வாழை - Vaazhai

வாழை - Vaazhai

Dec 6, 2024 - 15:26
 0  7
வாழை - Vaazhai

 

                                          வாழை

 

 

 

வாழையின் நன்மைகள்: பாரம்பரிய உணவுகளில். இன்று வரை இன்றியமையாததாக இருந்து வருவது வாழை மற்றும் வாழை சார்ந்த உணவுகள். நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த வாழை. மறந்து போன நமது பாரம்பரியம் மிக்க வாழையின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

Table of Contents

·         வாழையின் நன்மைகள்

·         வாழையின் பாகங்கள்

o    வாழை இலை

o    வாழைத்தண்டு

o    வாழைப்பழம்

o    வாழைப்பூ

o    வாழைக்காய்

வாழையின் நன்மைகள்

வாழை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும். ஏதேனும் ஒரு வகையில் நமக்கு நன்மை தருகிறது. வாழை மரத்தில் உள்ள இலை, பழம், பூ, மற்றும் வாழை தண்டு என. அதனுடைய அனைத்து பாகங்களும் நமக்கு மருத்துவ குணங்களை தருகின்றன.

வாழையின் பாகங்கள்

·         வாழை இலை

·         வாழைத்தண்டு

·         வாழைப்பழம்

·         வாழைப்பூ மற்றும்

·         வாழைக்காய்

வாழை இலை

வாழையின் நன்மைகள்: வாழை இலை பச்சையம் நிறைந்தது. இதில் மெக்னீசியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இதனால் வாழை இலையில் சூடான உணவை வைத்து உண்ணும்போது அதில் இருக்கும் சத்துக்கள் நம் உடலில் சேர்கின்றன. மேலும், வாழை இலையில் இருக்கும் பாலிபீனால். நாம் உண்ணும் உணவில் இயற்கையாகவே சுவை கூடுகிறது.

 

வாழைத்தண்டு

நமது உடலில் இருக்கும் உப்பை வெளியேற்றுவதில். வாழைத்தண்டுக்கு நிகரான உணவு எதுவும் இல்லை என்பதே உண்மை. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையாவது வாழைத்தண்டை சாறாகவோ. அல்லது பொறியலாகவோ சமைத்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். காலை உணவின் நன்மைகள்

வாழைப்பழம்

அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் நிறைந்தது வாழைப்பழம் . நமது உடலில் இருக்கும் தேவையற்ற சோடியம் உப்பை நீக்கி, உடல் சோர்ந்து போகாமல் இருக்கத் தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது. மேலும், உடலில் நீர்ச்சத்து குறையும்போது இயற்கையான குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது. தினமும் காலை எழுந்தவுடன் ஒரு வாழைப்பழம், மற்றும் இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேரம் கழித்து ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.

வாழைப்பூ

வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் மருத்துவ தன்மை உடையது. ஒரு வாரத்திற்கு இரு முறையாவது வாழைப்பூவை. அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டும். நாம் உண்ணும் உணவில் சுவையை கொடுப்பதுடன் உடலுக்கு தேவையான சில மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்கிறது. இதில் உயிர்ச்சத்துக்கள் நிறைந்த வைட்டமின் ஏ, பி, சி. கால்சியம், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய தாது உப்புகள். நார்ச்சத்துக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளன.

வாழைக்காய்

 

 

 

வாழைக்காயில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால். சிறிதளவு உணவில் எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். வாழைக்காயை மசித்து சிறிதளவு உப்பு போட்டு வேகவைத்து சூப்பாகவும் அருந்தலாம். வாழைக்காய் மூட்டு வலி இருப்பவர்கள் மற்றும் உடல் பருமனானவர்கள் வாழைக்காயைத் தவிர்க்க வேண்டும்.

எண்ணற்ற சத்துக்கள் மற்றும் அல்லாமல் தொடர்ந்து இது பலருக்கு மருத்துவ பயனாக இருக்கின்றன. மற்றும் இதனுடைய பயன்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

 

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0