வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!
How to prepare Mango Kutchi Ice in tamil

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!
இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி ஒரு சூப்பரான எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்விதவிதமான ஐஸ் வகைகளில் வீட்டிலேயே எளிமையாக மற்றும் ஆரோக்கியமான முறையில் தயாரிக்கக்கூடிய இந்த மாம்பழ குச்சி ஐஸ் நிச்சயம் உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்க போகிறது. கோடையில் மாம்பழ சீசன் களைகட்ட தொடங்கிவிடும். -விளம்பரம்- விதவிதமான நல்ல சுவையுள்ள மாம்பழங்களை வாங்கி வைத்திருப்பவர்கள் ஒரே ஒரு மாம்பழம் கொண்டு இப்படி குச்சி ஐஸ்தயாரித்து பாருங்கள், ரொம்பவும் சுவையானதாக இருக்கும். சூப்பரான மாம்பழ குச்சி ஐஸ் எப்படி தயாரிப்பது?
மாம்பழ குச்சி ஐஸ்
தேவையான பொருட்கள்
1/2 லிட்டர் பால்
முந்திரி சிறிது
2 மாம்பழம்
3 டீ ஸ்பூன் அரிசி மாவு
100 கிராம் சீனி
பாதாம் சிறிது
செய்முறை
முதலில் பாலை நன்கு வற்ற காய்ச்சவும். அரிசி மாவுடன் சீனியை கலந்து கொண்டு சிறிது சிறிதாக கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் போட்டு கட்டி பிடிக்காமல் கலக்கவும். அல்லது மாவை தண்ணீரில் கரைத்தும் சேர்க்கலாம். 7 நிமிடங்கள்விடாமல் கிளற வேண்டும். மாவு நன்கு வெந்து, கலவை கெட்டியானதும் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி துண்டுகளை போட்டு கலக்கி இறக்கி ஆறவிடவும். இதற்கிடையேமாம்பழத்தை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கூழாக அரைக்கவும். பால் அரிசி மாவு கலவை ஆறியதும் அதில் மாம்பழ கூழ் சேர்த்து கலக்கவும். பின்னர் இதை குல்பி அச்சில் ஊற்றி பிரீசரில் வைக்கவும். சுவையான மாம்பழ குச்சி ஐஸ் தயார்
What's Your Reaction?






