சூப்பரான மீன் மசாலா ரெசிபி - Tamil Recipes
How to Prepare Fish fry in tamil
சூப்பரான மீன் மசாலா ரெசிபி - Tamil
Recipes
அடிக்கடி மீன் வாங்கி சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கு மசாலா தயாரிப்பது ஒரு சவாலாக இருக்கும். எப்படி மசாலா தயாரித்தாலும் எண்ணெயில் பிரிந்து விடுகிறது என்று புலம்புபவர்களுக்கு, இந்த ஒரு ரெசிபி வரப் பிரசாதமாக இருக்கப் போகிறது. கொஞ்சம் கூட எண்ணெயில் ஒட்டாமல் ஹோட்டலில் கொடுப்பது போலவே அருமையான சுவையில் எப்படி மீன் மசாலா தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
மீன் வறுக்க தேவையான மசாலா பொருட்கள் :
தனி மிளகாய் தூள் – ஒன்றரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
மிளகு, சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – 2 கொத்து
மல்லித்தழை – சிறிதளவு
சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மீன் வறுவல் செய்முறை விளக்கம் :
எந்த மீன் வகையான மீன் ஆக இருந்தாலும் அதை செதில்கள் எல்லாம் நீக்கி உள்ளிருக்கும் கழிவுகளை எல்லாம் அகற்றி நன்கு கல் உப்பு போட்டு தேய்த்து சுத்தம் செய்து ஒரு முறை மஞ்சள் கலந்த நீரில் அலசி எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் மீன் நீச்ச வாசம் அடியோடு நீங்கும். அதன் பிறகு ஒன்றரை டீஸ்பூன் அளவிற்கு தனி மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். குழம்பு மிளகாய்த் தூள் சேர்த்தால் மீன் வறுவல் சரியாக வராது. பின் இவற்றுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு மைய அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்க்க வேண்டும். இந்த மசாலாவிற்கு ஒரு கிலோ மீன் சரியாக இருக்கும். கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு மிளகு, சீரகம் இரண்டையும் சம அளவில் அரைத்த பவுடரை சேர்க்க வேண்டும். மிளகு, சீரகம் சம அளவிற்கு எடுத்து லேசாக வாணலியில் வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் அரைத்து பொடி செய்து ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ளுங்கள். ரசம், இது போன்ற மீன் வறுவல் செய்வதற்கு வசதியாக இருக்கும். - ரெண்டு கொத்து கருவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்க வேண்டும். அதே அளவிற்கு மல்லி தழை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இது மீன் வறுவலுக்கு நல்ல ஒரு வாசனையை கொடுக்கும். பின்பு கடைசியாக ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சமையல் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். எல்லா இடங்களிலும் மசாலா படும்படி நன்கு கலந்து விட்ட பின்பு அப்படியே கொண்டு போய் ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இதையும் படிக்கலாமே: வராத பணம் வர செய்யும் வெந்தயம் எப்போது மீன் வறுவல் செய்யப் போகிறீர்களோ, அப்பொழுது வெளியில் எடுத்து பிரஷ் ஆக எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். கடாயில் அதிகம் எண்ணெய் உற்றாமல் கொஞ்சம் போல எண்ணெய் ஊற்றி ஒன்றிரண்டு மீனாக போட்டு ரெண்டு நிமிடம் வேக விட்டு திருப்பி போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துப் பாருங்கள். கொஞ்சம் கூட எண்ணெயில் மசாலா பிரியாமல் லட்டு போல அப்படியே எடுக்க வரும். அதே போல இந்த மீன் வறுவல் எந்த நெடி தரும் ஃப்ளேவரும் இல்லாமல் ஹோட்டலில் கொடுப்பது போல ரொம்ப சுவையாக சரியான காரத்தோடு சூப்பராக இருக்கும். ட்ரை பண்ணி பார்த்து அசத்துங்க.
What's Your Reaction?