வீட்டில் கொத்து கொத்தாய் வேர்க்கடலை சாகுபடி செய்வதற்கான வழிகள்

Ways to grow cluster peanuts at home

Feb 24, 2025 - 14:44
 0  1
வீட்டில் கொத்து கொத்தாய் வேர்க்கடலை சாகுபடி செய்வதற்கான வழிகள்

வீட்டில் கொத்து கொத்தாய் வேர்க்கடலை சாகுபடி செய்வதற்கான வழிகள்

வீடு, மாடி தோட்டத்தில் கொத்து கொத்தாய் வேர்க்கடலை வளர்ப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். வேர்க்கடலையானது 90 நாட்களில்

வளரக்கூடிய பயிர் ஆகும். நோய் தாக்குதல் இன்றி வேர்க்கடலை சாகுபடி செய்வது எளிது.

 

நிலக்கடலை, மணிலா, கடலைக்காய், மலாட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படும் வேர்க்கடலையை வீடு, மாடி தோட்டத்தில் வளர்ப்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். எல்லா பருவங்களிலும் வளரக்கூடிய வேர்க்கடலை விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடிய பயிர் ஆகும். இதை 90 முதல் 100 நாட்களில் சாகுபடி செய்து விற்பனைக்கு கொண்டு செல்லலாம். 10-15 வருடங்களுக்கு முன்பு ஒரு படி வேர்க்கடலை 20 ரூபாய்க்கு சந்தைகளில் கிடைக்கும். இப்போது கால் படி வேர்க்கடலை 50 ரூபாய்க்கு விற்கின்றனர். ஒரு முறை வேர்க்கடலை வளர்ப்பு தெரிந்து கொண்டால் நீங்கள் வெளியே காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. வேர்க்கடலையை அவித்து சாப்பிடலாம், எண்ணெய் எடுக்கலாம், வறுத்து சாப்பிடலாம், சட்னி அரைத்து தொட்டு சாப்பிடலாம். இப்படி வேர்க்கடலையை நமது உணவுமுறையில் எடுத்துக்கொள்ளலாம்.

வேர்க்கடலை வளர்ப்பு

எந்த ஒரு பயிர் வளர்ப்புக்கும் மண் கலவை மிக முக்கியம். வேர்க்கடலை சாகுபடி செய்வதவற்கு செம்மண், ஆட்டு எரு, கோகோபீட், மாட்டு சாணம், சில வகையான உரம் தேவைப்படும். செம்மண் 40 விழுக்காடு, கோகோபீட் 40 விழுக்காடு, மீதமுள்ள ஆட்டு எரு, மாட்டு சாணம், உரங்கள் 20 விழுக்காடு அளவில் போதுமானது. பயன்படுத்தும் மண் இறுக்கமாக இருக்க கூடாது. வேர்க்கடலை வளர்ப்புக்கு 15*15 வட்ட வடிவில் மண் தொட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போதெல்லாம் க்ரோ பேக் பயன்படுத்துகின்றனர்.

வேர்க்கடலை சாகுபடி

தொட்டியில் மண் கலவை நிரப்பிய பிறகு கடைகளில் கிடைக்கும் பச்சை நிலக்கடலை அல்லது முத்தலான வேர்க்கடலையை மண்ணிற்குள் 2 அங்குலத்தில் வைத்து தண்ணீர் ஊற்றவு. ஒவ்வொரு கடலைக்கும் இடையே 8 செ.மீ இடைவெளி விடுங்கள். தரமான வேர்க்கடலை வாங்கி பயன்படுத்தவும். 6-8 நாட்களுக்குள் வேர்க்கடலையில் இருந்து சின்னதாக இலை முளைக்கும். சில சமயங்களில் முளைவிடுவதற்கு 10 நாட்கள் கூட எடுக்கலாம். ஒவ்வொரு வேர்க்கடலை செடியும் சராசரியாக 18 அங்குலம் வளரக்கூடியது.

மேலும் படிங்கமாடி தோட்டத்தில் அமோகமான வெண்டை விளைச்சல் பெறுவதற்கான வழிகள்

வேர்க்கடலை வளர்க்கும் முறை

நாம் மாட்டு சாணம் பயன்படுத்தி இருப்பதால் தேவையற்ற சின்ன சின்ன செடிகள் வேர்க்கடலையை சுற்றி வளரும். இவற்றை அவ்வப்போது வெட்டி விடுங்கள். ஏனெனில் இவை வேர்க்கடலை செடிக்கு கிடைக்கும் முழு சத்துகளை தடுக்கும். 30 நாட்களில் செடிகளில் மஞ்சள் நிறத்தில் பூ பூக்கும். பூ வந்த பிறகே நிலக்கடலை வளர ஆரம்பிக்கும். இப்போது நீங்கள் மீண்டும் மண் கலவை தயாரித்து மஞ்சள் நிற பூவை சுற்றி நிரப்ப வேண்டும். மண் இறுக்கமாக இருந்தால் வேர்க்கடலை வளராது. எனவே எப்போது மண் ஈரப்பதமாக இருப்பது அவசியம். கடலை கொத்து கொத்தாக கிடைக்க கால்சியம் உள்ள உரம் பயன்படுத்துங்கள். இதில் பெரியளவு பூச்சி தாக்குதல் வராது. கடும் குளிராக இருந்தால் வேர்க்கடலை சாகுபடி தவிர்க்கவும்.

 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0