சாம்பியன்ஸ் டிராபி: பரிசுத்தொகையை அறிவித்த ஐ.சி.சி.. எவ்வளவு தெரியுமா..?
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பரிசுத்தொகையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

துபாய்,
நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் (19-ந் தேதி) பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த தொடருக்கான பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. அதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.19.45 கோடி பரிசுத்தொகையும். 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ. 9.72 கோடியும், அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா ரூ. 4.86 கோடியும் பரிசுத்தொகையாக கிடைக்கும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
What's Your Reaction?






