ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய இந்தியா.. போராடி தோற்ற நியூசிலாந்து! - INDIA WON ICC CHAMPIONS TROPHY
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா.

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா.
துபாயில் இன்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்தது.
252 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா நல்ல துவக்கத்தை தந்தார். விராட் கோலி ஒரு ரன்கள் எடுத்து ஏமாற்றம் தந்தாலும், ஸ்ரேயாஸ், அக்ஷர் படேல், ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி வாகை சூடியது.
இந்திய அணியின் ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்து வீசவே நியூஸிலாந்தின் நெட் ரன் ரேட் குறைந்தது. ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய நியூசி வீரர்கள் மிரடில் ஆர்டரில் ரன்ரேட் 4க்கும் குறைவாக எடுத்தது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கவர்த்தி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
What's Your Reaction?






