்க பால் - 2 லிட்டர்
  • தயிர் - 1/2 கப்

2. செய்முறை

செய்முறை
  • முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
  •  பால் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தயிரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். இப்போது பால் திரிந்து போக ஆரம்பிக்கும். பால் நன்கு திரிந்து நீர் முழுமையாக பிரிந்த பின் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
  •  பின்பு ஒரு பெரிய வடிகட்டியின் மேல் சுத்தமான வெள்ளைத் துணியை விரித்த, அதில் திரிந்த பாலை ஊற்றி வடிகட்ட வேண்டும். அப்படி வடிகட்டும் போது குளிர்ந்த நீரை ஊற்றி கையால் கிளறிவிட்டு வடிகட்டுங்கள்.
  •  பிறகு அந்த துணியை மூட்டை போட்டு நன்கு கட்டி, அதில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து வெளியேற்றி, அதன் மேல் ஒரு கனமான பொருளை 30 நிமிடம் வைத்து எடுத்தால், பன்னீர் தயார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow