வித்தியாசமான இந்த மீன் பிரைட் ரைஸ் இப்படி செஞ்சு பாருங்க முழுவதும் காலி ஆகிடும்!!
How to prepare Fish fried Rice Recipe in tamil

வித்தியாசமான இந்த மீன் பிரைட் ரைஸ் இப்படி செஞ்சு பாருங்க முழுவதும் காலி ஆகிடும்!!
சிக்கன் ஃபிரைடு ரைஸ், எக் ஃபிரைடு ரைஸ், மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ், வெஜிடபிள் பிரைட் ரைஸ், கோபி ஃப்ரைட் ரைஸ் நிறைய ரெசிபிஸ் சாப்டுருப்பிங்க. ஆனா ரைஸ் தடவை இந்த மாதிரி ஒரு சுவையான மீன் ஃப்ரைடு ரைஸ் வீட்டிலேயே செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இந்த மீன் பிரைட் ரைஸ்க்கு நீங்க எந்த மீன் வேணும்னாலும் வாங்கி அத நல்லா வறுத்து சதையை தனியா எடுத்து வச்சு எப்பவும் போல நம்ம ப்ரைட் ரைஸ் செய்ற மாதிரி செஞ்சு சாப்பிடலாம். இதுல நம்ம பாறை மீன் வெச்சி எப்படி செய்றதுன்னு பார்த்திருக்கோம் ஆனா உங்களுக்கு ஜிலேபி கட்லா அப்படின்னு எந்த மீன் பிடிக்குதோ அந்த மாதிரி பெரிய மீன் வாங்கி செஞ்சு சாப்பிடுங்க அப்பதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும் சின்ன மீன் இந்த பிரைட் ரைஸ்க்கு நல்லா இருக்காது.
மீன் பொரிச்ச எண்ணெயிலேயே ஃப்ரைட் ரைஸ் செய்யும் போது டேஸ்ட் இன்னுமே சூப்பரா இருக்கும். இந்த பிரைட் ரைஸ் ரெஸ்டாரன்ட்ல கிடைக்கும் ஆனா ரெஸ்டாரன்ட்ல போய் ரெஸ்டாரன்ட்ல விட வீட்டில் செஞ்சு சாப்பிட்டீங்கன்னா அதோட டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். சுவையான இந்த மீன் பிரைட் ரைஸ் ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் அடிமையா வாங்க.மீன் எடுத்தால் எப்பவுமே ஒரே மாதிரியா மீன் குழம்பு மீன் வருவல் மீன் புட்டு அப்படின்னு செய்யாம ஒரு தடவை வித்தியாசமா இந்த மாதிரி தான் செஞ்சு பாருங்களேன் கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு பிரைட் ரைஸ் அப்படின்னு சொன்னாலே ஒரே குஷியாகிடும் அந்த மாதிரி உங்க குழந்தைகள் ஜாலியா சாப்பிடணும் அப்படின்னா இந்த மாதிரி பிரைட் ரைஸ் வீட்டிலேயே செஞ்சு கொடுங்க கடையில் வாங்கி கொடுக்குறத விட வீட்ல செஞ்சு கொடுக்கிறது ஆரோக்கியமானது. குழந்தைகளுக்கு தக்காளி சாஸ் சோயா சாஸ் இதெல்லாம் சேர்த்துக் கொடுக்கிறதுக்கு உங்களுக்கு விருப்பமில்லை அப்படின்னா வெறும் மிளகுத்தூள் மட்டும் சேர்த்து கூட இந்த பிரைட் ரைஸ் நீங்க செய்யலாம். ஆனா ரெஸ்டாரண்ட்ல கிடைக்கிற மாதிரி அப்படியே வேணும் அப்படின்னா இதெல்லாம் சேர்த்து செஞ்சுக்கோங்க. மீன் பொரிக்கிறதுக்கு வெறும் மீன் மசாலா கடைல வாங்கி சேர்த்தா மட்டும் போதும். ரொம்ப ரொம்ப ஈசியாவும் செஞ்சுடலாம் அதே சமயத்தில் டேஸ்ட்டும் சூப்பராக இருக்கும். இல்ல அப்படின்னா நீங்க எப்படி மீன் பொறிப்பிங்களோ அதே மாதிரி மசாலா எல்லாம் அரைச்சு மீன் பொரிச்சு அத வச்சு இந்த பிரைட் ரைஸ் செஞ்சுக்கோங்க. இதுல நம்ம ரொம்ப சிம்பிளா தான் பாக்க போறோம். இப்ப வாங்க இந்த சிம்பிளான மீன் ஃப்ரைடு ரைஸ் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மீன் பிரைட் ரைஸ் | Fish Fried Rice Recipe In Tamil சிக்கன் ஃபிரைடு ரைஸ் எக் ஃபிரைடு ரைஸ் மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் வெஜிடபிள் ரைஸ் ரைஸ் கோபி ஃப்ரைட் ரைஸ் நிறைய ரெசிபிஸ் சாப்டுருப்பிங்க. ஆனா ஒரு தடவை இந்த மாதிரி ஒரு சுவையான மீன் ஃப்ரைடு ரைஸ் வீட்டிலேயே செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இந்த மீன் பிரைட் ரைஸ்க்கு நீங்க எந்த மீன் வேணும்னாலும் வாங்கி அத நல்லா வறுத்து சதையை தனியா எடுத்து வச்சு எப்பவும் போல நம்ம ப்ரைட் ரைஸ் செய்ற மாதிரி செஞ்சு சாப்பிடலாம். இதுல நம்ம பாறை மீன் வெச்சி எப்படி செய்றதுன்னு பார்த்திருக்கோம் ஆனா உங்களுக்கு ஜிலேபி கட்லா அப்படின்னு எந்த மீன் பிடிக்குதோ அந்த மாதிரி பெரிய மீன் வாங்கி செஞ்சு சாப்பிடுங்க அப்பதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும் சின்ன மீன் இந்த பிரைட் ரைஸ்க்கு நல்லா இருக்காது. மீன் பொரிச்ச எண்ணெயிலேயே ஃப்ரைட் ரைஸ் செய்யும் போது டேஸ்ட் இன்னுமே சூப்பரா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1/4 கி பாறை மீன்
2 பெரிய வெங்காயம்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
1 டீஸ்பூன் மிளகு தூள்
முட்டைக்கோஸ் சிறிதளவு
1 கேரட்
1 டீஸ்பூன் சில்லி சாஸ்
3 டேபிள் ஸ்பூன் மீன் மசாலா
1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்
1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ்
4 பல் பூண்டு
2 கப் வடித்த பாசுமதி சாதம்
செய்முறை
மீனை கழுவி சுத்தம் செய்து மீன் மசாலா எலுமிச்சைச்சாறு சிறிதளவு உப்பு சேர்த்து தடவி அரைமணி நேரம் ஊற வைக்கவும். ▢ அதனை தோசை கல்லில் சேர்த்து எண்ணெய் ஊற்றி நன்றாக பொரித்து எடுத்து சதையை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் மீன் பொறித்த எண்ணெய்யை சேர்த்து நறுக்கி வைத்த பூண்டு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கிய கேரட் முட்டைக்கோஸ் சேர்த்து வதக்கவும். ▢ தக்காளி சாஸ் சோயா சாஸ் சில்லி சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும். அனைத்தும் பாதி வெந்ததும் பாஸ்மதி அரிசி சாதம் தனியாக எடுத்து வைத்துள்ள மீனின் சதை பகுதியை சேர்த்து நன்றாக கிளறவும். இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து இறக்கினால் சுவையான மீன் பிரைட் ரைஸ் தயார்.
What's Your Reaction?






