ரவை கார குழி பணியாரம் - Tamil Recipe

How to cook Rava kara Kuli paniyaram recipe in tamil

Dec 6, 2024 - 22:40
 0  4
ரவை கார குழி பணியாரம் - Tamil Recipe

ரவை கார குழி பணியாரம்

 

 

பருப்பு எதுவுமே சேர்க்காமல் ஒரு குழி பணியாரம் ரொம்பவும் இன்ஸ்டன்ட் ஆக செய்யக் கூடிய வகையில் அமைந்துள்ளது. பொதுவாக இட்லி மாவு பயன்படுத்தி குழி பணியாரம் காரமாக செய்து சாப்பிடுவது உண்டு. அது போலவே ரவையைக் கொண்டு செய்யப்படும் இந்த கார குழி பணியாரம் வித்தியாசமான சுவையுடன், அசத்தலான பிரேக் ஃபாஸ்ட் ஆக நிச்சயம் உங்களுக்கு இருக்கப் போகிறது. வாருங்கள் ரவை கார குழி பணியாரம் எப்படி தயாரிப்பது? என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம். ரவை கார குழிப்பணியாரம்

 

 செய்ய தேவையான பொருட்கள் :

வறுத்த ரவை – ஒரு கப்

வெங்காயம் – ஒன்று

தக்காளி – ஒன்று

பச்சை மிளகாய் – இரண்டு

 கேரட் – ஒன்று

நறுக்கிய கொத்தமல்லிதழை – சிறிதளவு

தயிர் – அரை கப்

சமையல் சோடா – 1/4 ஸ்பூன்

 உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன்

 கடுகு – அரை ஸ்பூன்

 சீரகம் – அரை ஸ்பூன்

 கருவேப்பிலை – ஒரு கொத்து

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

ரவை கார குழி பணியாரம் செய்முறை விளக்கம் :

ரவை கார குழி பணியாரம் செய்வதற்கு முதலில் தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு வறுத்த ரவையை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் தோலுரித்து பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். பொடியாக நறுக்கிய தக்காளி ஒன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். - Advertisement - பின்னர் இவற்றுடன் ரெண்டு பச்சை மிளகாய்களை பொடியாக நறுக்கி சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தழை கொஞ்சம் சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு பெரிய கேரட் ஒன்றை தோல் சீவி விட்டு துருவி சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஒன்று போல் நன்கு கலந்து விட்டு, ரவை எடுத்த அதே கப்பில் அரை கப் அளவிற்கு கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து, கெட்டியான பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். கால் கப் அளவிற்கு கொஞ்சம் போல தண்ணீர் ஊற்றி, ரவை ஊறும் அளவிற்கு பார்த்துக் கொள்ளுங்கள். இதையும் படிக்கலாமே: குளிக்கும்போது செய்யவே கூடாத மூன்று தவறுகள் ஒரு ஐந்து நிமிடம் அப்படியே ஊற விட்டுவிட்டு அதற்குள் தாளிக்க தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் சீரகம், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்து மாவுடன் சேர்த்து கலந்து விடுங்கள். இப்போது ஒரு குழி பணியாரம் சட்டியில் தேவையான அளவிற்கு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு குழியிலும் மாவை கொஞ்சம் போல ஊற்றி வர வேண்டும். ஒருபுறம் நன்கு வெந்ததும், மறுபுறம் திருப்பி போட்டு வேக விட்டு எடுத்து சுவைத்தால் அட்டகாசமான எளிமையான ரவை குழி பணியாரம் காரமாக ரெடி! இந்த பணியாரம் இட்லி, தோசைக்கு பதிலாக காலையில் கார சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் அல்லது மாலையில் டீ உடன் ஸ்நாக்ஸ் போலவும் செய்து சாப்பிடலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0