பா.ரஞ்சித்தின் அடுத்த படைப்பு வேட்டுவம்.. கதைக் களம் என்ன தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா ரஞ்சித், அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, தங்கலான் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார். இவர் இயக்குநராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளராக பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, பொம்மை நாயகி போன்ற படத்தை தயாரித்துள்ளார். தற்போது இவர் வேட்டுவம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

Mar 31, 2025 - 09:25
 0  1
பா.ரஞ்சித்தின் அடுத்த படைப்பு வேட்டுவம்.. கதைக் களம் என்ன தெரியுமா?

பல வெற்றி திரைப்படத்தை கொடுத்த இயக்குநர் பா ரஞ்சித்தின் இயக்கத்தில் கடந்த ஆண்டு, தங்கலான் திரைப்படம் வெளியானது. இதில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 'தங்கலான்' படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. இந்த படத்தில், கோலார் தங்கவயல் எப்படி உருவானது. அதன் பின்னணியில் யார் இருந்தார்கள், தங்க வயலை கண்டுபிடிக்கத் தலித் மக்கள் எந்த அளவு தங்கள் ரத்தத்தையும், வேர்வையும் சிந்தி உழைப்பை கொடுத்தார்கள் என்பதை விரிவாகவும், அதே சமயம் கற்பனை கலந்த கதையாகவும் கொடுத்திருந்தார் இயக்குநர் பா. ரஞ்சித். இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. தமிழை தவிர்த்து இந்தியிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

வேட்டுவம்:தங்கலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித், 'பர்சி முண்டா' என்ற இந்திப் படம் இயக்கவுள்ளார் என்றும் சர்பட்டா பரம்பரை 2 இயக்கவுள்ளார் என பல செய்திகள் இணையத்தில் வெளியானது. ஆனால், இந்த இரண்டு படங்களையுமே பா.ரஞ்சித் இயக்காமல், வேட்டுவம் என்ற படத்தினை அவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தினேஷ் நாயகனாகவும், ஆர்யா வில்லனாக கமிட்டாகி உள்ளார். அட்டகத்தி படத்தின் மூலம் தினேஷை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் பா.ரஞ்சித் தான். அந்த படத்திற்கு தினேஷ் மீண்டும் பா.ரஞ்சித்தின் படத்தில் இணைந்துள்ளார்.

படப்பிடிப்பு தொடங்கியது: இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2022 ஆம் ஆண்டு சர்வதேச கான் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட நிலையில், இன்று இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் காரைக்குடியில் தொடங்கி உள்ளன. இப்படத்தின் இயக்குநர் பா ரஞ்சித் கோல்டன் ரேயோம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக் உள்ளது. மேலும், பகத் பாசில்,அசோக் செல்வன் ஆகியோர் கமிட்டாகி உள்ளனர். அதேபோல, ஷோபிதா துலிபாலா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த் அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. நடிகை ஷோபிதா துலிபாலா, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.