5 லட்சத்திற்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் - ABHA CARD

ABHA card Uses and how to apply and download

Nov 16, 2024 - 23:08
 0  32
5 லட்சத்திற்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் - ABHA CARD

ABHA Card: 5 லட்சத்திற்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம்...உங்களுக்கு வேணுமா?

 

Ayushman Bharat Health Card: நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் மருத்துவம் எளிதாக கிடைத்திட மத்தி அரசு 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ காப்பீட்டை மக்களுக்கு வழங்குகிறது. இதை பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

 

நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாக இருப்பது மருத்துவம் சார்ந்த செலவு. இன்றைய காலங்களில் மருத்துவ செலவு என்பது மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில், இதற்காக அரசு பல இலவசங்கள் மற்றும் நன்மை திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், மருத்துவ செலவுகளுக்கு மருத்துவ காப்பீட்டை அரசு வழங்கி வருகிறது. இந்த காப்பீட்டு திட்டம் என்ன என்பது குறித்த தகவல்களை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.

 

ஆயுஷ்மான் பாரத் திட்டம்
ஆயுஷ் மான் பாரத் யோஜனா மருத்துவ சேவைக்கான திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்துக்காக ஆண்டுக்கு 8000 கோடி ரூபாய்க்கும் மேலாக மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்காக மத்திய அரசால் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் நன்மைகள்
மத்திய அரசு வழங்கும் மருத்துவ காப்பீடான இந்த ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 5 லட்ச ரூபாய் வரைக்கும் மருத்துவ சேவைகளைப் பெற முடியும். அதேபோல், தமிழகத்தின் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் ஆயுஷ்மான திட்டமும் இணைத்து செயல்படுத்தப்படுகிறது. இதில், 1354 சிகிச்சை திட்டங்கள் மற்றும் பல நவீன சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது. அத்துடன் 17000 மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா முழுவதிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளிலும் 600க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இந்த சேவையைப் பெற முடியும். பல் சம்பந்தப்பட்ட பிரச்சினை, மன ஆரோக்கியம் தொடங்கி இதய அறுவை சிகிச்சைகள் வரை பல்வேறு நவீன சிகிச்சைகளையும் இந்த திட்டத்தின்கீழ் பெற முடியும்.



எப்படி விண்ணபிப்பது?
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா மருத்துவ காப்பீட்டு அட்டைக்கு விண்ணபிப்பத்ற்கான வழிமுறை

முதலில் healthid.ndhm.gov.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

தொடர்ந்து அதில் கொடுக்கப்பட்டுள்ள create ABHA number என்று இருக்கும். அந்த எண்ணை பெறுவதற்கு நீங்கள் உங்களுடைய ஆதார் எண் அல்லது டிரைவிங் லைசன்ஸை ஆதாரமாகக் கொடுக்கலாம்.

ஆதார் எண்ணை வைத்து உள் நுழையும்போது உங்களுடைய ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இந்த எண்ணை பதிவிட்டு உள்நுழைய வேண்டும்.

பின்னர் உங்களுக்கான மருத்துவ காப்பீட்டு abha அட்டை காண்பிக்கப்படும். அத்துடன் உங்களுக்கான மத்திய அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் ஹெல்த் கார்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதன்மூலம் மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனடையலாம்.

 

என்ன பலன்கள்?

* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயன் பெறக்கூடியவர்கள், பல்வேறு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

* Ayushman Bharat Health Account Card (ABHA அட்டை) இருந்தால் பணமில்லாமல் சிகிச்சை பலன்களை பெற முடியும்.

* முக்கியமாக பட்டியலிடப்பட்ட மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை இலவசமாக மருத்துவ பலன்களை பெறலாம்.

* பயனாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 நாட்கள் வரையிலான செலவுகள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

பதிவிறக்கம் செய்வது எப்படி?

pmjay.gov.in என்ற முகவரியில் ஆயுஷ்மான் பாரத் அட்டையை (Ayushman Bharat Health) download செய்யலாம்.

* அதில், ’Download Ayushman Card’ என்ற பட்டனை Click செய்து Aadhar எண் மற்றும் OTP -யை உள்ளிட்ட வேண்டும்.

 

 

 பின்பு, உங்களது ஆயுஷ்மான் கார்டின் டிஜிட்டல் நகலை சரிபார்த்து download செய்து கொள்ளுங்கள். அதனை நீங்கள் Print out எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.     

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow