உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு லட்டு.., எப்படி செய்வது?

Apr 2, 2025 - 15:33
 0  0
உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு லட்டு.., எப்படி செய்வது?
Prep Time  min
Cook Time  min
Serving
Difficulty Easy

பெரும்பாலோருக்கும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.

உடல் எடையை அதிகரிக்க அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உள்ளது.

அந்தவகையில், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு லட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Directions

1. தேவையான பொருட்கள்
  • கொள்ளு- 1 கப்
  • கருப்பு உளுந்து- ½ கப்
  • வேர்க்கடலை- 4 ஸ்பூன்
  • எள்ளு- 2 ஸ்பூன்
  • வெல்லம்- 3
  • ஏலக்காய்- 2
  • நெய்- 2 ஸ்பூன்
2. செய்முறை

முதலில் கொள்ளை கடாயில் போட்டு நன்றாக வாசம் வரும் வரை சிவக்க வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின் அதே கடாயில் கருப்பு உளுந்தை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து வேர்க்கடலை, எள், ஏலக்காயை வறுத்துக் கொள்ளுங்கள்.

வறுத்த அனைத்துப் பொருட்களையும் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்து வைத்த பொடியுடன், நன்றாக பொடி செய்யப்பட்ட வெல்லத்தை போட்டு, நெய் ஊற்றி நன்றாக பிசைந்துக்கொள்ளவும்.

பின் இதனை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி லட்டு பிடித்துக்கொள்ளுங்கள்.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.