மசாலா பாஸ்தா செய்முறை – Tamil Recipes
Tamil Recipes

மசாலா பாஸ்தா செய்முறை – Tamil Recipes
வீட்டில் சமைக்கக்கூடிய ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் விரும்பி சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டு தான் சமைப்பார்கள். அப்படி வீட்டில் இருக்கக் கூடிய குழந்தைகள் விரும்பி சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய வீட்டில் வாரத்தில் ஒருமுறையாவது பாஸ்தாவை செய்து கொடுப்பார்கள். பாஸ்தாவை செய்வதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் ஆரோக்கியமான முறையில் விரைவிலேயே செய்யக்கூடிய ருசியான அதுவும் குக்கரில் செய்யக்கூடிய ஒரு பாஸ்தாவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். வளரும் குழந்தைகளாக இருந்தாலும் சரி வீட்டில் இருக்கக்கூடிய முதியவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய உணவில் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் என்பது மேம்படும். காய்கறிகளை தனியாக நாம் செய்து கொடுக்கும் பொழுது அதை அவர்கள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய பொருட்களில் காய்கறிகளை சேர்த்து நாம் தரும் பொழுது அந்த காய்கறிகளை ஒதுக்காமல் நன்றாக சாப்பிடுவார்கள். அந்த வகையில் தான் காய்கறிகளை போட்டு மசாலா பாஸ்தா செய்யும் முறையைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
கேரட் நறுக்கியது – 1/2 கப்
பீன்ஸ் நறுக்கியது – 1/2 கப்
குடைமிளகாய் நறுக்கியது – 1/2 கப்
தக்காளி – 2
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
பாஸ்தா – 3 கப்
தண்ணீர் – 3 கப்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை முதலில் அடுப்பில் குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். குக்கர் நன்றாக சூடானதும் அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்க்க வேண்டும். இதில் நான்கு பச்சை மிளகாயை கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கி விடுங்கள். பிறகு பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கொடைமிளகாய் போன்றவற்றை சேர்க்க வேண்டும். இவற்றை நன்றாக வதக்கிய பிறகு இதனுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இரண்டு தக்காளியும் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து மூன்று நிமிடம் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் மிளகாய் தூளை சேர்த்து மிளகாய் தூளின் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு இதில் பாஸ்தாவையும் தண்ணீரையும் ஊற்றி ஒரு முறை நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி விடுங்கள். இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். குக்கர் விசில் போன பிறகு குக்கர் மூடியை திறந்து அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி தலையை தூவி ஒரு முறை நன்றாக கிளறி இறக்கி வைத்தால் சுவையான பாஸ்தா தயாராகிவிடும். ….
What's Your Reaction?






