தளதளன்னு புதினா செடி வளர வளர என்ன செய்யணுமுன்னு தெரியுமா.?
நம்முடைய வீடுகளில் அதிகமாக வளர்ப்பது பூச்செடிகள் தான். காய்கறிகளை கடையில் தான் வாங்கி வருகிறார்கள். கடையில் வாங்கும் காய்கறிகள் ஆர்கானிக் ஆக இருக்காது. அதில் செயற்கையான உரங்கள் போடப்பட்டிருக்கும். அதிலும் நாம் சமைக்கும் உணவுகள் ருசியாகவும், வாசனையாகவும் இருப்பதற்கு புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலையை பயன்படுத்துவோம்.
1. மாடித் தோட்டம்:
நம்முடைய வீடுகளில் அதிகமாக வளர்ப்பது பூச்செடிகள் தான். காய்கறிகளை கடையில் தான் வாங்கி வருகிறார்கள். கடையில் வாங்கும் காய்கறிகள் ஆர்கானிக் ஆக இருக்காது. அதில் செயற்கையான உரங்கள் போடப்பட்டிருக்கும். அதிலும் நாம் சமைக்கும் உணவுகள் ருசியாகவும், வாசனையாகவும் இருப்பதற்கு புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலையை பயன்படுத்துவோம்.
இந்த கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா போன்றவை வாங்கி வந்த 3 நாட்களிலே வீணாகி விடும். அதனால் இதனை வீட்டிலேயே வளர்த்தால் நமக்கு தேவைப்படும் போது பறித்து கொள்ளலாம். அதனால் இந்த பதிவில் கொத்தமல்லி செடி நன்றாக வளருவதற்கு என்ன செய்யலாம் என்று அறிந்து கொள்வோம்.
2. சூரிய ஒளி:

புதினா செடி வளருவதற்கு சூரிய ஒளி ரொம்ப முக்கியமானது, ஏனென்றால் சூரிய ஒளி இருந்தால் தான் அவை நன்றாக வளரும். சூரிய ஒளி வெளிச்சம் படும் இடத்திலாவது செடியை வளர்க்க வேண்டும். முக்கியமாக நிழல் உள்ள இடத்தில் வைக்க கூடாது.
தினமும் தண்ணீர் ஊற்றுவது அவசியமானது, அதனால் தினமும் தண்ணீர் ஊற்றுங்கள்.
3. மண்:

புதினா செடி வளருவதற்கு உகந்தவையாக இருப்பது மண் தான். இந்த மண் ஆனது செம்மண்ணாக இருப்பது நல்லது. அப்படி செம்மண் இல்லையென்றால் தேங்காய் நார் கழிவுகளை சேர்க்க வேண்டும். அதன் பிறகு செடியை நட்டால் செடி நன்றாக வளரும்.
4. உரம்:
புதினா செடியில் இலைகள் அதிகமாக காய்க்க உரம் கொடுப்பது அவசியமானது. மாட்டு சாணம் உரத்தை கொடுக்க வேண்டும், இல்லையென்றால் புளித்த மோரை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். இப்படி ஊற்றுவதால் செடிகளானது செழிப்பாக வளரும்.
15 நாட்களுக்கு ஒரு முறை மண்புழு உரத்தை கொடுக்கலாம். இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை மட்டும் தொடர்ந்து கொடுக்க வேண்டும்
5. வேர் விட:

புதினா செடியின் சின்ன சின்ன கிளைகளை எடுத்து கொள்ளவும். இதனை ஒரு சின் பாத்திரத்தில் தண்ணீர்ஊற்றி கிளையின் அடிப்பகுதியை வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து பார்த்தால் இந்த செடியிலிருந்து வேர்கள் வந்திருக்கும். இதனை பெரிய grow bag செடி அல்லது வெளிப்பகுதியில் வளர்க்கலாம்.
What's Your Reaction?






