Almonds: குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட கொடுக்கலாம்..! முழு விவரம் இதோ...
பாதாம்களில் வைட்டமின்ஸ், மினரல்ஸ், ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. ஆனால் பாதாம்களை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது பக்க விளைவுகளும் ஏற்படும். அந்த வகையில் குழந்தைகள் ஒரு நாளைக்கு எத்தனை பாதாம்களை சாப்பிடலாம்? மற்றும் எந்த நேரத்தில் பாதாம்களை சாப்பிட்டால் நல்லது என்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.
நினைவாற்றலை அதிகரிக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய நட்ஸ்களில் அதிகம் பரிந்துரைக்கப்படுவது பாதாம்கள் தான். நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் இந்த பாதாம்களினால் கிடைக்கும் முதன்மையான நன்மை என்னவென்றால், அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தும் அதன் பண்புகள் என்று கூறப்படுகிறது.
உங்கள் குழந்தைகளின் மூளை செயல்பாடு மற்றும் அறிவை மேம்படுத்த விரும்பினால் நீங்கள் அவர்களுக்கு ஒரு சிறந்த ஸ்னாக்காக பாதாம்களை கொடுக்கலாம். பாதாம்களில் வைட்டமின்ஸ், மினரல்ஸ், ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. ஆனால் பாதாம்களை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது பக்க விளைவுகளும் ஏற்படும். அந்த வகையில் குழந்தைகள் ஒரு நாளைக்கு எத்தனை பாதாம்களை சாப்பிடலாம்? மற்றும் எந்த நேரத்தில் பாதாம்களை சாப்பிட்டால் நல்லது என்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் எத்தனை பாதாம்கள் சாப்பிடலாம்?: குழந்தைகளுக்கான பாதாம் உட்கொள்ளல் குறித்த பரிந்துரை அவர்களின் வயது, உணவு தேவைகள் மற்றும் செயல்பாட்டு நிலைகளைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, பாதுகாப்பான மற்றும் நன்மை பயக்கும் அளவு என்று பார்த்தால், ஒரு நாளைக்கு 5 முதல் 10 பாதாம் வரை சாப்பிடலாம். அதேநேரம், பெரியவர்கள் என்றால் ஒரு கைப்பிடி அளவு பாதாம் (20 - 23) சாப்பிடலாம். குழந்தைகள் வளரும்போது படிப்படியாக அவர்கள் எடுத்துக் கொள்ளும் பாதாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். குறிப்பாக அவர்களுக்கு அலர்ஜி இருந்தால் நட்ஸ்களை சாப்பிட்டால் ஏதாவது எதிர்வினைகள் ஏற்படுகிறதா என்பதை கண்காணிப்பதும் அவசியம்
பாதாம்களில் வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. வைட்டமின் ஈ-ஆனது நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை வலுவாக வைக்கும் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவும் ஒரு ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். அதே நேரத்தில் மெக்னீசியம் எலும்பு வளர்ச்சி மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு முக்கியமானது. கூடுதலாக, பாதாமில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க உதவுகிறது. பாதாம்களை சாப்பிடுவதால் குழந்தைகள் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை பெறுவார்கள் மற்றும் ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளை அவர்கள் சாப்பிடும் வாய்ப்பும் குறைகிறது.
பாதாம் பருப்பை ஸ்னாக்காக எடுத்துக்கொள்ள சிறந்த நேரம்: பாதாம் பருப்புகளை சிற்றுண்டியாக சாப்பிட எது சிறந்த நேரம் என்பது குறித்து வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு நேரங்களை பரிந்துரைக்கின்றனர். காலையிலோ அல்லது மாலையிலோ பாதாம் பருப்புகளை உட்கொள்வது சிறந்த நேரமாக இருக்கலாம் என்கிறார். காலையில் இதனை சாப்பிடுவது சத்தான ஆற்றலை வழங்கக் கூடும். இருப்பினும் காலை மட்டும் மாலைக்கு இடையில் ஒரு கைப்பிடி அளவு சாப்பிடுவது மோசமானது ஒன்றும் அல்ல. பாதாம் சாப்பிடும் நேரம் குறித்து எந்த கடுமையான விதியும் இல்லை.
குழந்தைகளின் டயட்டில் பாதாம் சேர்ப்பது அவர்களுக்கு சுவையான, சத்தான உணவை கொடுக்கிறோம் என்று அர்த்தம். ஒரு நாளில் 5 முதல் 10 பாதாம் பருப்பை குழந்தைகள் உட்கொள்வது, அவர்களின் வளர்ச்சி, ஆற்றல் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு உறுதுணையாக இருக்கும். எந்தவொரு உணவையும் போலவே, மிதமான அளவில் கொடுப்பதும் முக்கியம். மேலும் இளவயது குழந்தைகளுக்கு பாதாம்களை பாதுகாப்பாக அறிமுகப்படுத்தப்படுவதை உறுதி செய்வது அவசியம்.
What's Your Reaction?