கிரீமியான காளான் சூப் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

How to prepare Mushroom Soup in tamil

Feb 17, 2025 - 15:02
 0  2
கிரீமியான காளான் சூப் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

 

கிரீமியான காளான் சூப் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

கடையில போய் நீங்க காளான் சூப் குடிச்சிட்டு இருக்கீங்களா? இனிமேல் கடையில போய் குடிக்காதீங்க வீட்டிலேயே இந்த மாதிரி ஒரு சூப்பரான காளான் சூப் செஞ்சு ஒரு வீட்டுல இருக்குறவங்களுக்கும் கொடுத்தீங்கன்னா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. மைதா மாவு கிரீம் சோள மாவு எதுவுமே சேர்க்காமல் நல்ல கிரீமியான இந்த மாதிரி ஒரு மஸ்ரூம் சூப் வீட்லயே செய்ய முடியும் அப்படின்னு சொன்னா நம்ப முடியுதா? கண்டிப்பா இதே செய்முறையில் செஞ்சு பாருங்க. ஒரு சூப்பரான ரிச்சான காளான் சூப் உங்களுக்கு கிடைக்கும். -விளம்பரம்- கடையில போய் நிறைய காசு கொடுத்து குடிக்காம வீட்டிலேயே இந்த மாதிரி சிம்பிளா சூப்பரா செஞ்சு பாருங்க கண்டிப்பா செம டேஸ்டா இருக்கும். இந்த சுவையான காளான் சூப் ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே போட்டி போட்டுட்டு குடிப்பாங்க. வீட்ல யாருக்காவது சளி இருமல் பிரச்சனை இருந்துச்சுன்னா இந்த மஸ்ரூம் சூப் செஞ்சு மிளகுத்தூள் கொஞ்சம் தூக்கலா போட்டு கொடுத்து பாருங்க கண்டிப்பா இருமல் சளி சரியாகிவிடும். இந்த சுவையான சூப் ரெசிபிக்கு எல்லாருமே ரெண்டு டம்ளர் 3 டம்ளர்ன்னு வாங்கி குடிப்பாங்க அதனால கொஞ்சம் நிறையவே செஞ்சு வச்சுக்கோங்க. நிறைய மசாலாக்கள் இல்லாமல் குறைவான மசாலாக்கள் வைத்து அதே சமயத்துல ஒரு சூப்பரான ரிச்சான வீட்லையே கண்டிப்பா செய்ய முடியும். ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் இருக்கும் ரெஸ்டாரண்ட்ல இந்த சூப் நிறைய விலை இருக்கும் ஆனா வீட்ல செஞ்சீங்கன்னா ரொம்ப குறைவான விலையில் பிராமாதமான சூப் குடிக்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான காளான் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

தேவையான பொருட்கள்

1 கப் காளான், 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு, 5 பல் பூண்டு, 1 டீஸ்பூன் ஆர்கானோ, 1 டீஸ்பூன் மிளகு தூள், 2 பெரிய வெங்காயம்,          2 பச்சை மிளகாய், ஸ்பிரிங் ஆனியன் சிறிதளவு ,1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில்,1 டீஸ்பூன் பட்டர் ,10 முந்திரி பருப்பு.

செய்முறை

 ஒரு கடாயில் பட்டர் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். காளானை கழுவி சுத்தம் செய்து நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். நன்றாக வதக்கியதும் கோதுமை மாவு சேர்த்து கலந்து விடவும். அதிலிருந்து இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு காளானை எடுத்து மிக்ஸி ஜாரில் ஆற வைத்து சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஊற வைத்த முந்திரிப்பருப்பு சேர்த்து நன்றாக அரைத்து மறுபடியும் கடாயில் சேர்த்துக் கொள்ளவும். அனைத்தும் சேர்த்து பத்து நிமிடம் நன்றாக வெந்ததும் ஆர்கானோ மிளகுத்தூள் ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து இறக்கினால் சுவையான காளான் சூப் தயார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow