ஐபிஎல் 2025: ஆன்லைனில் டிக்கெட் பெறுவது எப்படி? CSK ஃபேன்ஸ் இதை நோட் பண்ணுங்க!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 சீசன், வருகின்ற மார்ச் 22-ஆம் தேதி அன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் பிரம்மாண்டமான தொடக்க ஆட்டம், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

Mar 17, 2025 - 11:03
Mar 17, 2025 - 10:36
 0  2
ஐபிஎல் 2025: ஆன்லைனில் டிக்கெட் பெறுவது எப்படி? CSK ஃபேன்ஸ் இதை நோட் பண்ணுங்க!

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மார்ச் 9-ஆம் தேதி துபாயில் நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குத் தயாராகி வரும் நிலையில், ரசிகர்கள் ஐபிஎல் 2025 குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்தியன் பிரீமியர் லீக் ஆண்டுதோறும் நடைபெறும் 20 ஓவர் போட்டியாகும். உலக அளவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் லீக் ஐபிஎல். இந்த விளையாட்டுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகள் மற்றும் வீரர்களின் ஆட்டத்தைப் பார்க்க ஆவலுடன் இருப்பதால், டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

எவ்வளவு விலையானாலும் சரி.. ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்களை பெற்று விட வேண்டும் என்றும் சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அதற்கேற்ப ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. புக் மை ஷோ டிக்கெட் பார்ட்னராக இணைந்துள்ளது. ரசிகர்கள் BookMyShow, Paytm Insider மற்றும் அதிகாரப்பூர்வ IPL வலைத்தளங்கள் மூலம் ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்கலாம். கூடுதலாக, RCB டிக்கெட் விற்பனைக்காக TicketGenie உடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஐபிஎல் அணியின் டிக்கெட் பார்ட்னர்கள்: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) பேடிஎம் இன்சைடர் மும்பை இந்தியன்ஸ் (MI) புக்மைஷோ குஜராத் டைட்டன்ஸ் (GT) பேடிஎம் இன்சைடர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) புக்மைஷோ ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) புக்மைஷோ பஞ்சாப் கிங்ஸ் (PBKS) பேடிஎம் இன்சைடர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) பேடிஎம் இன்சைடர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) புக்மைஷோ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) டிக்கெட்ஜெனி டெல்லி கேபிடல்ஸ் (DC) பேடிஎம் இன்சைடர்.

ஐபிஎல் 2025 டிக்கெட்டுகளை ஆன்லைனில் எப்படி முன்பதிவு செய்வது?: ஐபிஎல் 2025 டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்குவது ஒரு எளிய செயல்முறை.

ஸ்டெப் 1: BookMyShow, Paytm Insider அல்லது IPL அணியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழையவும்.

ஸ்டெப் 2: மேட்ச் மற்றும் போட்டி நடக்கும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். அதற்கு நீங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையை பார்வையிடலாம். அதில் உங்களுக்கு விருப்பமான போட்டியை தேர்ந்தெடுத்து, சீட் கேட்டகரியை தேர்ந்தெடுக்கலாம்.

ஸ்டெப் 3: ஜென்ரல், மிட் ரேன்ஜ், பிரீமியம் மற்றும் விஐபி என பல ஆப்ஷன்கள் இருக்கும். அதில் உங்களுக்கு விருப்பமான ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம். யுபிஐ, நெட் பேங்கிங் அல்லது பிற வாலட்களைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம். பணம் செலுத்தப்பட்டதும் முன்பதிவு விபரங்களுடன் உங்களுக்கு கன்பர்மேஷன் மெயில் அல்லது எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

ஐபிஎல் 2025 டிக்கெட் விலை: போட்டியில் பங்குபெறும் அணிகள், இடம் மற்றும் போட்டியின் நிலையை பொறுத்த டிக்கெட் விலை மாறுபடும். லீக் போட்டிகள்: ரூ.900 - ரூ.25,000 தேர்ந்தெடுக்கும் சீட்டைப் பொறுத்து மாறுபடும். பிளேஆஃப் போட்டிகள்: பிளேஆஃப் போட்டிகளின் டிக்கெட் விலை அதிக தேவையின் காரணமாக சற்று அதிகமாக இருக்கலாம்.

ஐபிஎல் 2025 அணிகளின் சொந்த மைதானங்கள்:

 சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம்,சென்னை.

மும்பை இந்தியன்ஸ்: வான்கடே ஸ்டேடியம், மும்பை

 குஜராத் டைட்டன்ஸ்: நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத்

 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ஏகானா இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ

ராஜஸ்தான் ராயல்ஸ்: சவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்ப்பூர் / பர்சபரா ஸ்டேடியம்,

குவஹாத்தி பஞ்சாப் கிங்ஸ்: ஹெச்பிசிஏ ஸ்டேடியம், தர்மஷாலா / முல்லன்பூர் கிரிக்கெட் ஸ்டேடியம், மொஹாலி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம்,

ஹைதராபாத் டெல்லி கேபிடல்ஸ்: அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி / ஏசிஏ-விடிசிஏ ஸ்டேடியம், விசாகப்பட்டினம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா

ராயல் சேலஞ்சர்ஸ்: பெங்களூரு எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு ஐபிஎல் 2025 சீசன் மிகவும் பரபரப்பான சீசனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோசடிகள் தொடர்ந்து நடப்பதால் ரசிகர்கள் அதிகாரப்பூர்வ டிக்கெட் தளங்களை பயன்படுத்தி டிக்கெட் பெறவும்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.