சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருப்பவர்கள் எவ்வளவு பெரிய போர் வந்தாலும் அசால்ட்டா ஜெயிச்சுருவாங்களாம்...!
சாணக்கியர் தனது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தொகுத்த சாணக்கிய நீதி இன்றும் இந்திய வரலாற்றின் முக்கியமான புத்தகமாக உள்ளது. ஒருவர் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும் சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய போட்டி நிறைந்த உலகில் முன்னேறுவதற்கான உத்திகளை நாம் அனைவரும் தேடுகிறோம்.

திட்டங்கள், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் ஆற்றல் அனைத்தும் வெற்றிக்கான படிக்கட்டுகளாகும். சாணக்கியரின் அறிவுரைகள் அனைத்தும் மனித வாழ்க்கையின் சிக்கல்களைக் கடந்து வெற்றியை அடைவதற்கான வழிகளாகும். வேலையில் மற்றவர்களை விட சிறப்பாக செயல்பட்டு, அவர்களை வீழ்த்தி வெற்றி பெற சாணக்கியர் கூறும் ஐந்து வழிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மௌனமே பெரிய ஆயுதம்
சாணக்கியர் வெற்றிக்கு கூறும் முதல் அறிவுரை, மௌனத்தின் சக்தியை புரிந்து கொள்வதுதான். இது கேட்பதற்கு மிகவும் எளிமையானதாகத் தோன்றினாலும், மௌனம் என்பது ஒரு சூழ்நிலையைக் கட்டுப்படுத்தவும் மற்றவர்களை விட புத்திசாலியாக வெளிப்படுத்த பயன்படுத்தக்கூடிய ஒரு ஆயுதமாகும். அமைதியாக இருப்பதன் மூலம், நீங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கலாம்.
மௌனத்தின் மூலம் அதிகம் பேசுபவர்கள் மனதில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சரியான நேரத்தில் மட்டுமே உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும். அது மற்றவர்களை விட உங்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றும். மற்றவர்கள் சொல்வதை எப்போதும் கேளுங்கள். உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு முன் மற்றவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களின் வீண் பேச்சு உங்களை மற்றவர்கள் முன் முட்டாளாக மாற்றும்
கடின உழைப்பு மட்டுமின்றி திட்டங்களும் தேவை
சாணக்கியரின் இரண்டாம் விதி என்னவெனில் வெற்றியை அடைய கடின உழைப்பு மட்டுமல்ல, உத்திகளும் தேவை என்பதுதான். சரியான உத்திகள் இல்லையென்றால், அனைத்து கடின உழைப்பும் வீணாகிவிடும். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும். ஒரு உறுதியான மனநிலையின் மூலம் நீங்கள் விரைவில் அங்கீகாரத்தைப் பெறுவீர்கள்.
தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காமல், என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்று திட்டமிடுபவர்கள் எப்போதும் விரைவில் வெற்றியை அடைவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
யாரையும் முழுமையாக நம்பக்கூடாது
இது சாணக்கியரின் மற்றொரு முக்கியமான அறிவுரையாகும். சில நிபந்தனைகளுடன் மட்டுமே ஒருவரை நம்ப முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார். பணியிடத்தில் நம்பிக்கையைப் பயன்படுத்தி ஏமாற்றி சுரண்டுபவர்கள் இருப்பார்கள்.உங்கள் துணை நல்லவர்களாகவே இருந்தாலும் உறவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
மேலதிகாரிகள் உட்பட அனைவருக்கும் அவரவர் சொந்த குணங்கள் இருக்கும். குழுவாக செயல்படுவதற்கு வலிமையும், நம்பிக்கையும் அவசியம் என்றாலும், அவர்கள் தங்களுக்கு குழி பறிக்கிறீர்களா என்பதை எப்போதும் சரிபார்க்க வேண்டும். எனவே யாரையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது.
எதிரியை அடையாளம் காண வேண்டும்
சாணக்கியரின் நான்காம் விதி என்னவெனில், உங்களைப் போலவே உங்கள் எதிரியையும் நீங்கள் அறிந்திருந்தால், எவ்வளவு பெரிய போராட்டத்திலும் எளிதாக வென்று விடலாம் என்று சாணக்கியர் கூறுகிறார். இது தன்னையும் தன்னை சுற்றியுள்ளவர்களையும் புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறது. உங்கள் சொந்த பலங்களையும் பலவீனங்களையும் புரிந்துகொள்வதன் மூலம், நீங்கள் எப்போதும் சரியான முடிவுகளை எடுக்க முடியும். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் குறிக்கோள்கள், உத்திகள் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்வதும் முக்கியம்.
நேரம்
சாணக்கியரின் ஐந்தாம் விதி படி முடிவுகளை எடுக்கும்போது நேரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் சாணக்கியர் பேசுகிறார். எப்போது பேச வேண்டும், எப்போது செயல்பட வேண்டும், எப்போது பின்வாங்க வேண்டும், எப்போது திருப்பித் தாக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான செயல்களைச் செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்று சாணக்கியர் கூறுகிறார். 'பதறிய காரியம் சிதறும்' என்று கூறுவது போல அவசரமாக காரியங்களைச் செய்தால், நீங்கள் தோல்வியடையக்கூடும்.
What's Your Reaction?






