தினமும் காலை 1 கிளாஸ் கேரட் ஜூஸ்; அதுவும் 'இப்படி' குடிங்க.. முழு பலனும் கிடைக்கும்!

Carrot Juice Benefits : தினமும் காலை வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

Jan 24, 2025 - 21:41
 0  1
தினமும் காலை 1 கிளாஸ் கேரட் ஜூஸ்; அதுவும் 'இப்படி' குடிங்க.. முழு பலனும் கிடைக்கும்!

கேரட் ஜூஸ் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். கேரட்டில் அதிகளவு கால்சியம், புரதம் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் கண்களை ஆரோக்கியமாக வைக்கும். இத்தகைய சூழ்நிலையில், தினமும் காலை வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?ஆம், கேரட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருப்பதால், இது உடலை ஆரோக்கியமாக வைக்க பெரிதும் உதவுகிறது. சரி இப்போது வெறி வயிற்றில் கேரட் ஜூஸ் கிடைக்கும் அருகில் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Benefits of carrot juice on empty stomach in tamil

கண்களுக்கு நல்லது:

தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் கண்களுக்கு ரொம்பவே நல்லது கேரட் ஜூஸில் இருக்கும் வைட்டமின் சி கண் பார்வை மேம்படுத்தும். கண் பிரச்சனைகள் வரவே வராது. முக்கியமாக கண்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

வெறும் வயிற்றில் காலை கேரட் ஜூஸ் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கேரட் ஜூஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இது பருவக்காலத் தொற்று நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும் மற்றும் உங்களை நீண்ட நாள் ஆரோக்கியமாக வைத்திருக்கும். கேரட் ஜூஸ் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது:

சர்க்கரை நோயாளிகள் தினமும் காலை வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். இது சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும். கேரட் ஜூஸ் சர்க்கரை அளவு கட்டுப்படுத்த பெரிதும் உதவிகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் தினமும் காலை கேரட் ஜூஸ் குடிக்க தயங்க வேண்டாம்.

செரிமான அமைப்பை வலுப்படுத்தும்:

கேரட் ஜூஸில் ஏராளமான நார்ச்சத்து உள்ளதால், இது செரிமான அமைப்பை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இதனால் மலச்சிக்கல், அஜீரணம், வாயு போன்ற பிரச்சினைகள் வராது. எனவே உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால் நீங்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் உங்களது வயிறு ஆரோக்கியமாக இருக்கும்.

எடையை குறைக்கும்:

நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் தினமும் காலை வெறும் வயிற்றில் தவறாமல் கேரட் ஜூஸ் குடியுங்கள் ஏனெனில் இது உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது.

சருமத்திற்கு நல்லது:

கேரட் ஜூஸ் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், கேரட்டில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஃபிரீ ரேடிக்கல்களில் இருந்து பாதுகாக்கும். எனவே தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் உங்களது சருமம் எப்போதும் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

சுருக்கங்கள் வராது:

கேரட் ஜூஸ் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது சருமத்தில் வறட்சி மற்றும் சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது:

கேரட்டில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

குறிப்பு: கேரட் ஜூஸ் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வாரி வழங்கினாலும், உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை பிரச்னை அல்லது நோய் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகே குடிக்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow