கிராமத்து மீன் குழம்பு; மத்தி மீன்
1. தேவையான பொருட்கள்
¼ கிலோ மத்தி மீன்
6 வெங்காயம்
2 தக்காளி
6 பல் பூண்டு
2 பச்சை மிளகாய்
1 மேஜை கரண்டி வரை மல்லி
1 தேக்கரண்டி சீரகம்
1தேக்கரண்டி மிளகு
½ தேக்கரண்டி சோம்பு
4 காய்ந்த மிளகாய்
¼ மூடி தேங்காய்
சிறிதளவுபுளி
½ தேக்கரண்டி கடுகு
¼ தேக்கரண்டி வெந்தயம்
கருவேப்பிலை
¼ தேக்கரண்டி மஞ்சள் தூள்
உப்பு
50 மில்லி எண்ணெய்
2. செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மல்லி,சீரகம், சொம்பு,காய்ந்த மிளகாயை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
பின்பு வெங்காயம், தக்காளி,தேங்காய் இவை அனைத்தும் நன்றாக வதக்கி அனைத்தையும் அரைத்து எடுக்கவும்.பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு,வெங்காயம்,கருவேப்பிலை, பச்சை மிளகாய்,பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு அதில் புளி கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.பின்பு அதில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.பிறகு அதில் மத்தி மீன் சேர்க்கவும்.ஒரு கொதி வந்ததும் அதில்
கொத்தமல்லி தூவி இறக்கவும்.
What's Your Reaction?