வாழ்க்கை தத்துவங்கள் - Life Advice Quotes in Tamil

அன்றாட வாழ்க்கை தத்துவங்கள் பற்றிய கவிதைகளின் தொகுப்பு, Collection of Best Life Advice Quotes, Life Advice Kavithai, Vaazhkai Thathuvam

Oct 4, 2024 - 18:01
Oct 4, 2024 - 18:27
 0  8
வாழ்க்கை தத்துவங்கள் - Life Advice Quotes in Tamil

அன்பை பிச்சை எடுக்க கூடாது
அக்கறையை கேட்டு வாங்க கூடாது
காதலை கெஞ்சி பெறக் கூடாது
உணர்வுகளை புரிய வைக்க கூடாது


ஒவ்வொரு முறையும் அன்பை
நிருபித்துக் கொண்டே இருக்க
முயற்சி செய்யாதீர்கள் அது
தற்கொலையை விட கேவலமானது


அன்பானவர்களுக்காக
இறங்கி போவதும் தவறில்லை
நம் அன்பு புரியாதவர்களிடம்
விலகி போவதும் தவறில்லை


எதையும் மனம் விட்டு
பேசாத வரை எல்லாம்
மன அழுத்தமே


எதையும் மறக்க முயற்சித்து
நிம்மதியை இழக்காதீர்கள்
அதை அதை அப்படியே
விட்டு விடுங்கள்
காலம் மாற்றிவிடும்


ஒரு பிரச்சனையின் ஆயுள்
பெரும்பாலும் அதை
விடப் பெரும் பிரச்சனை
வரும் வரை தான்


அடுத்தவன் என்ன நினைப்பான்னு
வாழ ஆரம்பிச்சா அப்பவே உன்
நிம்மதி உன்ன விட்டு போயிடும்


தூக்கிவிட்ட வரை மறக்காதே
தூக்கி போட்ட வரை
கனவில் கூட நினைக்காதே


ஒரு பிரச்சனை என்றால்
சூழ்நிலை மட்டும் நினைக்காதீர்கள்
சில நாய் வேஷமிட்ட நரிகளின்
சூழ்ச்சியாக கூட இருக்கலாம்
என்பதை மறக்காதீர்கள்


நமக்கு வேண்டியது எதுவும்
நம்மள விட்டு போகாது
நம்மள விட்டு போய்ருச்சுனா
அது நமக்கானது இல்ல


இருக்கது ஒரு வாழ்க்கை
அத ஊருக்காகவும்
உறவுக்காகவும் வாழாம
நமக்காக வாழனும்
நமக்கு பிடிச்ச மாதிரி


எல்லாருக்கும் பிடிச்ச
மாதிரி வாழ முடியாது
யாருக்கும் பிடிக்கலேனும்
சாக முடியாது


முகத்தை மூடினாலும்
மனதைத் திறந்து வை
நல்லெண்ணெம் நுழைவதற்கு


நீங்கள் அனுபவித்தால்
அது உங்கள் அறிவு
பிறரையும் அனுபவிக்கச்
செய்தால் அது
உங்கள் நற்பண்பு


ஒருவரை மன்னித்துவிடும்
அளவிற்கு நல்லவராக
இருங்கள் ஆனால் அவரை
மீண்டும் நம்புமளவிற்கு
முட்டாளாக இருக்காதீர்கள்


முகத்தை மூடினாலும்
மனதைத் திறந்து வை
நல்லெண்ணெம் நுழைவதற்கு


அழைப்பு வரும் வரை
உழைப்பு அவசியம்


ஆயிரம் உறவுகளால்
தர முடியாத பலத்தை
ஒரு அவமானம் தரும்


இறைவனுக்கு கொடுக்க நினைப்பதை
இல்லாதவர்களுக்கு கொடுங்கள்
ஏனென்றால் கடவுள் யாரிடமும்
கையேந்தி யாசகம் கேட்பதில்லை


உனக்கென்று ஒரு தன்மானம்
திமிர் இருக்கனும் அதை
யாருக்காகவும் எப்போதும்
விட்டுக்கொடுக்காதே


அவ்வப்போது தொலைதூரப் பயணம்
சென்று அங்கேயே தொலைத்து
விட்டு வாருங்கள் உங்களைத்
தொல்லை செய்யும் தொல்லைகளை


சிரிப்பை இயல்பாக்கி
கொள்ளுங்கள் மனதில்
கவலை இருப்பினும்
அகம் போல முகமும்
அழகு பெறும்


எதையும் மனம் விட்டு
பேசாத வரை எல்லாம்
மன அழுத்தமே


தேடிப் போகாதே
அலட்சியப்படுத்தப் படுவாய்
எதிர்பார்க்காதே
ஏமாற்றப் படுவாய்


நிரூபித்து கொண்டே
இருப்பததை விட பேசாமல்
இருப்பது நல்லது


பணம் - இருப்பவனை
தூங்க விடாது
பணம் - இல்லாதவனை
வாழ விடாது


எதிலும் அளவோடு
இருந்தால் அசிங்கப்பட
தேவையில்லை


கவலைப்படுவதால் மனதின் ஆற்றலும்
உயிரின் சக்தியும் வீணாகிறது
எதிலும் அளவறிந்து வாழப்
பழகினால் சிக்கலுக்கு இடமிருக்காது


