தேங்காய் துவையல் /Coconuts Thuvaiyal

பொதுவாக துவையலை சுடுகஞ்சி, ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம். துவையலில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் செய்வது தேங்காய் துவையலைத் தான். இந்த தேங்காய் துவையல் செய்வது மிகவும் சுலபம். அதோடு இந்த துவையல் வெள்ளை சாதத்துடன் சேர்த்து பிரட்டி சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். சிலருக்கு தேங்காய் துவையல் சரியாக செய்யத் தெரியாது. நீங்களும் அத்தகையவர்களுள் ஒருவரானால், இக்கட்டுரை உங்களுக்கானது.

Jan 2, 2025 - 10:59
 0  14
தேங்காய் துவையல்  /Coconuts Thuvaiyal

தேவையான பொருட்கள்: 

  •  துருவிய தேங்காய் - 1/2 கப்
  •  உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  •  பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
  • வரமிளகாய் - 2 
  •  புளி - 1 துண்டு
  •  எண்ணெய் - 1 டீஸ்பூன் 
  •  உப்பு - சுவைக்கேற்ப

    செய்முறை:
  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். 
  • பின் அதில் புளி, பெருங்காயத் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். 
  • பின்பு துருவிய தேங்காய் சேர்த்து ஈரப்பசை போகும் அளவில் பொன்னிறமாகுமாறு வறுத்து இறக்க வேண்டும்.
  • பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு, சிறிது நீர் ஊற்றி, கொரகொரவென்று அரைத்தால், தேங்காய் துவையல் தயார்.
  • குறிப்பு:
  • வேண்டுமானால், வறுக்கும் போது ஒரு டீஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
  • துவையல் எப்போதும் சற்று கெட்டியாகவும், மென்மையாக இல்லாமல் கொரகொரவென்றும் தான் இருக்க வேண்டும். எனவே அதற்கேற்ப நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.


What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.