தினமும் 2000 ரூபாய்க்கு குறையாமல் வருமானம் தரக்கூடிய தொழில்..!
நாம் அனைவருக்குமே இக்காலத்தில் பணத்தேவை என்பது அதிகமாகவே இருக்கிறது. நாம் வேலைக்கு சென்று இரவு பகல் பாராமல் உழைத்தாலும், வரவுக்கு மிஞ்சிய செலவாகத்தான் இருக்கிறது. இக்காலத்தில் பணத்தேவை அதிகமாக இருக்கும்போது எதிர்காலத்தில் சொல்லவே வேண்டாம். வரவு ஒரு பங்காக இருந்தால் செலவு 10 மடங்காக இருக்கும். எனவே, இதனை கருத்தில் கொண்டே அனைவரும் இக்காலம் மற்றும் எதிர்காலத்திற்கும் அதிக டிமாண்ட் உள்ள சுயதொழிலை பார்த்து செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் சூப்பரான சுயதொழில் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
1. Best Business Ideas in Tamil:
இப்போது, அதிகமான இடங்களில் பயன்படுவது xerox தான். ஒவ்வொரு இடத்திலும் xerox -இன் தேவை எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கு சொல்ல தேவையில்லை. ஏனெற்றால் உங்களுக்கே தெரியும் xerox எந்த அளவுக்கு அதிகமாக பயன்படுகிறது என்று.. எனவே இதனையே நாம் தொழிலாக எடுத்து செய்யும்போது நல்ல வருமானம் பெறலாம். ஓகே வாருங்கள் Xerox Shop தொழில் தொடங்குவது எப்படி என்பதை பார்க்கலாம்.
2. தேவையான முதலீடு:

Xerox Shop தொழில் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான முதலீடு தேவைப்படும்.
3. தேவையான பொருட்கள்:
- Xerox Machine
- Printer
- Computer
- Stationary Items
- Paper
4. தொழில் தொடங்கும் முறை:

Xerox Shop தொழில் தொடங்குவதற்கு அதிக மக்கள் புழக்கம் உள்ள இடத்தை தேர்வு செய்து கடையை திறக்க வேண்டும். அப்போது தான் தொழில் நன்கு வளர்ச்சி அடையும்.
அடுத்து, Xerox Machine, Printer, Computer, Stationary Items போன்ற பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.
முக்கியமாக, School, College, Office, Bus Stop போன்ற இடங்களில் கடை வைத்தால் நல்ல வருமானம் பெறலாம்.
5. கிடைக்கக்கூடிய வருமானம்:
உதாரணமாக, 1 Xerox Copy 2 ரூபாய் என கணக்கில் வைத்து கொள்வோம். எனவே, ஒரு நாளைக்கு 500 முதல் வரை 1000 Xerox எடுக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு நாளைக்கு 1000 முதல் 2000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
குறிப்பு: நீங்கள் செய்யும் தொழிலின் அளவை பொறுத்து முதலீடு மற்றும் வருமானம் மாறுபடும்.
What's Your Reaction?