எதையும் சாதிக்க விரும்பும்
மனிதனுக்கு நிதானம் தான்
அற்புதமான ஆயுதமே தவிர
கோபம் இல்லை


அதிகம் பொறுமையுடன்
நடக்காதே பைத்தியம்
ஆகும் வரை
விட மாட்டார்கள்


எவ்வளவு கஷ்டம் வந்தாலும்
வெளிய காட்டக்கூடாது
ஏன்னா நம்மைப் பார்த்து
சந்தோஷப்பட நாலு
பேரு இருக்காங்க


எண்ணங்களில் நீ
அழகா இரு உன்
தோற்றம் எப்படி
இருந்தாலும்
கவலைக் கொள்ளாதே


கோபத்தில் கண்டதை
தூக்கிப் போடுவதைவிட
அந்த கோபத்தையே
தூக்கிப் போடுங்கள்


ஓவியத்திற்கு அழகு
சேர்ப்பது பல வண்ணங்கள்
அதுபோல தான் நம்
மனத்திற்கு அழகு
சேர்ப்பது நல்லெண்ணங்கள்


நிறம் மாறும்
பச்சோந்திகளை விட
அடிக்கடி தன் மனம்
மாறும் மனிதர்களிடமே
அதிக கவனம் தேவை


நண்பர்களைப் பற்றி
நல்லது பேசு
விரோதியைப் பற்றி
ஒன்றும் பேசாதே


விக்கலுக்கு பயந்தால்
வயிறு நிறையாது
சிக்கலுக்கு பயந்தால்
வாழ்க்கை மகிழாது


அடுத்த நிமிடம் நிச்சயம்
இல்லாத வாழ்க்கை
முடிந்தவரை யாரையும்
காயப்படுத்தாமல் வாழ
கற்றுக் கொள்ளுங்கள்


வாழ்க்கையில் நம்பிக்கை
இருக்கணும் ஆனால்
பிறரை நம்பித்தான்
இருக்கக்கூடாது


கடந்து போக கற்றுக்
கொள் மாயமான இவ்வுலகில்
காயங்களுக்கும் நியாயங்கள்
தேடிக் கொண்டிருந்தால்
நிம்மதி இருக்காது


சகித்துக்கொண்டு
வாழ்வதல்ல வாழ்க்கை
சலிக்காமல்
வாழ்வதே வாழ்க்கை


பிடித்ததை எடுத்து
பிடிக்காததை விடுத்து
மகிழ்ச்சியாக இரு


நீங்கள் அனுபவித்தால்
அது உங்கள் அறிவு
பிறரையும் அனுபவிக்கச்
செய்தால் அது
உங்கள் நற்பண்பு


மகிழ்ச்சி எப்போதும்
உங்கள் கையில்
தான் உள்ளது


நீ செய்யும்
ஒவ்வொரு செயலும்
உன்னை பிற்காலத்தில்
யோசிக்க வைக்கும்


பொறுமை மிக அவசியம்
வார்த்தையில்
வாழ்க்கையில்
வாகனத்தில்


தகுதிக்கு மீறி ஆசைப்படுவது
தவறில்லை ஆனால்
ஆசைப்பட்ட பிறகு அதை
அடைய உன் தகுதியை
வளர்த்து கொள்ளாமல்
இருப்பதே தவறு


வேடிக்கை பார்ப்பவர்கள்
என்ன நினைப்பார்கள் என்று
நினைப்பது மிகப்பெரிய
முட்டாள்தனம் ஏனென்றால்
அவர்களால் நமக்கு
எந்த பயனும் இல்லை


பக்குவம் என்பது யாதெனில்
புரிந்து கொள்வதோ
புரிய வைப்பதோ இல்லை
வாயை மூடிக்கொண்டு
தன்னுடைய வேலையை பார்ப்பதே


யாரிடமிருந்தும் எதையும்
எதிர்பார்க்காத அது
உன்னுடைய மகிழ்ச்சியை
அழித்துவிடும்


கடலில் கல் எறிவதால்
கடலுக்கு வலிப்பது இல்லை
கல் தான் காணாமல் போகும்
அதே போல விமர்சனங்கள்
கல்லாக இருக்கட்டும்
நீங்கள் கடலாக இருங்கள்


தேவையில்லாதவர்களிடமும்
தகுதியில்லாதவர்களிடமும்
நாம் யார் என்பதை
நிரூபிக்காமல் இருப்பதே
சிறந்த புத்திசாலித்தனம்


எல்லாருக்கும் பிடிச்ச
மாதிரி வாழ முடியாது
யாருக்கும் பிடிக்கலேனும்
சாக முடியாது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow